ADVERTISEMENT

முலாம் பழத்தில் நிறைந்துள்ள முத்தான நற்பலன்கள்!

07:22 PM Apr 07, 2020 | suthakar@nakkh…

முலாம் பழத்தில் உடலுக்கு தேவையான ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. மூல நோய் உள்ளவர்களுக்கு முலாம் பழம் ஒரு வரப்பிரசாதம். வெயில் காலத்தில் உடலில் ஏற்படும் பல வகையான தோல் பாதிப்புகளை தீர்ப்பதில் முலாம் பழம் முக்கிய இடத்தினை வகிக்கிறது. இந்த பழத்தின் சதை பகுதியுடன் சிறிதளவு தேன் கலந்து உண்டு வர வாய்ப்புண் மற்றும் தொண்டைப்புண் குணமடையும். பித்தத்தை நீக்கும் ஆற்றல் முலாம் பழத்திற்கு மற்ற பழங்களை விட அதிகம் உள்ளது. அஜீரணத்தை குறைத்து பசியை ஏற்படுத்தும் ஆற்றல் இதற்கு அதிகம் உண்டு.

ADVERTISEMENT



இது சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படும். இது, சிறுநீர் தாரைகளில் ஏற்படும் எரிச்சலை கட்டுப்படுத்துகிறது. தோல் நீக்கிய முலாம் பழத்துடன் சிறிதளவு பனங்கற்கண்டு, சிறிதளவு குங்குமப் பூ சேர்த்து மில்க் ஷேக்காக காலை உணவிற்கு பயன்படுத்தலாம். முலாம் பழத்தின் சதை பகுதியோடு சிறிதளவு சீரகப்பொடியை சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டி குடித்தால் உடலுக்கு குளிர்ச்சி கிடைப்பதுடன் உடலுக்கு புது உற்சாகமும் கிடைக்கும். இதில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT