/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kir.jpg)
ஐ பி ஸ் எனப்படும் Irritable Bowel Syndrome நோயைப் பற்றி ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்குகிறார்.
ஐ. பி. ஸ் என்று Irritable Bowel Syndrome என்பது அல்சர் வழியில் வரும். இந்த ஐ. பி. ஸ் அல்சரேட்டிவே கொலட்டிஸ் ( ulcerative colitis) அண்ட் குரோன் (Crohn's disease) என இரண்டு விதமாக இருக்கிறது. தாங்க முடியாத அல்சருடன் ஒரு கிளைண்ட் வந்தார். எந்த நோயாக இருந்தாலும் முதலில் ஸ்டிரெஸ் அளவு தான் பார்க்கபடும். சைக்கோமெட்ரிக் டெஸ்ட் என்று ஒன்று ஸ்டிரெஸ் ஃபேக்டரை கண்டுபிடிக்க இருக்கிறது. அது பெரும்பாலும் ஒரு 20க்கு 14 முதல் 18 வரை தான் இருக்கும். அந்த ஸ்கோரை பார்த்தாலே தெரியும். அப்படி இருக்க அவர்களை ஸ்ட்ரெஸில் இருந்து வெளியில் இருந்து கொண்டு வரவைக்க சைக்கோதெரஃ பி கொடுத்து மாற்ற வேண்டும். என்னால் பரபரப்பாக இல்லாமல் இருக்க முடியவில்லை என்று கூறியதற்கு அவருக்கு உடற்பயிற்சி ஒன்றை சொல்லிக்கொடுத்தேன். அது என்னவென்றால், அவரை என் முன்னால் அமரவைத்து ஒரு பாதாம் பருப்பை எவ்வளவு ஸ்லோவாக சாப்பிட முடியுமோ அந்த அளவுக்கு சாப்பிடுங்கள் என்று சொன்னேன். முதலில் சீக்கிரம் சாப்பிட்டுவிட்டார். அடுத்து 5 நிமிடம் எடுத்துக்கொண்டார். இப்படி முயற்சி செய்து அரை மணி நேரம் வரை, பாதாம் பருப்பை கொஞ்சம் கொஞ்சமா பொறுமையாக சாப்பிட்டார்.
அல்சரினால் வயிறு பகுதி மட்டும் புண்ணாக இல்லாமல் ஐபிடியை பொருத்தவரைக்கும் மலக்குடலிலும் காயமாக இருக்கும். சில இடங்களில் புண்ணாகி தொற்றாக மாறிவிடும். சில சமயம் h. Pylori என்ற ஒரு இன்ஃபெக்ஷன் கூட இருக்கும். சர்ஜரி அளவிற்கு செல்லாமல் ஆரம்ப கட்டத்தில் தெரிந்து கொண்டு உடனேயே சரி பார்த்து விட வேண்டும். நாமாக மருந்து மற்றும் டயட் என்று போவதை விட மருத்துவரை அணுகுவது மிக சிறந்ததாக இருக்கும். இந்தக் கிளைண்ட் தன்னால் பரபரப்பாக இல்லாமல் இருக்க முடியவில்லை என்று அவரே சொன்னார். இவர் அரசு அதிகாரியாக முக்கிய பொறுப்பில் இருக்கிறார். நிறைய சிக்கல்களினால் அலுவலில் தினசரி ஸ்ட்ரெஸில் காணப்பட்டார். எனவே அவருக்கு ஸ்லோ சைகிளிங்க்போன்ற எக்ஸர்சைஸ் கொடுக்கப்பட்டது. வயிறு உப்புசம், புண் இருந்தால் இரவு தூங்குவதற்கும் சிரமமாக இருக்கும். உடனடியாக மோஷன் போவார்கள். எதையும் உடனே சாப்பிட முடியாது. அடிக்கடி வயிறு அதிகமாக வலிக்கும். மேலும் சில சமயம் மோஷனில் ரத்தம் கூட இருக்கும். அவருக்கு வாழ்வியல் மாற்றம் தான் முதலில் அளிக்கப்பட்டது. புரோ பயோடிக் உணவை கொடுத்து அவருக்கு ஐ. பி. டி யை தூண்டும் உணவுகளை தடை செய்யபட்டது. சூப்பில் இருந்து எந்தெந்த காய்கள் ஒத்துக் கொள்ளுமோ அதை மட்டும் கொடுத்தோம். ரீபைன்ட் ஆயில் பயன்படுத்துவது தவிர்க்கப்பட்டது.
மேலும், பழத்தில் இருக்கும் பிரக்டோஸ் என்ற கெமிக்கல் கூட பிரச்சினை கொடுக்கும் என்பதால் சில பழங்களும் தவிர்த்தே டயட் கொடுக்கபட்டது. வயிறு புண்ணாகி வலி இருந்ததினால் வெயிட் லிப்டிங் செய்து குறிப்பாக அப்ஸ் வொர்க் அவுட் செய்து அதன் பிறகு அவர் உடலிற்கு ஏற்ப ப்ரோட்டினை கொடுத்தோம். சிலருக்கு முளை காட்டிய பயிறுகள் கூட ஒத்துக் கொள்ளாது. அதனால் வேக வைத்த சிக்கன் பீஸ் கூட எடுக்கலாம்.
இப்படி டயட் மாற்றம் செய்து தூக்கத்தை முதலில் சரிப்படுத்தினோம். தூக்கத்தை நெறிப்படுத்த மொபைல் போனை குறைப்பது தான் முதற்கட்ட வழி. அதிலும் தூங்குவதற்கு முன்பு எந்த மறுநாள் குறித்த கவலை எதுவும் இல்லாமல் நிம்மதியாக தூங்க வேண்டும். சிலர் நடக்கப்போகும் விஷயத்தை யோசித்து யோசித்து தூங்காமல் இருப்பார். ஆனால் நன்றாக தூங்கினாலே மூளை நன்றாக வேலை செய்து அந்தப் பிரச்சனைக்கு தீர்வை தானாக கொடுக்க முடியும். இதே பிரச்சனை குழந்தைகளுக்கு வரும் போது கொடுக்கக் கூடாத உணவை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க வேண்டும். இதுவே பெரியவர்களுக்கு வரும்போது முழுமையாக சாப்பிடக்கூடாததை தவிர்த்து விட்டு புது உணவுகளை அப்பொழுதே அறிமுகப்படுத்த வேண்டும். இப்படி அந்த கிளைண்டுக்கு நிறைய வாழ்வியல் மாற்றத்தை கொடுக்க ஒரு 60 லிருந்து 70% ஓரளவுக்கு சரியாகி வந்தார். மோசமான தொந்தரவு இல்லமால் ஓரளவுக்கு அவரால் சமாளிக்க முடிகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)