publive-image

Advertisment

'ஓம் சரவண பவ' யூ-டியூப் சேனலுக்கு மருத்துவர் சி.கே. நந்தகோபாலன் சிறப்பு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "1750- ஆம் ஆண்டுக்கு பிறகு மனிதன் தேடுகிறான்., பனியைப் பார்க்கும் மனிதன் குளிர்சாதனப் பெட்டி போன்று ஒன்று தேவை எனத்தேடுகிறான். அப்போது, விஞ்ஞானம் வளரவில்லை என்றாலும், ஐஸ் கட்டிகளை வெட்டி எடுத்து வந்து, தக்காளியை அதில் வைத்து மூடி வைக்கின்றனர். எப்படியாவது குளிர்சாதனப் பெட்டியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று மனிதன் யோசிக்கிறான். அதன் தொடர்ச்சியாக, 1834- ஆம் ஆண்டு முதல் குளிர்சாதனப் பெட்டியைக் கண்டுபிடித்து விட்டான்.

1923- ஆம் ஆண்டு வீட்டு உபயோகத்திற்கான குளிர்சாதனப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. 1950- களுக்குப் பிறகு இந்தியாவிலேயே குளிர்சாதனப் பெட்டி வந்துவிட்டது. குளிர்சாதனப் பெட்டியில் காய்கறிகள், பழங்களை வைக்கும்போது, அதில் இருக்கும் சத்துகள் 24 மணி நேரத்தில் காணாமல் போகும். உதாரணமாக, 10 ஆரஞ்சு பழங்கள் மற்றும் 10 கமலா பழங்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துதினமும் ஒவ்வொன்றாக எடுத்து உறிக்க வேண்டும். அதன் உள்ளே இருக்கும் சொளையில் நிறம் குறைந்துகொண்டே வரும். 10வது நாளில் பழத்தின் சொளையின் நிறம் வெள்ளையாக இருக்கும்.

Advertisment

கிராமப்புறத்தில் உள்ள வீடுகளில்சமையலறையின் கார்னர் பகுதியில் ஒரு அடிக்கு செங்கல்லை அடுக்கி, அதன்மீது ஆற்று மணல் போடப்பட்டு, மணலில் தண்ணீரை தெளித்து, அதன் மீது காய்கறிகளைவைத்துவிட்டால், அவை கெடாமல் ஃப்ரஷ்ஆன காய்கறிகளாக இருக்கும்.இந்த முறையை கிராமத்தில் மக்கள் இன்றும் பயன்படுத்தி வருகின்றனர். குளிர்சாதனப் பெட்டி வந்ததால், உடல் கூறு மற்றும் உடல் இயக்கம், இதனுடைய சீர்கேடுகள் அதிகமாகி இருக்கிறது. இப்போது நாம் குளிர்சாதனப் பெட்டியைதான் நம்பியுள்ளோம்.

1990- களுக்குப் பிறகு மைக்ரோவேவ் ஓவன்வருகிறது. 2.4GHZ 'Radio Frequency' Radional- ல் வேலை செய்கிறது. மைக்ரோவேவ் ஓவனை மூடிதான் ஸ்டார்ட் பண்ண முடியும். ஏனென்றால், திறந்து ஸ்டார்ட் செய்வதுபோல், அதன் சர்கியூட் வைத்திருந்தால், திறந்துவிட்டு பட்டனை கிளிக் செய்யும்போது, பக்கத்தில் நின்றுகொண்டிருந்தால்நமது இரண்டு கண்களும் எறிந்துவிடும். கண் பார்வை போய்விடும். மீதமிருந்த உணவை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, பின்னர் பிளாஸ்டிக் பாத்திரத்தில் வைத்துமைக்ரோவேவ் ஓவனில் இரண்டு நிமிடங்கள் சூடு செய்யப்படுகிறது. சாதத்தில் உள்ள நீர்த்துளி வழியாக சூடாகி பின்னர், பாத்திரத்தில் உள்ள உணவு முழுவதும் சூடாகிறது" எனத் தெரிவித்துள்ளார்.