Kirthika Tharan - diet tips - mediterranean diet

புதிதாக ஒரு டயட் முறையைப் பற்றிஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்

Advertisment

உலகில் மிக ஆரோக்கியமான டயட் முறை எது என்பது குறித்த சந்தேகம் ஆராய்ச்சியாளர்களுக்கு வந்தது. இதனால் 7000 பேரை வைத்து ஒரு ஆராய்ச்சியை நடத்தினார்கள். அவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்பட்டதை அவர்கள் கண்டுபிடித்தனர். அவர்கள் பரிசோதனை செய்து பார்த்தது மெடிட்டரேனியன் முறையைத் தான். இந்த முறையில் நட்ஸ், பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், இனிப்பான பழங்கள், சிக்கன், முட்டை, வெண்ணெய், சீஸ் ஆகியவற்றை சேர்த்துக்கொள்வார்கள்.

Advertisment

இதில் சர்க்கரை சேர்க்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக தேன் சேர்த்துக்கொள்ளலாம். இயற்கையான முறையில் கிடைக்கும் இறைச்சியை மட்டுமே அவர்கள் பயன்படுத்துகிறார்கள். உணவில் மீன் சேர்த்துக்கொள்ளலாம். துரித உணவுகள் எதையும் எடுத்துக்கொள்ளக் கூடாது. இதை நம்மால் தொடர்ந்து பின்பற்ற முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். கடல் உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம். இதை தினமும் நம்மால் பின்பற்ற முடியும் என்பது தான் இதன் சிறப்பு அம்சம்.

சுத்திகரிக்கப்பட்ட கோதுமையை நாம் பயன்படுத்தக் கூடாது. இந்த உணவு முறையை முழுக்க முழுக்க இந்தியத் தன்மைக்கு மாற்றுவது சற்று கடினம். பாரம்பரியமான இந்தியப் பழங்கள் ஆரோக்கியமானவை. உடல் உழைப்பு இப்போது அதிகம் நமக்கு இல்லை என்பதால் கார்போஹைட்ரேட் அதிகம் தேவைப்படுவதில்லை. இதனால் முழு தானியங்கள், கடல் உணவுகள், நட்ஸ் ஆகியவற்றை நாம் அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம். கொழுப்புள்ள மீன், நண்டு, இறால் ஆகியவற்றை உண்ணலாம்.

உணவில் தயிர் சேர்த்துக்கொள்ளலாம். சிறுதானியங்கள், சிவப்பு அரிசி ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். பட்டாணி, பருப்பு வகைகள் ஆகியவற்றை நாம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அதிகமான இனிப்புள்ள பழங்களை எப்போதாவது தான் நாம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மெடிட்டேரியன் டயட் என்பதை இந்திய முறைக்கு நாம் மாற்றிப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் உடல் பருமன் நிச்சயம் குறையும். குழந்தைகளுக்கும் இந்த உணவு முறை மிகவும் நல்லது. மருத்துவ உலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நல்ல உணவு முறை தான் இது.