Advertisment

சிறு வயதில் வரும் ஃபேட்டிலிவர் பிரச்சனைக்கு தீர்வு? - ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்கம்

 Kirthika Tharan | Nonalcoholicfatty |

17 வயது பையனுக்கு உடல் எடையோடு இருந்தநான் - ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் அளவைக் குறைத்தது பற்றி ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்குகிறார்.

Advertisment

வெளிநாட்டில் இருக்கும் 17 வயது பையனுக்கு உடல் எடை அதிகமாகி கூடவேநான்-ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் இருந்தது. அதிக உடல் எடை அவனுடைய லிவரில் போய் கொழுப்பாக தங்கி இருந்தது. இதுவே சிம்பிள்லிவர் பேட்டிஎன்றால் லிவர்கெட்டுப் போகாது. நான்-ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்போது அது லிவரை பாதிக்கும். இந்த ஃபேட்டி லிவரை எந்த ஸ்டேஜ்ஜில் உள்ளது என்று பிளட் ரிப்போர்ட் மூலமும், லிவர் என்சைம் மாறுபாட்டை அல்ட்ரா சவுண்ட் வைத்து உணரலாம். நிறைய உடல் எடை அதிகம் உள்ள நோயாளிகள் ஏற்கனவே 20 சதவீதம் லிவர் பாதிப்புடன்தான் இருப்பார்கள்.

Advertisment

முதலில் குழந்தைகளுக்கு ஸ்டிரெஸ் அதிகமாக பெற்றோர்களும் முக்கிய காரணமாக இருக்கின்றனர். சர்க்கரை சாப்பிடக்கூடாது என்றால் உடனேபெற்றோர்கள் எந்த சுகரும் பழங்களும் கொடுக்காமல் நிறுத்தி அவர்களுக்கு கிரேவிங்கை தான் அதிகப்படுத்துகின்றனர்.அந்த பையன் அதிகமாக சாக்லேட் வகைகள், சாதம் , பலகாரம் போன்றவை அதிகம் எடுத்திருக்கிறான். முதலில் ஃபேட்டி லிவருக்கு சாக்லேட் தான் அதிக பாதிப்பை கொடுக்கும். அந்த பையன் இருந்தது மிடில் ஈஸ்டர்ன் பக்கம். வெதர் சரியாக இல்லாததால் வீட்டில் சரியான உடற்பயிற்சி நிபுணர் வைத்து வீட்டிலேயே ஆக்டிவிட்டீஸ்கொடுக்கப்பட்டது. பேக்கரி ஐட்டம் சாக்லேட்என்று கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டுடிடாக்ஸ் டிரிங், வாட்டர் தெரபி உட்பயிற்சிகளையும் கொடுக்கும் போது ஆரம்ப நிலையிலே நன்றாக அந்த ஃபேட்டி லிவர் பாதிப்பு குறைவதை பார்க்க முடிந்தது.

இந்த ஃபேட்டி லிவர் ஓரளவு தான் ரிவேர்சபில். நான்-ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவருக்கு நம் லைஃப் ஸ்டைல், தூக்கம்,உணவு முறை மூலமாக ஓரளவு குறைக்க முடியும். இதுவே ஆல்கஹாலிக் வகை என்றால் கண்டிப்பாக மது பழக்கத்தை நிறுத்த வேண்டும். அதுவே வெறும் சாதாரண ஃபேட்டி லிவர் என்றால் கொழுப்பு நிறைந்த உணவுகளை குறைக்க வேண்டும். கொழுப்பை நேரடியாக எடுக்காவிட்டாலும் நம் சாப்பிடும் கார்போஹைட்ரேட் தான் கொழுப்பாகவும் மாறும். எனவே கார்போஹைட்ரேட்டும் குறைவாக இருக்க வேண்டும். சர்க்கரையும் குறைத்து அதிகமாக தண்ணீரை எடுக்க வேண்டும். அதன் மூலமாக உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். இதை முறையாக கடைப்பிடித்ததன் மூலம் அந்த சிறுவன்நன்றாக உடலையும் குறைத்து ஒபிசிட்டி தொந்தரவில் இருந்தும் வெளிவந்து ஃபேட்டி லிவர் தொந்தரவு நீங்கி நன்றாக சரியானது.

Nutrition
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe