Advertisment

மூன்று நாட்கள் யூரின் வராதவருக்கு 15 நிமிடத்தில் நடந்த ஆச்சர்யம் - ‘பல்ஸ் பேலன்சிங்’ உமா வெங்கடேஷ் விளக்கம்

Pulse Balancing Uma venkatesh

Advertisment

காஸ்மிக் எனர்ஜி மூலம் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்த முடியும் என்று கூறும் பல்ஸ் சமநிலை நிபுணர்உமா வெங்கடேஷ் அவர்கள், பல்வேறு உணவு முறைகள் மற்றும் எளிமையான செயல்களின் மூலம் எவ்வாறு ஆரோக்கியத்தை அடைய முடியும் என்பது குறித்து நமக்கு விளக்குகிறார்.

பச்சைப் பூசணியை மிக்ஸியில் அடித்துக் குடித்தால் ஒட்டுமொத்த உடலுக்கும் நல்லது. உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கும். தேவைப்படும் வரை அதை எடுத்துக்கொண்டால் போதும். பூசணியில் திருஷ்டி கழித்தால் அசுத்தங்களை அது சுத்தம் செய்யும். வேப்பிலைக்கும் அந்த சக்தி உண்டு. அதனால்தான் பேய் பிடித்தவர்களுக்கு கிராமங்களில் வேப்பிலை அடிப்பார்கள். இப்படி ஒவ்வொன்றுக்குப் பின்னும் ஒரு காரணம் இருக்கிறது. குறைவான செலவில் நல்ல மருத்துவத்தை நாம் பரிந்துரைக்கிறோம். ஒருவருக்கு மூன்று நாள் சிறுநீர் வராமல் இருந்தது. நம்முடைய வீடியோக்களைப் பார்த்துவிட்டு அவர் நம்மிடம் வந்தார். கடவுள் மேல் பாரத்தைப் போட்டு நீடில் சிகிச்சை செய்தேன். அடுத்த 15 நிமிடத்தில் அவருக்கு சிறுநீர் வெளியேறியது. காலங்கள் எவ்வளவு கடந்தாலும் சிகிச்சைக்கான கட்டணத்தை நான் மாற்றவில்லை. அக்குபஞ்சர் சிகிச்சையில் 5 வருட கோர்ஸ் படித்தேன். ஆர்வம் அதிகம் என்பதால் மாற்று மருத்துவம் குறித்து நிறைய தெரிந்துகொண்டேன்.

தொடர்ந்து நடைபயிற்சி மேற்கொண்டாலே இரத்த அழுத்தம் குறையும். தலைவலி இருப்பவர்கள் ஒரு டம்ளர் தேங்காய் பால், தண்ணீர், பனங்கற்கண்டு ஆகியவை சேர்த்து ஒருநாள் முழுவதும் குடித்து வந்தால் தலைவலி குணமாகும். இலவங்கம், ஏலக்காய், பட்டை ஆகியவற்றை நன்கு நுணுக்கி அகல் விளக்கில் போட்டு ஒருநாள் முழுவதும் ஊறவிட்டு, மறுநாள் திரி போட்டு விளக்கை ஏற்றினால் வீட்டுக்கு வருபவர்களின் தீய எண்ண ஓட்டங்கள் சக்தியிழந்து போகும். நேர்மறையான சக்தி பெருகும். இதை அனைவரும் தங்களது வீட்டில் செய்யலாம். இதை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை செய்யலாம். முதலில் கண் எரிச்சல் ஏற்படும். அதன்பிறகு சரியாகிவிடும். பெரிய குவளையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு, அதில் ரோஜா இதழ்களைப் போட்டு இரவு ஊறவைத்துவிட்டு, காலையில் முகத்தை அதற்குள் கொண்டுபோய்நாக்கை நீட்டி, கண்களை நன்கு திறந்து பார்த்து உருட்ட வேண்டும். இது ஆக்சிஜனை நன்கு பரவச் செய்யும். கண்களை மேலும் ஆரோக்கியமாக்கும்.

Medical
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe