ADVERTISEMENT

கல்லீரல் இவ்வளவு வேலைகளை செய்கிறதா? - மருத்துவர் சி.கே. நந்தகோபாலன் பகிர்ந்த தகவல்

02:14 PM Oct 21, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

'ஓம் சரவண பவ' யூ-டியூப் சேனலுக்கு மருத்துவர் சி.கே. நந்தகோபாலன் சிறப்பு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "தேவையில்லாமல் தீமை பயக்கக்கூடிய நுண் கிருமிகளை சாப்பிட்ட பிறகு போகிற கழிவுகள், நமக்கு விஷத் தன்மையாக அமைகிறது. இந்த தேவையில்லாத நுண்கிருமிகள் அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி ஆகிய நாட்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். அப்போது, உடலுக்குள் உணவு செலுத்தக் கூடாது என்பதால் தான் அன்றைக்கு விரதம் இருக்கிறார்கள். இது ஒரு வாழ்க்கை முறை. ஒரு சமுதாயத்தில் மக்கள் கூடி வாழ்கிறோம்.

மிருகங்கள் மிகவும் புத்திசாலியானது. மிருகங்களுக்கு மருத்துவர்கள், மருத்துவமனைகள், மருந்துகள் ஆகியவை இல்லை. மிருகங்கள் தனது உடலுக்குத் தேவையானதை எடுத்துக் கொள்கின்றன. காட்டுவாசிகள் எந்த புத்தகத்தையும் படிப்பதில்லை. அவர்களுக்கு தெரியும், தனது உடலுக்கு கோளாறு ஏற்பட்டால் என்ன செய்து குணப்படுத்த வேண்டும் என்பது. உலகத்தில் 28% மனிதர்கள் மட்டுமே இன்றைக்கு இருக்கக் கூடிய நவீன மருத்துவத்தை நம்பி உள்ளனர். இன்னும் கொஞ்சம் காலம் சென்றால் அதுவும் குறைந்து விடும். ஏனென்றால் அவர்களிடம் பணம் இல்லை.

ஒரு மனித அணு என்பது நம்மை போன்றது. அதற்கு எல்லாமே தெரியும். இறந்தவுடன் ஏன் அழகாக இருக்கிறார்கள் என்றால், அவர்களின் முகத்தில் கலை வரும். இறந்தவர்களிடம் அமைதி, அழகு, சிரிப்பு இருக்கும். ஏனென்றால், இறந்ததின் ஆனந்தத்தை அவர்கள் அனுபவிக்கிறார்கள். இறப்பு என்பது ஆனந்த மயமானது. தீமை பயக்கக்கூடிய மைக்ரோ ஆர்கனிசம் இறந்தவரின் உடலை சாப்பிட ஆரம்பிக்கும். அதனால்தான் உடல் துர்நாற்றம் வீசுகிறது. இந்த உலகம் நுண் கிருமிகளுக்கு சொந்தமானது.

ஒரு தக்காளியில் மில்லியன் கணக்கில் மைக்ரோ ஆர்கனிசம் உள்ளது. தக்காளியை அப்படியே சாப்பிடக்கூடாது. தக்காளியை சமையல் செய்வதன் மூலம் மைக்ரோ ஆர்கனிசம் இறந்துவிடுகிறது. அதையும் மீறி உணவில் கலந்து நமது உடலுக்குள் சென்றால் வயிற்றுக்குள் இறந்துவிடும். வயிறு அமிலத்தன்மை வாய்ந்தது. கல்லீரல் 500- க்கும் மேற்பட்ட வேலைகளை செய்கிறது. கல்லீரலுக்கும், மூளைக்கும் இடையே அதிக பரிமாற்றம் நடைபெறுகிறது" எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT