Skip to main content

கரோனாவிலிருந்து மீண்டவர்கள் எதிர்கொள்ளும் 28 உடல் உபாதைகள் ! ஆய்வில் வெளிவந்த தகவல்....

Published on 19/01/2021 | Edited on 19/01/2021

 

most common post covid syndrome

 

சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கரோனா என்கிற கொடிய நோய், உலகின் பல்வேறு நாடுகளில் பரவி பல உயிர்களைக் காவு வாங்கியுள்ளது. இவற்றுள், குணமடைந்து வீடு திரும்பியவர்களில் 2% மக்கள் ஏராளமான பின்விளைவுகளைச் சந்தித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

இதற்கு முன்பாக தேசிய புள்ளி விவரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) வழங்கிய தரவுகளின் படி, கரோனாவிலிருந்து மீண்டவர்களில் ஐந்து பேரில் ஒருவருக்கு ஐந்து வாரங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு லேசானது முதல் கடுமையான கரோனா நோயின் (போஸ்ட்  கோவிட் -19 சின்ட்ரோம்) அறிகுறிகள் இருந்துள்ளன.

 

ஓஎன்எஸ் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், 10 பேரில் ஒருவருக்கு கரோனா நோயின் (போஸ்ட்  கோவிட் -19 சின்ட்ரோம்) அறிகுறிகள் 12 வாரங்கள் அல்லது அதற்கு மேல் இருந்துள்ளன.

 

இதுகுறித்து சமீபத்திய ஆய்வில், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் கிளினிக்கல் எக்ஸலன்ஸ் (நைஸ்) நிறுவனம் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் சந்திக்கும் 28 உடல் உபாதைகளைக் கண்டறிந்து வெளியிட்டது. அவை 7 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

 

1. சுவாச பிரச்சனைகள்: வறட்டு இருமல், மூச்சுத் திணறல் ஏற்படும்.

 

2. இருதய அறிகுறிகள்: நெஞ்சு வலி, படபடப்பு, மார்பில் இறுக்கம் ஏற்படும்.

 

3. நரம்பியல் அறிகுறிகள்: வலி, தூக்கமின்மை, தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம்,  போன்றவை.

 

4. இரைப்பை குடல் அறிகுறிகள்: குமட்டல், வயிற்றுப்போக்கு, பசியின்மை, வயிற்று வலி,  தசைக்கூட்டு அறிகுறிகள், மூட்டு வலி, தசை வலி உள்ளிட்டவை.

 

5. உளவியல் / மனநல அறிகுறிகள்: மனச்சோர்வு, கவலை போன்றவை.

 

6. ENT தொடர்பான அறிகுறிகள்: வாசனை மற்றும் சுவையின்மை, தொண்டை வலி, காதிரைச்சல் (டின்னிடஸ்), காது வலி, தலைச்சுற்றல் உள்ளிட்டவை.

 

7. தோல் அறிகுறிகள்: சில தடிப்புகள் தோன்றலாம். இவற்றைத் தவிர்த்து, உடல் சோர்வு, காய்ச்சல் போன்றவையும் முக்கியமானவை.

 

கரோனா நோயினைக் கட்டுப்படுத்துவதற்கு உலகின் பல்வேறு நாடுகளில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதேபோன்று, இந்தியாவிலும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியைக் கடந்து தற்போது, படிப்படியாகக் குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றது. இதுபோன்ற சூழலில், கரோனாவின் புதிய வடிவம் மக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மனித இனம் மீண்டெழும் என்ற நம்பிக்கையோடு மக்கள் காத்திருக்கின்றனர். 

 

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.