Advertisment

ஒன்ப்ளஸ் 6 மிடில் கிளாஸ் உயர்தர மொபைல் !

ஐபோன் எக்ஸ் (Iphone X)வந்த பிறகு, எல்லோரும் அடுத்து ஆர்வமாக காத்திருந்தது ஒன் ப்ளஸ் 6 என்ற மொபைலுக்குத்தான். இன்டர்நெட் உலகில் தினசரி ஒன் ப்ளஸ் 6 மொபைல் பற்றியஎதாவது ஒரு தகவல் கசிந்துகொண்டே இருந்தது. இணையத்தில் கசிந்தது போலவேதற்போது பல வசதிகளுடன் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் நேற்று லண்டனில் ஒன்ப்ளஸ் 6 மொபைல் வெளியீட்டு விழா நடந்துள்ளது. இன்றுமும்பையிலும் இந்திய மக்களுக்காக ஒன்ப்ளஸ் 6 நிறுவனம் மொபைலை வெளியிட்டது. இந்த மொபைலின் சிறப்பம்சங்கள் என்னவென்று பார்ப்போம்...

Advertisment

oneplus 6

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

Advertisment

ஒன்ப்ளஸ் 6நாட்ச் டிஸ்பிலேவைஅறிமுகம் செய்திருக்கிறது. ஐ போன் எக்ஸிலிருந்துதற்போது வெளிவந்துள்ளவிவோ எப் 7 வரை இந்த டிஸ்பிலே இருப்பதால், இது ஒரு புதிய மாற்றமாக சேர்க்கப்பட்டுள்ளது. நாட்ச் சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது ஆதலால் நாட்ச் என்ற ஆப்ஷனை நாம் எடுத்துக்கொள்ளவும் இதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக இதன் டிஸ்பிலே 6.2 இன்ச் அளவுகொண்டது. அதேபோல பேக் பேனல் கொரில்லா கிளாஸ் 5.

இந்த மொபைலின் சிறப்பு என்று நிறுவனமே சொல்வது, இதன் பயன்பாட்டு வேகத்தைதான். வேகத்தை அதிகப்படுத்தவே இந்த மாடலில் Qualcomm’s Snapdragon 845 octa-core processor பயன்படுத்தியிருக்கின்றனர். ஏற்கனவே இதற்கு முன்பு வந்த ஒன்ப்ளஸ் 5 மற்றும் 5டி மாடல்கள் வேகத்திலும், பயன்பாட்டிலும் எல்லோர் மனதையும் கவர்ந்தது, அதேபோல இதுவும் கண்டிப்பாக அனைவரையும்கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் கேமராக்களின் தரத்தைஎந்த ஒரு மொபைலும் புகைப்படத்தில்தந்ததில்லை, ஆனால் இந்த ஒன்ப்ளஸ் மொபைலோ அதை சமன் செய்யும் அளவிற்குபுகைப்படங்களின் தரத்தைதருகிறது. இந்த மாடலில் கூட பழைய மொபைலில் இருந்தது போலவே பின்பக்கம் இரண்டு கேமராக்கள் அதில் ஒன்று 20mp மற்றொன்று 16 mp. செல்பி பிரியர்களுக்கு என்று பிரண்ட் கேமராவில் 16 mp கொடுத்துள்ளனர். கிராபிக்ஸ் தாறுமாறாக இருக்க வேண்டும் என்பதற்காக andreno 630 கொடுத்துள்ளனர்.

oneplus 6

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இதில் ஆக்சிஜன் ஓஎஸ் 5.1, ஆன்டிராய்டு ஓரியோ 8.1வுடன் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதுதான்காஸ்டலி மொபைல் என்ற தோற்றத்தை இந்த மொபைல்பெறஒரு தடையாய் இருக்கிறது என்றுபலர் தெரிவிக்கின்றனர். இன்னுமொரு தூளான விஷயம் என்றால் டேஷ் சார்ஜிங்தான். பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே போதுமாம் ஐந்து மணிநேர பிளேபேக் டைம் பெற முடியும் என்கின்றனர். பழைய மாடலில் இருப்பது போலவே டைப் சி யுஎஸ்பி வகை கொடுக்கப்பட்டுள்ளது.

மிட்நைட் பிளாக், மிர்ரர் பிளாக் மற்றும் சில்க் வைட் போன்ற நிறங்களில்இது கிடைக்கின்றது. இந்த மொபைல் மூன்று வகைகளில் விற்பனைக்கு வருகிறது, ஒன்று 6 gb ரேம் 64 gb ரோம், 8 gb ரேம் 128 gb ரேம், 8 gb ரேம்256 gb ரோம். 256 gb என்பது இந்த முறைதான் முதல் முறையாக வெளியிடுகிறது. மேலும் இது வெதர் ரெசிஸ்டண்ட்.

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

இதன் ஆரம்ப விலை 34,999 ரூபாய். இதில் இன்னொரு எடிஷனாக அவெஞ்சர்ஸ் மாடல் என்று வருகிறது. அதன் விலை கிட்டதட்ட44,999 ரூபாய். இதுபோன்று பல தரமான சிறப்பான விஷயங்களை கொண்ட இந்த மொபைல்அமேஸானில் வரும் இருபத்தி இரண்டாம் தேதி விற்பனைக்கு வருகிறது.

Iphone oneplus 6 gadgets
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe