Advertisment

பச்சரிசியை சாப்பிடக் கூடாதா? - விவரிக்கும் மருத்துவர் சி.கே. நந்தகோபாலன்

Shouldn't you eat tamarind?- Dr. CK Nanthagopalan explains!

'ஓம் சரவண பவ' யூ-டியூப் சேனலுக்கு மருத்துவர் சி.கே. நந்தகோபாலன் சிறப்பு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "சாதம் பாத்திரத்தில் வடித்துபின்னர் வெளியேற்றும் போதுஅந்த தண்ணீருடன் சத்துகள் எல்லாம் வெளியேறி விடுகிறது என்கின்றனர். ஆனால், அப்படி இல்லை. சத்து வெளியேறவில்லை. நெல்லில் 'பி' சீரியஸ் வைட்டமின் இருக்கிறது. அது எங்கிருக்கிறது என்றால், தவுட்டில் இருக்கிறது. புழுங்கல் அரிசி நெல்லை வேகவைக்கும்போது, தவுட்டில் இருக்கும் 'பி' சீரியஸ் வைட்டமின் அரிசியில் இறங்கி விடுகிறது. எத்தனை வருடங்களுக்கு முன்இதை செய்திருக்கிறான் தமிழன். நினைத்துப் பார்க்கக்கூட முடியாது.

Advertisment

ஆங்கில விஞ்ஞானத்தைப் பார்த்து அசந்துபோய் நிற்கும்இந்த உலக பொதுமக்கள்., தமிழனின் அறிவின் இயக்கத்தைப் பார்த்தால் தலை வணங்குவான். பச்சரிசியில் ஒன்றும் இல்லை. பச்சரிசியைச் சாப்பிட்டால் அரை மணி நேரத்தில் பசி எடுக்கும். மீண்டும் சாப்பிட வேண்டும். இதனால் சர்க்கரை உயரும். அரிசி ஏன் தலைசிறந்த தானியம் என்றால், அரிசியை வேகவைத்து அப்படியே சாப்பிடலாம். ஆனால், கோதுமையை அரைத்து மாவாக மாற்றி பின்னர் சப்பாத்தியாக செய்து சாப்பிடுகிறோம். அப்போது, சப்பாத்தியை செரிமானமாக்குவதற்கு ஜீரண மண்டலம் நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். அதனால் பசி எடுப்பதற்குசிறிது நேரம் ஆகும்.

Advertisment

இதனால்தான் அரிசியையும், தவுடையும் அதில் இருக்கும் சத்துக்களையும் எடுத்து வந்தோம். இதை உங்களால் நினைத்துப் பார்க்க முடியுமா?. எல்லாதாவர வர்க்கத்தின் வேர்ப் பகுதியிலும்சுண்ணாம்பு சத்து உள்ளது. உலகத்தில் எங்கு தாவரம் இருந்தாலும், கடலுக்கு கீழ் இருந்தாலும்கூட சரி அதில் சுண்ணாம்பு சத்து உள்ளது. அந்த செடி தனக்குத்தேவையான சத்துக்களை வேரில் இருந்து உறிஞ்சும்போது, வேர்களில் உள்ள சுண்ணாம்பு சத்து, அந்த சத்துக்களில் உள்ளவிஷத் தன்மையை நீக்கிவிடும். இல்லையென்றால், இதை சாப்பிடும் நாம் இறந்துவிடுவோம்.

எங்கெல்லாம் நெற்பயிர் இருக்கிறதோ, அங்கெல்லாம் அர்சானிக் இருக்கும். அர்சானிக் என்பது விஷம். தலைசிறந்த சமையல் கலையும், தலைசிறந்த தமிழ் விஞ்ஞானமும் இருந்த பொழுதும், இந்த மதுமேகம் என்ற நோயும் இருந்திருக்கிறது. அதற்கு என்ன காரணம் என்றால், கிரகங்களின் ஆதிக்கம். நீ இந்த நோயால் அவதிப்பட வேண்டும் என்றால், அவதிப்பட வேண்டும். இதற்கு மருந்து வங்கபஸ்பம். வங்கம் என்றால் அலுமினியம். அதை செய்யக்கூடிய வல்லமைபடைத்த ஆட்கள் இன்று நம்மிடையே இல்லை. ஏனென்றால் விஞ்ஞாத்தைத் தொலைத்துவிட்டு நிற்கிறோம். அதுவும் இயற்கையின் ஒரு விளையாட்டு.

நம்முடைய வாழ்க்கை முறை மாறிவிட்டது. வெயிலில் யாரும் செல்வதில்லை; உழைப்பதில்லை. கணினி இருந்தால் போதும், வாழ்ந்துவிடலாம் என்று வந்துவிட்டோம். பணம் இருக்கோ, இல்லையோ கணினி வேண்டும். மொபைல் இல்லையென்றால் நீ இறந்து விடுவாய் (அல்லது) மனநல காப்பக்கத்தில் இருப்பீர்கள். நமது உடலில் கோடிக்கணக்கான மெக்கானிசம் வேலை செய்கிறது. நமது உடலுக்குஇரும்புச் சத்து தேவைப்படுகிறது;கால்சியம் அதிகமாக இருந்தால், அதை இரும்புச் சத்தாக மாற்றி எடுத்துக் கொள்ளும்.

இங்கிலாந்தில் இருக்கும் பிரபலமான பல்கலைக்கழகம் ஒன்று, கடந்த 1940- களில் ஒரு ஆராய்ச்சியை ஆரம்பித்தார்கள். என்ன ஆராய்ச்சி என்றால், ஒரு மனித அணுவுக்குள் என்னவெல்லாம் இருக்கிறது என்ற ஆராய்ச்சி நடைபெற்றது. சுமார் 70 ஆண்டுகள் தொடர்ந்து ஆராய்ச்சி நடைபெற்ற நிலையில், 2020- ஆம் ஆண்டு அது மூடப்பட்டது. ஆராய்ச்சியில் ஒரு செல்லில் 4,000 காம்போனென்ட்ஸ் உள்ளது தெரிய வந்தது." இவ்வாறு மருத்துவர் தெரிவித்தார்.

tips health interview Doctor
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe