Advertisment

“தக்காளி சாஸை சாப்பிட்டால் ஆபத்து?” - எச்சரிக்கும் மருத்துவர் அருணாச்சலம்

tomato sauce food health tips doctor interview

Advertisment

'நக்கீரன் நலம்' யூ-டியூப் சேனலுக்கு மருத்துவர் அருணாச்சலம் நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "நமது உடலுக்கு ஒத்துக் கொள்ளாதப் பொருளே ஒவ்வாமை என்போம். அதை அலர்ஜி என்றும் சொல்கிறோம். அதனால் ஏற்படுகிற அரிப்பு ரியாக்ஷனை மெடிக்கல் டெர்மில் ஹர்டிக் அரியா என்போம். நேற்று வரைக்கும் சாப்பிட்டவர்களுக்கு, உபயோகித்த ஒரு பொருளுக்கோ அது இன்னைக்கு ஏற்படுகிறது தான் அலர்ஜி. ஒவ்வாமை எதனால் ஏற்படுகிறது என்பது அவர்களுக்கு உடலில் எந்த இடத்தில் ஒவ்வாமை ஏற்படுகிறது என்பது பொறுத்து தான் சொல்ல முடியும்.

ஒருவருக்கு தோலில் ஒவ்வாமை ஏற்பட்டால்,அதற்கு சோப்பு, ஷாம்பு போன்றவை காரணமாக இருக்கலாம். தூசியில் வேலை பார்ப்பவர்களுக்கு தூசி ஒத்துக் கொள்ளாமல் போயிருக்கலாம். காலையில் எழுந்ததும் தும்மல் வந்துகொண்டே இருக்கிறது என்பார்கள்.அவர்களுக்கு மூக்கில் வரக்கூடிய ஒவ்வாமை. வாயில் அடிக்கடி புண்வருகிறது என்றால், ஒரு சாப்ட் ஆன பேஸ்ட் இருக்கும் போது, எதுக்கு இரிட்டபிள்பேஸ்ட்ட யூஸ் பண்ணணும்னுஎனக்கு புரியவில்லை. உடலுக்கு மேலே உள்ள தோலை விட வாயிக்குள் இருக்கும் தோல் சாப்ட் ஆனது. அந்த மாதிரியான பேஸ்ட் ஏன் உபயோகிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

முக்கியமாகநாக்கில் அலர்ஜி வருவதற்கு காரணம், ஒரு டூத் பேஸ்ட். அதே கம்பெனி இன்னொரு டூத் பேஸ்ட் வருது.அதைப் பயன்படுத்தினாலே அலர்ஜி வராது. பணமும் வெளிநாட்டுக்கு போகாது. இதை ஏன் சொல்கிறேன் என்றால், ஒரு நாளைக்கு ஐந்து பேரைப் பார்க்கிறேன். வாயில் வரக்கூடிய ஒவ்வாமை எல்லாவற்றுக்கும், பேஸ்ட்டுக்கு பிறகு அதிகமாக கல்யாண வீடுகளில் சமைக்கப்படும் வறுவல், பொறித்தலில் சேர்க்கப்படும் நிறமிகள் போன்ற உணவுகள் நமக்கு ஒத்துக் கொள்ளாமல் போகலாம்.

Advertisment

சிக்கன் சாப்பிடணும் ஆனால் அரிப்பு வரக்கூடாது என்று வருவார்கள். பால், முட்டை, மட்டன், சிக்கன், கடல் உணவுகள் உள்ளிட்டவைச் சாப்பிடுவதால் அலர்ஜி ஏற்படலாம். சிலருக்கு கடல் உணவுகள் சாப்பிட்டால் மட்டுமே அலர்ஜி ஏற்படும். இதில், ஒரு சிலருக்கு நண்டு சாப்பிட்டால் ஒன்னும் செய்யாது. ஆனால், இறால் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும். புது துணிகளால் கூட அரிப்பு வரலாம். சிட்ரஸ் பழங்களான சாத்துக்குடி, ஆரஞ்சு, லெமன் ஆகிய பழங்கள் ஒத்துக் கொள்ளாமல் போகலாம்.

நாய், பூனை, மாடு, ஆடுகள் உள்ளிட்ட வீட்டில் வளர்க்கக் கூடிய விலங்குகளால் கூட ஒவ்வாமை ஏற்படலாம். சோப்பு, ஷாம்பு, பர்ஃபியூம், பாடி லோஷன்ஸ் உள்ளிட்டவை ஒத்துக் கொள்ளாமல் கூட போகலாம். மருத்துவர்கள் தரும் மாத்திரைகளால் கூட அலர்ஜி ஏற்படலாம். நீங்கள் சென்று கடையில் வாங்கி சாப்பிடும் மருந்துகளால் கூட ஏற்படலாம். ஆஸ்துமாவும் அரிப்பு வகையைச் சேர்ந்த ஒவ்வாமை தான். அது நுரையீரலில் ஏற்படக் கூடிய ஒவ்வாமை.

எல்லாபொருட்களில் இருந்தும் ஒவ்வாமை வரலாம். ஒரு ஒன்றரை வயது குழந்தைக்கு அரிப்பு என்று அந்த தாய் அனைத்து மருத்துவர்களையும் அணுகி குழந்தைக்கு சிகிச்சைப் பெற்றார். எனினும் சரியாகவில்லை. என்னிடத்தில் வந்தார். அப்போது, நான் குழந்தைக்கு என்னென்ன உணவுகளை தருகிறீர்கள் என்று எழுதி வாருங்கள் என்று சொன்னேன். குறிப்பாக, அரிப்பு ஏற்பட்ட ஆறு மணி நேரத்திற்கு முன்பு குழந்தைக்கு வழங்கப்பட்ட உணவுகள் குறித்து எழுதி வாருங்கள் என்று கூறினேன்.

அதில், பாலை தவிர டொமேடோசாஸை வைத்து தான் குழந்தைக்கு இட்லி கொடுத்திருக்கிறார்; டொமேடோசாஸை வைத்து தான் சாப்பாடு கொடுத்திருக்கிறார். டொமேடோசாஸை மட்டும் நிறுத்தனாங்க.அந்த குழந்தை குணமாகிவிட்டது" என்றார்.

food health
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe