Advertisment

பல்வேறு நோய்களுக்கு பழங்களின் வழியே தீர்வு - ‘பல்ஸ் பேலன்சிங்’ நிபுணர் உமா வெங்கடேஷ் விளக்கம்

 Pulse Balancing Uma venkatesh 2

பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கான தீர்வுகளை பல்ஸ் சமநிலை நிபுணர் உமா வெங்கடேஷ் வழங்குகிறார்.

Advertisment

இளம் வயதில் சர்க்கரை நோய் ஏற்படுவதையும் நம்மால் குணப்படுத்த முடியும். சிறிய நடைமுறை மாற்றங்களின் மூலம்பல்ஸ் சமநிலை மூலமாகவே சர்க்கரை நோயை நாம் குணப்படுத்த முடியும். இதற்குப் பெரிய உணவுப் பத்திய முறைகள் எல்லாம் கிடையாது. சர்க்கரைவள்ளிக் கிழங்கை வெட்டிபாலில் வேக வைத்துதோலை நீக்கி விட்டு சாப்பிட்டால் அது சர்க்கரை நோய் குணமாக உதவும். நாவல் பழத்தை இரவு தண்ணீரில் ஊறவைத்து அடுத்த நாள் சாப்பிடுவது நல்லது.

Advertisment

ஒவ்வொருவருடைய உடல்நிலையைப் பொறுத்து நோய் குணமாகும் காலமும் மாறும். ஆனால் நம்முடைய சிகிச்சையில் நிச்சயம் நோய்கள் குணமாகும் என்பது உண்மை. மிக இளம் வயதில் பருவமடைதல் என்கிற பிரச்சனையோடு சில குழந்தைகளை நம்மிடம் அழைத்து வந்துள்ளனர். அவர்களுக்கு நாம் சிகிச்சையளித்து குணப்படுத்தியிருக்கிறோம்.

கருப்பை தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் மாதுளை நல்லது. மாதுளையைத் தோலோடு மிக்ஸியில் அரைத்து, ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து ஜூஸ் போன்று, காலை முதல் மாலை வரை கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்க வேண்டும். 48 நாட்கள் இதைத் தொடர்ந்து செய்தால் கருப்பை தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.

கறிவேப்பிலைச்செடியை வேரோடு எடுத்து நிழலில் காய வைத்துஅரைத்துமூன்று வேளைகள் 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இளமை கூடும். சனி கிரகத்தின் ஆற்றலை கிரகித்து வைத்திருக்கும் காய் என்பதால் பூசணிக்காயை தினமும் சாப்பிடுவது நம்முடைய அழகுக்கும் நேர்மறையான சிந்தனைக்கும் நல்லது. உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் இதன் மூலம் நீங்கும்.

Medical
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe