memory

சில விஷயங்களை நம்மால் எளிதாக நினைவுபடுத்திக் கொள்ள முடியும். சில விஷயங்களை நினைவுபடுத்திக் கொள்வது கடினமாக இருக்கும். கடினமான விஷயங்களை, ஏதேனும் எளிதான ஒன்றோடு சம்பந்தப்படுத்தி மனதில் பதியச் செய்து விட்டால், பிறகு அதை எளிதில் நினைவுக்கு கொண்டுவர முடியும்.

சில வார்த்தைகளை நினைவில் வைத்துக்கொள்ள, அந்த வார்த்தைகளைப் போன்று ஒலிக்கும் எண்களோடு சம்பந்தப்படுத்தி வைத்துக் கொள்வது ஒரு வழி. வார்த்தைகளை நினைவு படுத்த, குறிப்பிட்ட எண்களை நினைத்துக்கொண்டால் போதும். வார்த்தைகள் நினைவுக்கு வந்து விடும். உதாரணமாக சில எண்களும், அவற்றோடு சத்தத்தில் ஒத்துப் போகும்வார்த்தைகளும் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

One - Sun

Two - Shoe

Three - Tree

Advertisment

Four - Door

Six - Sticks

Seven - Heaven

Advertisment

Eight - Gate

Nine - Fine

Ten - Hen

memory power

சில எண்கள் சில விஷயங்களை நினைவுபடுத்தும். உதாரணமாக 14 என்றஎண், இது பிப்ரவரி 14, காதலர் தினம் என்ற விஷயத்தை நினைவுபடுத்தலாம் அல்லது ராமன் 14 வருடம் சீதையோடு சேர்ந்து காட்டுக்குப் போனதைநினைவுபடுத்தலாம். இது போன்று எண்களும் அவற்றோடு நினைவுக்கு வரும் சில விஷயங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன...

16 ஸ்வீட் சிக்ஸ்டீன்

18 அடல்ட்ஸ் ஒன்லி

25 வெள்ளி விழா

50 பொன் விழா

60 வைரவிழா

100 நூற்றாண்டு விழா

கதையாக நினைவில் வையுங்கள்...

தனித்தனியான வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொள்ள, அவற்றை ஒரு கதையைப் போல இணைத்து, நினைவில் வைத்துக் கொள்ளலாம். உதாரணமாக, குதிரை, வண்டி, ஐஸ்கிரீம், திராட்சைப் பழம், பந்து என்று சம்பந்தமில்லாத சில வார்த்தைகளை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம்.

அதை இப்படி இணைக்கலாம்: “திராட்சைப் பழத்தையும் ஐஸ்கிரீமையும் சாப்பிட்டு விட்டு, அவன் குதிரை வண்டியில் ஏறிச் சென்றான். வழியில் ஒரு பந்து கிடப்பதைப் பார்த்தான்”.

சில விஷயங்களை நாம் அன்றாடம் புழங்கும் மிக நன்கு தெரிந்த ஒரு இடத்தோடு தொடர்புபடுத்தி நினைவில் வைத்துக் கொள்ளலாம். உதாரணமாக பச்சை வண்ணம், தண்ணீர், புத்தகம், கார், 12 என்ற நான்கு விஷயங்களை நினைவில் வைத்து கொள்ள வேண்டும் என வைத்துக் கொள்வோம். நமக்கு மிகவும் பரிச்சயமானது வீடு. வீட்டோடு இந்த நான்கு விஷயங்களையும் தொடர்புபடுத்தி கற்பனை செய்து கொள்ளலாம்.

memoery think

“நான் வீட்டில் உட்கார்ந்திருந்தேன். பாத்ரூமில் தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. அப்போது நான் ஒரு புத்தகத்தின் 12வது பக்கத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். ஜன்னல் கதவுகளுக்கு பச்சை வண்ணம் பூசப்பட்டு இருந்தது.”

இப்படிக் கற்பனை செய்து கொண்டால், அதை திரும்ப நினைத்துப் பார்ப்பது மிக மிகச் சுலபம். அப்படி திரும்ப நினைக்கும் போது, பச்சை வண்ணம், கார், தண்ணீர், 12, புத்தகம் போன்ற சொற்கள் தானாக நினைவுக்கு வந்து விடும். எழுத்துக்களை தனித்தனியாக நினைவில் வைத்திருப்பது கடினம். அந்த எழுத்துக்களை ஏதேனும் சொற்களோடு சேர்த்து நினைவில் வைத்துக் கொள்வது சுலபம். குழந்தைகள் அம்மா, ஆடு, இலை, ஈ என்று படிக்கிறார்கள். குழந்தைகள் அ, ஆ, இ, ஈ என உயிரெழுத்துக்களை சுலபமாக நினைவில் வைத்திருக்க இந்த வழிமுறை உதவுகிறது.

முந்தைய பகுதிகள்:

குழந்தைகளின் நினைவாற்றலை வளர்ப்பது எப்படி? மனதின் நூலகம்!!!

நினைவாற்றலுக்கு சுருக்கெழுத்து எளிய வழி! -மனதின் நூலகம் #2

​​​​​​​