தமிழிசை சொன்ன பானை கதை... முயன்றால் பலன் கிடைக்கும்!

அதிரடி கருத்துக்களுக்கு சொந்தகாரரான முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் அங்கு ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து தமிழகஅரசியல் செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். அவர் இருந்த பாஜக தலைவர் பதவியில் கூட அடுத்த நான்கு மாதங்களுக்கு யாரும் நியமிக்கப்படாமல் இருந்தனர்.

அந்த அளவிற்கு அவரின் ஆளுமை அதிரடியான ஒன்றாக இருந்தது. தற்போது தெலுங்கானாவில் ஆளுநர் பொறுப்பில் இருந்தாலும் தமிழக மக்களை மறக்காமல் முக்கிய தினங்களின்போது வாழ்த்துகளை தெரிவித்து வந்தார். இந்நிலையில் இன்று ஒரு நிமிட மோட்டிவேஷன் என்று கூறி, ஒரு பானை கதை ஒன்றை கூறியுள்ளார். இந்த கதையில் கூறியுள்ளது போல அனைவரும் உழைக்க வேண்டும், அதற்கேற்ப பலன் கிடைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமிழிசை கூறிய கதையின் வீடியோ வருமாறு,

tamilisai soundarajan
இதையும் படியுங்கள்
Subscribe