Skip to main content

"இதைப் பின்பற்றினால் மழையில் எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் நனையலாம்... சளிப் பிடிக்காது"- மருத்துவர் அருணாச்சலம் விளக்கம்

Published on 15/10/2022 | Edited on 15/10/2022

 

"If you follow this, you can get wet in the rain for as long as you want... you will not catch a cold" - Dr. Arunachalam explains!

 

'நக்கீரன் 360' யூ-டியூப் சேனலுக்கு மருத்துவர் அருணாச்சலம் தொடர்ச்சியாக நேர்காணல் அளித்து வருகிறார். அப்போது அவர் கூறியதாவது, "காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கிற காரணத்தால், வைரஸ் கிருமிகள் தானாகவே காற்றில் பரவக்கூடியது. இது மழைக்காலங்களில் சற்று அதிகமாக இருக்கும். குளிரை நமது உடலில் ஒரு அளவுக்கு மேல் எடுத்துக் கொள்ளக் கூடாது. 28 டிகிரி செல்ஸியஸ் என்பது ரூமின் வெப்பநிலை. அப்போது, நமக்கு ஏ.சி.,எதுமே தேவைப்படாது.  அந்த வெப்பநிலைக்கு கீழே சென்றால், அது சில்னெஸ் ஆகும். அந்த சில்னெஸ் என்ன செய்யுமென்றால், நமது உடலில் உள்ள ரத்தக் குழாய்களில் சுருக்கத்தை ஏற்படுத்தும். 

 

கையில் காயம் ஏற்பட்டால் ஐஸ்கட்டியை எடுத்து, காயம் ஏற்பட்ட இடத்தில் வைத்தால் ரத்தம் நிற்க வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஏனென்றால், அந்த சில்னெஸ் ரத்தக் குழாய்களில் சுருக்குவது தான் ஆகும். குளிர்ந்த காற்று என்பது எப்போதும் சுவாசப் பாதைகளைத்தான் பாதிக்கும். மாலை நேரங்களில் தூசி, புகை எல்லாம் கீழே தான் இருக்கும். இதனால் தான் மாலை நேரங்களில் நாம் செல்லும் போது, மூக்கடைப்பு, ஜலதோஷம் உள்ளிட்டவை ஏற்படுகிறது. அத்துடன், குளிர்ந்த காற்று வாய் வழியாக உள்ளே சென்று, தொண்டையில் பாதிப்பு  ஏற்படுத்தலாம்.

 

அதேபோல், குளிர்சாதனப் பெட்டியில் இருந்து எடுக்கப்பட்ட திட, திரவப் பொருட்களை உடனே சாப்பிட்டால், ரத்தக் குழாய்கள் தொண்டையில் சுருங்க ஒரு நிமிடம் போதும், அங்குள்ள கிருமிகள் நிறையவே இருக்கும். கிருமிகள் உயிர்த்தெழுந்து தொண்டையில் பாதிப்பு ஏற்படும். இதைத் தவிர, இருமல், தும்பல் எல்லாமே சுவாசப் பாதை நோய்கள், இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு காற்று மூலமாகவே பரவக் கூடியது. சளி கிருமிகளில் வைரஸ், பாக்டீரியா, ஃபங்கஸ் உள்ளிட்ட அனைத்தும் இருக்கிறது. இந்த கிருமிகள் அனைத்துமே சுவாசப் பாதைகளைப் பாதிக்கக் கூடியது. 

 

இந்த கிருமிகள் பாதிக்கும் போது, எந்த உறுப்புகளைப் பாதிக்கிறதோ, அதைப் பொறுத்து அறிகுறிகள் இருக்கும். கரோனாவில் சொன்னது போல, மூக்கில் வந்தால் மூக்கடைப்பு, அது தொண்டைக்கு போகும் போது தொண்டை வலி, முழுங்கும் போது ஏற்படும் வலியும், வேதனையும் ஏற்படுகிறது. தொண்டையில் இருந்து காதுக்கு இரண்டு டூயுப் செல்கிறது. தொண்டையில் ஏற்படும் பாதிப்புக்கு உடனடியாக வைத்தியம் பண்ணாமல் விட்டுவிட்டால், எந்த பக்கம் உறங்குகிறோமோ, அந்த பக்கம் காதுக்கு சென்று காது வலி ஏற்படும். எனவே, சளி மூக்கில் வரும் போதே குணப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால், அவை மோசமான விளைவுகளை தரும். 

 

மழை நனைந்தால் சளிப் பிடிக்கும் என்பது கிடையாது. மழையில் நனைந்து வீட்டிற்குள் சென்றால், உங்கள் உடல் அதிகமான குளிர்ச்சியில் இருக்கும். பின்னர், நீங்கள் தலையைக் கூட காய வைக்காமல், உடனடியாக டிவி போட்டுக் கொண்டு அமர்ந்து, ஃபான் காற்று வாங்கினால், உடலில் அதிகமான குளுமை ஏற்படுகிறது. எனவே, மழையில் நனைந்தால், பாத்ரூமுக்கு என்று தலை முதல் கால் வரை சோப்பு போட்டு நன்கு கழுவி, இரண்டு துண்டுகளைப் போட்டு நன்றாக துடைத்து விட்டு, ஆடை அணிந்து கொண்டு, பின்னர் சூடாக டீ ஒன்றை குடிக்க வேண்டும். பின்பு, அறைக்கு சென்று நன்றாக போர்வையைப் போர்த்தி 10 நிமிடங்கள் பேன் இல்லாமல் உறங்கினால், குளுமை குறையும், உடல் சற்று சூடாகும். இதனால் சளியே பிடிக்காது" எனத் தெரிவித்தார்.