Skip to main content

இனி எதையும் மறக்காமல் இருக்க புதிய எழுத்து வடிவம்...

Published on 04/10/2018 | Edited on 04/10/2018

நம் வாழ்வில் எப்போதும் மறக்கமுடியாத நாட்கள் என்றால் அது நிச்சயம் பள்ளிக்கூட நாட்கள்தான். நண்பர்கள், ரொம்ப பிடித்த சில டீச்சர், இந்த டீச்சர் மட்டும்  வந்துவிடக்கூடாது என்று வேண்டிக்கொள்ளும் அந்த ஒரு டீச்சரென நம் பள்ளிக்கூட நாட்களை எப்போது நினைத்தாலும் அது ஒரு சுகம்தான். இதில் முக்கியமாக தேர்வு நேரங்களில், நன்றாக படிப்பவர் முதல் ஓரளவு படிப்பவர் வரை என்று அத்தனை பேருக்கும் தேர்வறையிக்குள் சென்று கேள்வித்தாளை பார்த்ததும் சில பதில்கள் மறந்துபோகும். அதனாலே சில மதிப்பெண்களை இழக்கவும் நேரிடும். இனி அதுபோல் நடக்காமல் இருப்பதற்கும் நாம் படித்ததில் பெரும்பலமான விஷயங்களை மறக்காமல் இருப்பதற்காகவும் புதிதாக ஒரு எழுத்து வடிவம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

 

ff

 


ஆஸ்திரேலியாவில் உள்ள ராயல் மெல்போர்ன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலிஜி எனும் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் 'காஃநேட்டிவ் சைக்காலஜி' (cognitive psychology) எனும் கொள்கையை கொண்டு முற்றிலும் புதிதாக ஒரு எழுத்து வடிவத்தை கண்டறிந்துள்ளனர்.  இந்த எழுத்து வடிவத்தை ’சான்ஸ் ஃபார்கெட்டிக்கா’ (Sans Forgetica) என்று குறிப்பிடுகின்றனர். இது மற்ற எழுத்து வடிவங்களில் இருந்து வேறுபட்டு இருவேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. முதலாவதாக இந்த எழுத்துக்கள் சற்று இடது புறமாக சாய்ந்து இருக்கிறது. அடுத்தது இதில் வரும் எழுத்துக்களில் பாதிக்கும் மேல் துளைகளுடன் உள்ளது. இதுபோன்ற துளைகளுடன் படிக்கும்போது அந்த வார்த்தைகள் படிப்பதற்கு கடினமாக இருந்தாலும் அதன் மூலம் மாணவர்களின் அறிவாற்றல் திறன் அதிகமாக வேலை செய்யும் என்பதால் அவர்கள் அந்த வார்த்தைகளை எளிதில் மறந்துவிடமுடியாது என்றும் அந்த ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்காக மொத்தம் 400 மாணவர்களிடம் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. அதில் பல்வேறு எழுத்து வடிவங்களுடன் சான்ஸ் பார்கெட்டிக்கா எழுத்து வடிவத்தையும் சேர்த்து அந்த ஆராய்ச்சியை நடத்தி இருக்கிறார்கள், அதில் சான்ஸ் பார்கெட்டிக்கா எழுத்து வடிவத்தில் பயின்ற மாணவர்கள் அதிக நினைவு திறனுடன் இருந்து இருக்கிறார்கள் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Next Story

விடைத்தாளில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ எழுதிய மாணவர்கள்; ஆசிரியர்களின் செயலால் அதிரடி நடவடிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Action by teachers on Students wrote 'Jai Sri Ram' in the answer sheet

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் பகுதியில் வீர் பகதூர் சிங் புர்வன்சால் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பல்கலைக்கழத்தில் பி-பார்ம் பயின்ற முன்னாள் மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, அவர்கள் எழுதிய தேர்வில் அவர்களை தேர்ச்சி பெற வைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

இது தொடர்பான புகாரை, பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், முன்னாள் மாணவர்கள் முதலாமாண்டு தேர்வில் எழுதிய விடைத்தாள்களின் நகலை எடுத்து சரி பார்த்துள்ளார். அதில், ஜெய் ஸ்ரீ ராம் என்றும், ஜெய் ஹனுமான் என்றும், கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா என்ற வார்த்தைகளை மட்டும் எழுதி விடைத்தாள்களை நிரப்பியுள்ளனர். அந்த விடைத்தாள்களுக்கு 56% மதிப்பெண்களை ஆசிரியர்கள் மூலம் பெற்றுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், இந்த விடைத்தாள்களை முறைப்படி மீண்டும் திருத்த சொன்ன போது, அதில் அனைவருக்கும் பூஜ்ஜியம் மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனையடுத்து, விடைத்தாள்களின் நகலையும், முறைப்படி திருத்தப்பட்ட விடைத்தாள்களையும் எடுத்து பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பி இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

அதன் அடிப்படையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், இந்த முறைகேட்டில் 2 ஆசிரியர்களுக்கு சம்பந்தம் இருப்பதாக தெரியவந்தது. அதன் பேரில், மாணவர்களிடம் பணத்தைப் பெற்று கொண்டு அவர்களை தேர்ச்சி பெற வைத்த அந்த 2 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும், இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான், கிரிக்கெட் வீரர்கள் பெயரை மட்டுமே எழுதி வைத்த மாணவர்களை தேர்ச்சி பெற வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.