Skip to main content

என்ன குழந்தைகளுடன் அம்மா அமர்ந்து சாப்பிடக் கூடாதா ….

Published on 04/02/2019 | Edited on 04/02/2019

இந்த தலைப்பைப் பார்த்த உடனே நிறைய பேருக்கு எழும் கேள்வி என்ன இப்படி எழுத்திருக்கிறான் இவனுக்கு அறிவு இல்லையா ,இவன்  தன் அம்மாவுடன் எப்பயுமே அமர்ந்து ஒன்றாக உணவு உண்பதில்லை போல என்று சிந்திக்க தோணும் .உங்களது சிந்தனை மற்றும் கேள்விகள் நியாயமான ஒன்று தான் .அப்புறம் ஏன் இப்படி சொல்றிங்க என்று எண்ணுபவர்களுக்கு சற்று இதை கொஞ்சம் வாசித்துப் பாருங்கள் உங்களுக்கு கொஞ்சம் நியாயமாக தோன்றும்.
 

feeding food



எப்பொழுது ஒரு அம்மா தன் குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு உணவு ஒழுங்காக ஜீரணமாவது கிடையாது. என்ன என் குழந்தையுடன் நான் அமர்ந்து சாப்பிட்டால் எனக்கு எப்படி ஜீரணம் ஆகாது என்று தாய்மார்கள் கேட்பீர்கள். ஒரு அம்மா தன் குழந்தையுடன் அமர்ந்து சாப்பிடும் பொழுது, அவர் தன் உணவில், கவனம் செலுத்துவதை விட்டு விட்டு குழந்தையை மட்டுமே கவனித்துக் கெண்டிருப்பார். குழந்தையை அதட்டுவார். “சாப்பிடும் போது பேசாதே கறிவேப்பிலையைச் சாப்பிடு, ஒழுங்காக உட்கார்ந்து சாப்பிடு, சட்னி தொட்டுக் கொள், கீழே தொடாதே  இப்படி அந்த குழந்தையைக் கவனித்துக் கொண்டே இருப்பார்கள்.
அதனால் குழந்தைக்கு ஊட்டிக் கொண்டே  ஒரு தாய் தானும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தால் அந்த தாயினால் தான் உண்ணும் உணவில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது  அதனால்  தாயின் உணவு ஒழுங்காக ஜீரணம் ஆகாது. எனவே தாய்மார்கள் முதலில் உங்கள் குழந்தைக்கு மற்றும் உங்கள் வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்களுக்கும் பரிமாறி விட்டு அவர்கள் திருப்தியாக சாப்பிடுகிறார்களா என்று கவனித்து விட்டு சந்தோஷமாக நீங்கள் தனியாக உட்கார்ந்து சாப்பிடுங்கள் அல்லது வீட்டில் உதவிக்கு கணவன் மற்றும் கொஞ்சம் உதவி செய்யக் கூடிய அளவுக்கு பெரிய பிள்ளைகள் இருந்தால் அவர்களை பரிமாறச் சொல்லி விட்டு நீங்கள் உணவு சாப்பிடுங்கள் .

 

food feeding to child


அந்த காரணத்திற்காக தான்  தாய் தன் குழந்தைகளுடன் உட்கார்ந்து சாப்பிடக் கூடாது என்று கூறினோம் . மேலும் மற்றவர்களுக்குப் பரிமாறிக் கொண்டே சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிடும் பொழுது கவனம் தன் உணவை விட்டு விலகி மற்றவர்கள் ஒழுங்காகச் சாப்பிடுகிறார்களா என்பதிலேயே இருப்பதால் நம் உணவு ஒழுங்காக ஜீரணம் ஆவதில்லை. நம்முடைய அணைத்து வீட்டு வேலைகளையும் செய்து நமக்காக மற்றும் நம்மளுடைய நண்மையை மட்டுமே எண்ணிக் கொண்டு இருக்கும் நம் தாய் அவர்களின் உடல் நிலையில் நாமும் கவனும் செலுத்தலாமே ...

Next Story

13வது நோன்பு நாளில் சுடச்சுட ஆவி பறக்க தயாரான பிரியாணி

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Ready-to-eat Biryani to bake on the 13th day of Lent

ஏப்ரல் மாதம் ரம்ஜான் பண்டிகை வருவதையொட்டி உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து வருகின்றனர். சூரியன் உதயம் முதல் அந்தி சாயும் வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் நோன்பு இருப்பர். மாலை 6 மணிக்கு மசூதிக்கு சென்று நமாஸ் செய்துவிட்டு உணவு உண்பார்கள். காலை 5 மணிக்கு முன்பாக உணவு உண்பதை நிறுத்திவிடுவர். நோன்பு காலத்தில் இயலாத மக்களுக்கு மதம் பார்க்காமல் உதவுவார்கள்.

வேலூர் கோட்டை எதிரே 400 கிலோ சிக்கன் கறி கொண்டு சுடச் சுட ஆவி பறக்க நோன்பு பிரியாணி தயார் செய்யப்பட்டது. வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் பிரியாணி சமைத்து சுமார் 2000 வீட்டுக்கு பகிர்ந்து அளித்தனர்.

சனிக்கிழமை மாலை 5 மணியிலிருந்து பிரியாணி தயார் செய்யும் பணி தொடங்கிய நிலையில் நள்ளிரவு ஒரு மணி வரை பிரியாணி சமைக்கப்பட்டது. இந்தப் பணியில் சுமார் 130 பேர் ஈடுபட்ட நிலையில், மக்கான் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சுமார் அதிகாலை 2.30 மணிக்கு முன்பு பகிர்ந்தளிக்கப்பட்டது. ரம்ஜானை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் அதிகாலையில் மக்கான் பகுதியில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர்.

Next Story

டன் கணக்கில் பிடிபட்ட போலி இஞ்சி பேஸ்ட்; பொதுமக்களே உஷார்

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
Tons of fake ginger paste caught; Public beware

உணவு பொருள்களின் தரம் மற்றும் தரமற்ற உணவுப் பொருட்கள், போலியான கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் குறித்த வீடியோக்கள், தகவல்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவி வரும் நிலையில், ஹைதராபாத்தில் டன் கணக்கில் போலி இஞ்சி பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹோட்டல்கள் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் பொருட்கள் விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அடிக்கடி திடீர் சோதனையில் ஈடுபட்டு தரம் இல்லாத பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடைகளில் பிரபல நிறுவனங்களின் பெயரில் கிடைக்கும் இஞ்சி பேஸ்ட் போல ஹைதராபாத்தில் சில நபர்கள் பாக்கெட்டுகளில் போலியாக இஞ்சி பேஸ்ட் தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் சென்ற அதிகாரிகள் அதை பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள பொருட்களின் மதிப்பு 2 லட்சம் ரூபாய் என்பது தெரியவந்துள்ளது. உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் செயற்கையான உணவுப் பொருட்கள் மற்றும் வண்ணம், பசை ஆகியவற்றை கலந்து இந்த போலி இஞ்சி பேஸ்ட் தயாரிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 3 டன் அளவில் போலி இஞ்சி பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.