Skip to main content

யாருக்கு எவ்வளவு ஓட்டு, கூகுளின் புதிய அப்டேட்...!

Published on 27/09/2018 | Edited on 27/09/2018

பயணத்தின்போது நமக்குத் தெரியாத வழிகளின் வழியைக் கண்டுபிடித்து, இதுவரை பயணத்தை மட்டும் எளிமையாக்கிவந்த கூகுள் மேப் (Google map) தற்போது புதிதாக அதில் ஒரு வசதியை அறிமுகம் செய்துள்ளது. சமீபத்தில் இருசக்கர வாகனங்களுக்கு என்றே பிரத்தேயகமாக கூகுள் மேப் அப்டேட் செய்யப்பட்டிருந்தது. தற்போது அதையும் தாண்டி தன் வாடிக்கையாளர்களின் வார இறுதி நாட்களை கொண்டாடும் விதமாக இந்த அப்டேட்டை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. 

 

google

 

வாரத்தின் ஐந்து நாட்களும் வேலை செய்துவிட்டு வார இறுதி நாட்களில் நண்பர்களுடனோ அல்லது குடும்பத்துடனோ எங்காவது செல்லலாம் என்று நாம் நினைத்துத் திட்டமிடும்போது சினிமா, ஷாப்பிங் என்று பலத் திட்டங்களை அடுக்கிக்கொண்டே போனாலும் இறுதியாக அந்தப் பயணம் முடிவது ஹோட்டலாகத்தான் இருக்கும். அதே சமயம் திடீர் என்று மாலை, வேலையை முடித்துவிட்டு நண்பர்களுடன் ஹோட்டலுக்கு சென்று மகிழ்வோம் என்று நினைத்தாலும், அதில் மிகப்பெரிய பிரச்சனை நம்மைச்சுற்றி பல ஹோட்டல்கள் இருக்க அதில் ஒவ்வொருவர், ஒவ்வொன்றை சொல்லுவார்கள் அதில் இறுதி முடிவை எடுப்பதுதான் கடினம். இதற்குத்தான் கூகுள் மேப் இப்போது அதன் செயலியில் கூடுதலாக ஒரு வசதியை சேர்த்திருக்கிறது.

 

எப்போதும் போல் கூகுள் மேப்பிற்குள் சென்று அதில் இருக்கும் லொக்கேஷன் புள்ளியை நமக்கு விருப்பமான ஹோட்டலில் அழுத்திபிடிக்க வேண்டும். அப்படி அழுத்தி பிடித்ததும் உங்களுக்கு யாருடன் செல்ல வேண்டும் என்று ஒரு பட்டியல் வரும். பின் அதில் இருக்கும் நபர்களும் அவர்களுக்கு விருப்பமான ஹோட்டல்களை தேர்வு செய்யலாம். அதில் ஒரே ஹோட்டலை அதிக நபர்கள் யார் தேர்வு செயகிறார்களோ அந்த ஹோட்டலை, உங்கள் படியலில் இருக்கும் நபர்களுக்கு பச்சை நிறத்தில் லொக்கேஷனில் காட்டும். பிறகு அதிகமானோர் தேர்வு செய்யும் ஹோட்டலுக்கே அனைவரும் செல்லலாம். எளிமையாக சொல்ல வேண்டும் தாங்கள் விரும்பியதை நண்பர்களுடன் பகிர்ந்துகொன்டு அதன் மீது வாக்கெடுப்பு நடத்தி அதிகமானோர் வாக்களிக்கும் ஹோட்டலுக்கு செல்லலாம்.  

 

Next Story

ஊழியர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு தந்த கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை!

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Google CEO Sundar Pichai gave a shocking announcement to the employees!

உலகின் முன்னனி பன்னாட்டு இணையதள மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் தான் கூகுள் நிறுவனம். கலிபோர்னியாவை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த சுந்தர் பிச்சை பொறுப்பு வகித்து வருகிறார். 

இதற்கிடையில், கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம், கூகுள் நிறுவனம் சர்வதேச அளவில் தனது ஊழியர்களில் 6 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்தது. அப்போது, இது பேசுபொருளாக அமைந்தது. இந்த பணிநீக்க நடவடிக்கையை தொடர்ந்து, 2024ஆம் ஆண்டிற்கான திட்டங்கள் குறித்து,  கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தனது ஊழியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘நிறுவனத்தின் செயல்பாட்டை எளிதாக்குவதற்கான சில அடுக்குகளை நீக்க வேண்டியது காலத்தின் அவசியம். அதனால், இந்த ஆண்டும் பணி நீக்கங்கள் தொடரும். இந்த பணி நீக்க நடவடிக்கைகள் நிறுவனத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் வகையில் பல்வேறு துறைகளின் அடுக்குகளை நீக்குவதாக இருக்கும். ஆனால், இந்த பணி நீக்கம் கடந்தாண்டின் அளவிற்கு இருக்காது. அதே போல், இது அனைத்து துறையிலும் இருக்காது” என்று தெரிவித்தார். 

கூகுள் நிறுவனங்களில் கடந்தாண்டு சுமார் 12,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் பணிநீக்க நடவடிக்கை தொடரும் என்று கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கூறியிருப்பது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

‘அயலான்’ படத்தை வெளியிடத் தடை!

Published on 14/12/2023 | Edited on 15/12/2023
Ayalon film release ban

'இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக உருவாகி வரும் படம் 'அயலான்'. இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். 2024 பொங்கலை முன்னிட்டு திரைக்கு வருகிறது. இப்படத்தின் முதல் பாடல் 'வேற லெவல் சகோ' கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது.

இப்படத்தின் டீசர் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது. டீசர் விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் மீண்டும் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாகத் தெரிவித்திருந்தார். இதையடுத்து சிவகார்த்திகேயன் படத்திற்கு உலகளவில் பல நாடுகளில் மற்றும் திரை எண்ணிக்கையில் அதிகளவு வெளியாகும் திரைப்படம் அயலான் எனப் படக்குழு தெரிவித்தது. பின்பு இப்படத்தின் இரண்டாவது பாடல் விரைவில் வெளியாகும் எனவும் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் ஒப்பந்தத்தை மீறி அயலான் படத்தை வெளியிடுவதாக டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த மனுவில், “கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் ரூ.10 கோடி கடனாகப் பெற்றிருந்த நிலையில், ரூ. 3 கோடி மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் 'அயலான்' படத்தினை 4 வாரங்களுக்கு வெளியிடச் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.