Advertisment

லவ் பிரேக் அப் ஆனால் ஏன் இப்படி ஆகுறாங்க? - மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Psychiatrist Radhika Murugesan explained

Advertisment

காதல் என்ற விஷயமே ஜஸ்ட் காமம் தான். காமம் தான் காதல். ஒருவரை பார்த்து ஒரு ஈர்ப்பு வரும்போது தற்செயலாக ஹார்மோன்ஸ் கூட ஆரம்பிக்கும். டோபோமைன்ஸ் கூடும். காதல் என்பதே ஆல்டர் மெண்டல் ஸ்டேட் (Alter Mental state) தான். அதனால் தான் காதல் தோல்வி அடைந்த பிறகு, விட்டுட்டு போனவங்கள பத்தியே நினைச்சுட்டு இருப்பாங்க. அவுங்க ஆன்லைன்ல இருக்காங்களா, சமூக வலைத்தளங்களில் இருக்காங்களா என செக் பண்ணிட்டே இருப்பாங்க. இந்த மாதிரி ஸ்டாக்கிங் செய்வாங்க. இப்படி உள்ளவங்கள நான் ஓசிடி மாதிரியே சிகிச்சை அளித்திருக்கிறேன். அவர்களும், 3 அல்லது 4 மாதங்களிலே சரி ஆகியிருக்கிறார்கள்.

காதல் என்பது ஒரு போதைப் பொருள் மாதிரி. ஒரு போதைப்பொருள் பயன்படுத்தும் போது டொபொமைன்ஸ் அதிகமாக இருக்கும். திடீரென, அந்த போதைப்பொருளை நிறுத்திவிட்டால் ஒருவிதமாக நடந்துகொள்வார்கள். அது போல் தான் காதலிலும் இருக்கிறது. பார்த்தவுடன் காதல் வருது என்கிறார்கள். அது கண்டிப்பாக காமத்தினால் தான் வருகிறது. அது எப்படி ஒருத்தங்கள பார்த்தவுடன் அவுங்கள பத்தி ஒன்னுமே தெரியாமல் காதல் வரும். இந்த காதல், காமம், சமூகம் இத பத்தி பேசும்போது தான் எனக்கு தோனுது. நிறைய இளம் காதலர்கள், காதலிக்கும் போது நெருக்கமாக ஒரு காவியக் காதல் போல் காதல் செய்வார்கள். ஆனால், அவர்கள் இருவரும் கல்யாணம் செய்த பிறகு, சின்ன சின்ன விஷயத்திற்கு அளவுக்கு அதிகமாக கோபப்படுவது, சண்டை போடுவது போல் இருப்பார்கள். இவர்கள் இருவரும் பிரிந்துபோக வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். ஆனால், ஏதோ இடத்தில் இந்த சமூகத்திற்காக திருமணம் செய்துவிட்டோம், அதனால் சேர்ந்து தான் வாழ வேண்டும், குழந்தை பிறந்தால் சரியாகிவிடும் என்று ஒரு நிலைப்பாடு எடுக்கும் போது அங்கு மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

இளைஞர்களுக்கு அவர்களுடைய மனநிலையை எப்படி ஒழுங்குப்படுத்துவது என்று தெரியவில்லை. கோபம் வந்தால் எப்படி கையாளுவது, ஒரு பேச்சுவார்த்தையை எப்படி உருவாக்க வேண்டும் என்பது போன்ற திறமை இல்லாததால், அதிகளவு கோபப்படுவது, எமோஷனலாக கத்துவது போன்றெல்லாம் தான் நடக்குது. இதுக்குமேல், இந்த உறவு சரியா வராது என்று புரிந்தாலும், திருமணத்தில் தான் இருப்பேன் அதைத்தாண்டி என்னால் யோசிக்க முடியாது என்ற மனநிலையில் இருக்கிறார்கள். அதையெல்லாம் கையாளுவதுமிக மிக கஷ்டம்.

Advertisment

ஒரு வேளை காதல் வந்துவிட்டது. ஆனால், அந்த காதல், கடைசி வரைக்கும் ரோமியோ ஜூலியட் மாதிரி எல்லாம் இருக்காது. காதல் என்பது முதல் கட்டம் தான். ஆண்டாண்டு காலமா ஈர்ப்பே இல்லாமல், ஒரே சாதிக்குள்ள இருக்கனும் வேண்டும் அரேஞ் மேரேஜ் நடந்துட்டு இருந்த சிஸ்டம்ல காதல் என்ற கான்செப்ட்க்கு வந்துருக்கோம். காதல் செய்து கல்யாணம் செய்ய வேண்டும். அது இயற்கை. ஒருத்தங்கள பார்த்தவுடன் அவருடன் வாழ்நாள் முழுவதும் பயணிக்க வேண்டும் என்று தோனுகிறது. ஆனால், அதுக்கு மேல் நிறைய விஷயம் இருக்கிறது. அதை அவர்களோடு பழகுனா தான் தெரியும். அதனால், காதல் என்பது முதல் கட்டம் தான். அதுக்கு மேல் ஒரு பெரிய பிராஸஸ் இருக்கு. சில பேருக்கு அவர்களிடம் இருக்கும் முதர்ச்சியால் அவர்களுக்கு வரக்கூடிய பிரச்சனைகளை எதிர்கொண்டே இருப்பார்கள். அதோடு சேர்த்து அந்த காதலையும் வளர்ப்பார்கள். அது தான் 50, 60 வயதுகொண்ட ஒரு தம்பதிகூட ரொமாண்டிக் தம்பதியராக இருப்பார்கள்.

கணவன் மனைவி உறவுக்குள் நட்பு இல்லையென்றால் எதையுமே செய்யமுடியாது. எக்காரணம் கொண்டு திருமணத்தில் இருந்து விட்டு போகக்கூடாது, அந்த சிஸ்டத்தை உடைக்கக்கூடாது என்ற நோக்கத்தில் தான் காதலை புனிதப்படுத்துகிறார்கள். அந்த சிஸ்டத்தை எதிர்கேள்வி கேட்கக்கூடாது அத புனிதப்படுத்தி செய்யக்கூடாது என்ற சட்டம் இருக்கிறது. அப்படி எதிர்கேள்வி கேட்டு செய்தால், பெண்களுக்கு கற்பு கிடையாது போன்றவற்றை சொல்வார்கள். மற்றபடி காதலுக்கு புனிதமும் கிடையாது, ஒரு புண்ணாக்கும் கிடையாது.

love Psychiatrist
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe