Skip to main content

"உயிரைக் காக்கக் கூடிய அளவிற்கு ராகத்திற்கு வலிமை உண்டு"- ஹோத்ரா பேட்டி

Published on 31/10/2022 | Edited on 31/10/2022

 

 

"Raga has the power to save life" - Hotra interview!

 


'ஓம் சரவண பவ' யூ-டியூப் சேனலுக்கு கர்நாடக இசையில் பயிற்சி பெற்றவரும், பரத நாட்டியக் கலைஞருமான ஹோத்ரா சிறப்பு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "நிறைய கிராமியப் பாடல்களை எடுத்துப் பாருங்கள். எல்லாமே ஆனந்த பைரவிக்குள் வந்து நிற்கும். எல்லா நேரங்களிலும் ஆனந்த பைரவி பாடலாம். இந்த நேரம் காலம் எல்லாம் கிடையாது. எல்லா ராகங்கள் பற்றி சொல்ல வேண்டுமென்றால் நிறைய விசயங்கள் இருக்கிறது. ரேவதி என்பது சிவனுக்கு உகந்த ராகம் எனப் பெயர் பெற்றது. ரேவதி ராகத்தில் இருப்பது எல்லாம் நம்மை மெய் மறந்து போகச் செய்யும். அம்பாள் பாட்டு எல்லாமே இந்த ராக அடிப்படையில் தான் இருக்கும். 

 

எம்.எஸ்.வி. சார் ராகத்தை நன்றாகவும், அழகாகவும் கையாண்டிருப்பார். ரொம்ப நுணுக்கமான விசயங்கள் மற்றும் ரொம்ப அரிதான விசயங்கள் எளிமையாகச் செய்கிறார்கள் என்றால், மற்றவர்களால் முடியாத விசயங்கள் செய்யும் போது தான், அது பெரிய விசயமாகப் பேசப்படுகிறது. நான் மூன்று ஸ்தாயில் பாட முடியாது என்று சொல்லவில்லை. மூன்று ஸ்தாயில் பாடி வெளிப்படுத்தியவர் யேசுதாஸ் அவர்கள். மற்ற ஜாம்பவான்கள் வெளிப்படுத்தவில்லை. இப்போது இருக்கக் கூடியவர்களில் யார் ஜாம்பவான்? மூன்று ஸ்தாயில் பாடக் கூடியவர்களுக்கு விருதுகளை வழங்க வேண்டும். பாடத் தெரியாதுனோ? அவர்களால் முடியாது என்றோ? நான் சொல்லவில்லை. பாடி வெளிப்படுத்தவில்லை யாருமே? 

 

1000 கீர்த்தனைகள் தெரிந்ததனால் நீங்கள் ஜாம்பவான் ஆகிடுவீங்களா? அல்லது புதுசு புதுசா ராகங்களில் நிறைய கீர்த்தனைகள், பாடல்களையும், கவிதைகளையும் எழுதுவதனால் நீங்கள் ஜாம்பவான் என்று சொல்றீங்களா? பட்டி தொட்டியெல்லாம் சேர்த்ததனால் தான் அவர் இசைஞானி என்று பெயர் பெற்றார். ஏன் கர்நாடக இசையை யாரும் விமர்சனம் செய்யவில்லை? கடல் போன்றது இசை. எனக்கு எல்லாமே தெரியும் என்று சொல்ல வரவில்லை. எல்லா துறையிலும் கொஞ்சம் கொஞ்சம் அனுபவம் இருக்கிறது. கர்நாடக இசையில் நான் பெரிய ஆள், நான் எல்லாமே பாடுவேன்; நான் எல்லாம் ராகத்திலும் அத்துப்படி என்று சொல்லவில்லை. ஆனால், எனக்குள் ஆதங்கங்கள் இருக்கிறது. 

 

இசை குறித்த ஆதாரங்கள் ஏகப்பட்டது இருக்கிறது. கர்நாடக இசையில் முழுமையாக சுசீலா அம்மா பிரபலமாகவில்லை. இவர்கள் திரையில் இசையில் பெரிய ஆளாக இருந்தார்கள். உயிரைக் காக்கக் கூடிய அளவிற்கு ராகத்திற்கு வலிமை உண்டு. எல்லாவற்றையும் சரி செய்து, கலைஞர்களை மீண்டும் உருவாக்க வேண்டும். 64,000 உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய அளவிற்கு மனிதர்கள் கிட்ட எல்லா விசயங்களும் அடங்கி இருக்கிறது. ஒவ்வொரு பாவங்களில் உள்ள அசைவுகளிலும் உணர்வு உள்ளது. அதாவது, ஒரு விசயத்தை அறிந்து, உணர்ந்து, உணர்வில் தெளிந்து, அந்த தெளிவில் அறிந்து உணர்ந்து, அந்த விசயத்தை வெளிப்படுத்தினால் தான் சரியான முறையில் போய்ச் சேரும்" எனத் தெரிவித்தார்.