Advertisment

மேனியை மெருகேற்றும் குப்பைமேனியின் பயன்கள்!

உடலில் வெப்பம் காரணமாக ஏற்படுகின்ற பெரும்பாலான நோய்களை போக்கும் ஆற்றல் குப்பைமேனிக்கு உள்ளது. மேனி பளபளப்பிற்கு குப்பை மேனியை விட வேறு மருந்து இல்லவே இல்லை என்று சொல்லுமளவுக்கு நற்பலன்களை கொடுக்கும் வல்லமையை குப்பைமேனி பெற்றுள்ளது. தொற்று நோய் தாக்குதலில் இருந்து உடலை காக்கும் அருமருந்தாக குப்பை மேனி இருந்து வருகின்றது. குப்பைமேனி சாற்றை வாரத்தில் இருண்டு முறை அருந்திவந்தால் உடலில் உள்ள அதிகப்படியான சக்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் அதன் இலைகளை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதைக்கி புண்களில் மீது கட்டிவர நாள்பட்ட புண்கள் கூட உடனே மறைய ஆரம்பித்துவிடும்.

Advertisment

sd

மேலும், இரும்பலை கட்டுப்படுத்தவும், தலைவலி, மூட்டுவலி, ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுக்கும் குப்பைமேனி இலைகள் பயன்படுகின்றன. வெந்நீரில் குப்பைமேனி இலைகளை போட்டு மூன்று நாட்கள் தொடர்ந்து குளித்து வந்தால் உடலில் உள்ள புண்கள் மறையும். குப்பேனியில் இருந்து 7 நாட்கள் சாறு எடுத்து குடித்துவந்தால் குடலில் உள்ள புழுக்கள் இறந்துவிடும். மிக சிறந்த மலமிளக்கியாகவும் குப்பைமேனி பயன்படுகின்றது. ஒற்றை தலைவலி உடையவர்கள் உப்புடன் குப்பைமேனியை அரைத்து பத்து போட்டுவந்தால் தலைவலி குறைந்து நிம்மதி ஏற்படும். மூட்டுவலி உள்ள பகுதிகளில் விளக்கெண்ணெய் உடன் கலந்து குப்பைமேனியை அரைத்து தடவி வர எவ்வளவு பெரிய வலியையும் காணாமல் செய்யும் ஆற்றல் குப்பைமேனிக்கு உண்டு.

Advertisment
medicine
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe