Skip to main content

"இளமையா இருக்க டயட் இருக்கு..." இதை சாப்பிட்டாலே போதும்!

Published on 01/04/2023 | Edited on 01/04/2023

 

 Nutrition Kiruthiga Vegan Diet

 

பல்வேறு வகையான உணவுப் பழக்கவழக்கங்கள் இப்போதைய தலைமுறையினர் மத்தியில் வழக்கத்தில் இருக்கின்றன. வீகன் டயட் உணவு முறை என தற்போது பலரால் பின்பற்றப்பட்டு வருகிறது. வழக்கமான சைவ உணவு பழக்கத்தோடு பால் மற்றும் பன்னீர், தயிர், சீஸ், நெய் போன்ற பால் சார்ந்த பொருட்கள், விலங்குகளிடமிருந்து பெறப்படும் முட்டை, எண்ணெய் போன்ற உணவுகளையும் தவிர்க்கும் டயட் முறையே வீகன். அந்த வகையில் வீகன் உணவு முறையின் நன்மைகள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா விரிவாக விளக்குகிறார்.

 

அசைவ உணவுகள் உண்பது தவறல்ல. வீகன் உணவு முறை என்பது மருத்துவம் சார்ந்தது. முதிர்ச்சி குறித்த பிரச்சனைகளை இந்த உணவு முறையின் மூலம் சரிப்படுத்த முடியும். இந்த உணவு முறையின் மூலம் செல்கள் சுத்தமாகிப் புத்துணர்ச்சியை அடைகின்றன. இதன் மூலம் தைராய்டு பிரச்சனை குணமாகவும் வாய்ப்புகள் உண்டு. நோய் எதிர்ப்பு சக்தியை இது வலுப்படுத்துகிறது. விதவிதமான நிறங்களில் உள்ள பச்சை காய்கறிகளை வைத்து சாலட் செய்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.

 

இஸ்ரேல் மாதிரியான நாடுகளில் சாலட் பார்கள் வைத்துள்ளனர். அந்த அளவுக்கு ஆரோக்கியத்தின் மீது அவர்கள் அக்கறை கொண்டுள்ளனர். தினமும் ஒருமுறை சாலட் சாப்பிடுவது நல்லது. இத்தாலியன் முறையிலும் சாலட் செய்யலாம். பானிபூரிக்கு பயன்படுத்தும் சட்னியை செய்து பாதாம், கொத்தமல்லி போன்ற டாப்பிங் வைத்து சாலட் செய்யலாம். சாலட் என்பது முழுமையான ஒரு உணவு தான். காலையில் வெறும் வயிற்றில் நீர் அருந்த வேண்டும். அதன் பிறகு காய்கறிகளால் செய்யப்பட்ட ஸ்மூத்தி பருகலாம். நட்ஸ் சாப்பிடலாம்.

 

மதிய நேரத்தில் அதிக அளவிலான சாலட் சாப்பிட வேண்டும். பெரிய பாத்திரத்தில் வைத்து சாலட்டை உண்ணலாம். இதன் மூலம் மிக விரைவாக உங்கள் உடல் எடையைக் குறைக்க முடியும். இதனால் இளமை கூடும். இரவு நேரத்தில் முளைகட்டிய பயிர்கள் சாப்பிடுவது நல்லது. கடலை எண்ணெய் பயன்படுத்தக் கூடாது. அதன்பிறகு இரவு ஏழு மணி முதல் காலை ஏழு மணி வரை எதுவும் உண்ணக்கூடாது. இதை 21 நாட்கள் செய்தால் 10 முதல் 12 கிலோ வரை உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.