Skip to main content

கெமிக்கல்கள் இல்லாத ஃபீட்ஸா செய்யலாம் வாங்க...

செயற்கை வண்ண சாயங்கள், வயிறை கெடுக்கும் சோடா உப்புகள்  இல்லாமல் ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே பீட்சா செய்து நம் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

தேவையான பொருள்கள்:

மைதா - 250-கிராம்.  உப்பு , வெண்ணெய், பேக்கிங் பவுடர், சிறிது நெய்,  சீனி அல்லது பனங்கற்கண்டு, சிறிது ஈஸ்ட் சுடு தண்ணீரில் கலந்து கொள்ளவும்.

பீட்சாவுக்குள் பரப்பி வைப்பதற்கு:

தக்காளி - 300 கிராம்

குடை மிளகாய் - 1 

பச்சை மிளகாய் கரைசல் - 1 டீஸ்பூன் 

பூண்டு - 5 பல் 

வற்றல் தூள் - 1  டீஸ்பூன் 

வெள்ளரிக்காய் - 1 

பெரிய வெங்காயம் - 1 

சீஸ் - 50 கிராம்

இஞ்சி - சின்ன துண்டு

சமையல் உப்பு - மிக குறைவான அளவு

ஈஸ்ட் தயார் செய்து மைதா மாவில் பேக்கிங் பவுடர் சலித்து வெண்ணெய் உப்பு ஈஸ்ட் கலவை சேர்த்து நன்கு கலந்து கேக்குக்கு  தயாரிப்பது போல மாவு தயார் செய்து கொண்டு கொஞ்சம் அகண்ட பெரிய தட்டு போன்ற பாத்திரத்தில் உள் பக்கம்  சுற்றி நெய் தடவி, தயார் செய்த மாவை விரல் கனம் இருக்கும்படி பரத்தி விரித்து வைக்கவும். வெண்ணெய் தடவிய மாவை மைக்ரோ ஓவனில் வைத்து முக்கால் பங்கு வேக வைத்து எடுத்து தனியே வைக்கவும்.

வெங்காயம் பூண்டு இஞ்சி தக்காளியை சின்னஞ்சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். சின்ன வாணலியில் நெய் விட்டு வெங்காயம் பூண்டு இஞ்சி போட்டு வதக்கி பின்னர் தக்காளிதுண்டுகள் போட்டு வதக்கவும். உப்பு வற்றல் தூள் போடவும் . கொஞ்சம் கெட்டியானவுடன் இறக்கி விடவும் . தக்காளி வெங்காயம் வெள்ளரிக்காய் அழகாக வட்ட வடிவில் வெட்டி ஏற்கனவே வேக வைத்திருக்கும் பீட்சாவின் உள்ளே காய்கறிகளை அடுக்கி தக்காளி சாஸ் ஊற்றி  சீஸை துருவி மேலே தூவிக் கொள்ளவும்.  வெண்ணெய் 2 டீஸ்பூன் மேலே தடவி மறுபடியும் ஓவனில் வைத்து தேவையான அளவு சூட்டில் வேக வைத்து இறக்கி விடவும். ஆரோக்கியமான பீட்சா தயார்.
       

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...