Advertisment

சொற்களின் அழகு பற்களில்...

நம் முகத்தை அழகான உருவம் கொடுப்பதில் மிக முக்கியமான ஒன்று பற்கள். அது மட்டுமில்லாமல் அடுத்தவரிடம் பேசும் பொழுதும் நம் உடலின் தூய்மையை காட்டுவதில் பற்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. நமக்கு நெருக்கமானவர்களிடம் பேசும் போதும் சரி மற்றவர்களிடம் பேசும் போதும் சரி வாய் துர் நாற்றம் எடுத்தால் அவர்கள் நம்மிடம் நெருங்கி பேசுவதை தவிர்த்து விடுவராகள் .அப்படிப்பட்ட பற்களை எப்படி எல்லாம் பாதுக்காக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லிருக்கிறார்கள் என்றால் "ஆலும் வேலும் பல்லுக்குறுதி ,நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி " அந்த பழ மொழிக்கு ஏற்ப எப்படி பற்களை பாது காப்பது என்று பார்க்கலாம் . வெங்காய சாறு கொண்டு வாய் கொப்பளித்தால் பல்வலி, ஈறுவலி குணமாகும்.

Advertisment

teeth safety

மாவிலையை கொண்டு பல் தேய்க்க ஈறுகள் கெட்டியாகும். இஞ்சிசாறும், தேனும் சேர்த்து வாய் கொப்பளித்தால் சொத்தையினால் ஏற்பட்ட பல்வலி குறையும். பல் ஈறுகள் நன்றாக இருப்பதற்கு டேபிள் சால்டையும், சோடா உப்பையும் சரிவிகிதம் அளவு கலந்து வைத்து கொண்டு, இரவு படுக்க போகும் முன்பு பல்லிலும், பல் ஈறுகளிலும் இதை வைத்து நன்றாக தேய்த்தால், இது பற்களை பாதுகாக்கும். ஈறுகளை வளர்க்கும். தினசரி ஆரஞ்சு, தக்காளி, திராட்சை, கொய்யா, அன்னாசி, பப்பாளி, எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிட்டு வர பற்கள் மிகவும் உறுதியாக இருக்கும். தேவையான அளவு தனியாவை கஷாயம் வைத்து வாய் கொப்பளித்து வந்தால் நாளடைவில் பல் தந்தங்கள் வலிமை பெறுவதோடு பற்கள் சம்பந்தமான நோய்களும் குணமாகும்.

Advertisment

கொய்யா இலைகளை மென்றும் அல்லது கொய்யா இலைகளை கொதிக்க வைத்த நீரை வாய் கொப்பளித்து வந்தால், ஈறு வீக்கங்களும், பல் வலியும் குறையும். மாங்கொட்டை தூளை தினமும் பற்பசையாக பற்களை சுத்தம் செய்து வர, ஈறுகள் வலுவடைவதுடன், வாய் துர்நாற்றமும் நாளடைவில் குணம் பெறும். தினமும் ஒரு கப் கேரட் சாறு எடுத்து குடித்து வர, பல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.சின்ன வெங்காயத்தை பச்சையாக அடிக்கடி சாப்பிட்டு வர, பல் சொத்தை ஆகாமல் தடுக்கும். 5 கிராம் தக்காளி சாற்றை, 3 வேளை தினமும் குடித்து வர, ஈறுகளில் இருந்து வரும் இரத்தபோக்கு நிற்கும்.சிறிது பெருங்காய தூளை வலியுள்ள பற்களில் வைத்தால், வலி குறைவதுடன், பல்லிலுள்ள புழுக்களும் அகலும். பற்களைப் பாதுகாப்போம் சொற்களை கவனமாக பேசுவோம் .

beauty health women safety
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe