Advertisment

உடலை சீராக்கும் மாதுளையின் மகத்துவம்!

மாதுளை பழத்தை போன்று புத்தணர்வு அளிக்கும் பழம் வேறொன்று இல்லை என்று சொல்லும் அளவுக்கு அதில் நிறைய நன்மைகள் கொட்டிக்கிடக்கின்றது. மாதுளை பழத்திற்கு மாதுளங்கம் என்ற சிறப்பு பெயரும் உண்டு. அனைத்தையும் சீராக்குபவன் என்ற அடிப்படையில் மாதுளைக்கு இந்த பெயர் வந்ததாக கூறுகிறார்கள். உடலுக்கு தேவையான பெரும்பாலான சத்துக்கள் மாதுளை பழங்களில் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். மாதுளையின் பழம், பட்டை, பூ முதலானவைகளும் உடலுக்கு நன்மை தரும். புளிப்பு மாதுளையை தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டால் வயிற்றுக்கடுப்பு உடனடியாக குறையும். ரத்த போக்கினை சீராக்கும் ஆற்றல் மாதுளைக்கு உண்டு. சிறுநீரை சீராக வெளியேற்றும் தன்னை இந்த பழத்திற்கு மிக அதிகம். இதயத்திற்கு புத்துணர்ச்சி கொடுக்க கூடியது.

Advertisment

gk

மாதுளை பழத்தில் உடலுக்கு தேவையான சுண்ணாம்பு, கால்சியம் ஆகியவை சரிசமமான அளவில் இருக்கின்றது.நோய் எதிர்ப்பு சக்தியினை மற்ற பழங்களை விட விரைவாக அதிகரிக்கும் தன்மை உடையது. இனிப்பு மாதுளையை தொடர்ந்து சாப்பிட்டு வர பித்தத்தை போக்கும். வரட்டு இருமலை அடியோடு நிறுத்தும் ஆற்றலை மாதுளை பெற்றிருக்கிறது. மாதுளை விதைகளை பொடியாக்கி பாலுடன் கலந்து சாப்பிட்டால் மேக நோயினால் ஏற்பட்ட பாதிப்பு குறைகின்றது. நரம்பு தளர்ச்சி போன்ற குறைபாடுகள் சிறிதுசிறிதாக குறைக்கிறது. உடல் எடை கூடுவதற்கு மாதுளை அருமருந்தாகும். ஏனெனில் இதில் உள்ள மருத்துவ பொருட்கள் பசியினை தூண்டும் ஆற்றல் கொண்டது. வயிற்றுப்புழுக்களை வெளியேற்றவும் மாதுளை பயன்படுகின்றது.

health
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe