Advertisment

ஐயோ இஞ்சி வேண்டாம் என்பவர்களுக்கு.....

காலை இஞ்சி கடுகம்பகல் சுக்கு

மாலையில் கடுக்காய் மண்டலம் உண்ண

கோலையூன்றிய கிழவனும்

காலால் குலுக்கி நடப்பானே....

- இது சித்தர் பாடல்

நம் அன்றாட வாழ்வில் உடலில் சக்தி பெற உணவு மிகவும் அவசியமாக இருக்கிறது. அதனால் நம்மில் பெரும்பாலும் அசைவ உணவு மற்றும் சைவ உணவு சாப்பிடுபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.அதிலும் ரொம்ப காரசாரமாக உணவு எடுப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறார்கள்.

Advertisment

benefits of ginger

இதனால் வயிற்றில் அதிகமான பிரச்சனைகளை சந்திக்க காரணமாக அமைந்து விடுகிறது.இதற்கு உடனடி தீர்வு வேண்டும் என்று ஆங்கிலம் மற்றும் நாட்டு மருந்தை எந்த ஒரு ஆலோசனையும் இல்லாமல் எடுத்து பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.உதாரணமாக வயிற்றில் பிரச்சனை வந்தவுடன் ஆங்கில மருந்து எடுப்பவர்கள் "பி-காம்ப்லெஸ் " மற்றும் ஜெலுசில் எடுப்பார்கள்.நாட்டு மருந்து எடுப்பவர்கள் முதலில் தேர்ந்து எடுப்பது இஞ்சியை தான்.அப்டி இஞ்சியை எடுக்கும் பொது சரியான ஆலோசனை படி எடுக்காவிட்டால் வயிற்று புண் ஏற்படும்.

Advertisment

health tips

சரி ,எப்படி தான் இஞ்சியை பயன்படுத்துவது என்று பார்க்கலாம் .முதலில் சிறிது அளவு இஞ்சியை எடுத்து அதை சிறுது துண்டாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும்.பிறகு ஒரு சிறிய பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை எடுத்து கொள்ள வேண்டும் அதன் பின்பு அந்த பாத்திரத்தின் மேல் வாயில் ஒரு துணியால் கட்டி அதன் மேல் சிறிது துண்டாக நறுக்கிய இஞ்சியை போட வேண்டும்।பின்பு பாத்திரத்தை சூடு படுத்த வேண்டும் கொஞ்சம் கொஞ்சமாக இஞ்சியின் ஈரப்பதம் குறைந்து இஞ்சி உலர ஆரம்பிக்கும் அந்த பதத்தில் எடுத்து அதில் தேவையான அளவு தேனை கலந்து கொள்ள வேண்டும் .பின்பு இஞ்சி மற்றும் தேனை ஒரு வாரம் நன்கு ஊற வைத்து பின்பு அதனை பயன் படுத்த வேண்டும்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="1282094959"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

எந்த வேளையில் பயன் படுத்தினால் சரியாக இருக்கும் என்றால் தினசரி காலையில் வெறும் வயிற்றில் தேனில் நன்கு ஊறிய இஞ்சியை கொஞ்சம் எடுத்து கொண்டால் வயிற்றில் வரும் குடற்புண் ,பசியின்மை ,நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சனைகள் தீரும்।இஞ்சியில் இருக்க கூடிய கால்சியம் உடலில் சேமிக்க பட்டு உடல் புத்துணர்ச்சி மற்றும் முகப்பொலிவை கொடுக்கும். இஞ்சியே வேணாம் என்று நினைப்பவர்கள் கொஞ்சம் இஞ்சியை நினைத்து பாருங்கள் அந்த இஞ்சி உங்கள் உடலை பார்த்து கொள்ளும்.

Health care health ginger pakkooda
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe