how to reduce weight quickly

Advertisment

இன்றைய நவீன வாழ்க்கை முறையில், உடல் எடையினை குறைப்பது என்பது இந்த தலைமுறையினருக்கு மிகுந்த சவாலாக உள்ளது. உடல் எடை குறைய உடற்பயிற்சி செய்தால் போதும் என்று இருந்துவிடுவது எந்தப் பலனையும் தராது.

உடல் எடை குறையாமல் இருக்க நமது உணவுப் பழக்கமும் ஒரு முக்கியக் காரணமாகும். எனவே, நமது உணவுப் பழக்கங்களில் ஒரு சிலமாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம், உடல் எடையைக் குறைப்பது மட்டுமின்றி ஆரோக்கியமாகவும் வாழலாம்.

அதற்காக, உடல் எடையைக் குறைக்க உணவைத் தவிர்க்கவேண்டும் என்பதல்ல, சில ஆரோக்கியமான உணவு முறைகளைப் பின்பற்றி உடல் எடையினை விரைவாகக் குறைக்கலாம்.

Advertisment

உடலை ஒல்லியாகக் காட்ட உடற்பயிற்சி செய்வது, பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பச்சையாகச் சாப்பிடுவது போன்றவை நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவற்றைத் தவிர்த்து உடல் எடையினை சுலபமாகக் குறைக்க ஆரோக்கியமான 3 எளிய வழிகள் உள்ளன. இவற்றைப் பின்பற்றினால் நமது உடல் எடை இரட்டிப்பாகக் குறையும் என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

முட்டை மற்றும் கீரை;

how to reduce weight quickly

வேகமான எடை குறைப்பிற்கு காலை உணவாக முட்டையைச் சாப்பிடுவது உலகம் முழுவதும் தற்போது பரவலாக இருக்கும் உணவு முறையாகும். முட்டையில் இருக்கும் வைட்டமின் D மற்றும் கால்சியம் சத்துகள் உடலின் கொழுப்பைக் கரைப்பது மட்டுமின்றி நம்மை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்கிறது.

Advertisment

ஆரோக்கியமான வாழ்விற்குப் பல வழிகளில் உதவியாக இருக்கும் முட்டையுடன் வேறு சில ஆரோக்கியமான பொருளைச் சேர்க்கும் போது, உடல் எடை குறைவதில் இருமடங்கு பலன்களைத் வழங்கக்கூடியது.

முட்டையுடன், இரும்புச்சத்து அதிகமுள்ள கீரையைச் சேர்த்துச் சாப்பிடுவது தேவையற்ற கரிகளைக் குறைப்பதுடன் அதிக அளவு ஊட்டச்சத்துக்களையும் நமக்கு வழங்கும்.

மேலும், கீரைகளைச் சாப்பிடுவது நீண்ட நேரம் பசியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. தசை வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் வலிமையை அதிகரிக்கிறது.

வேர்க்கடலை மற்றும் ஆப்பிள்;

how to reduce weight quickly

ஆப்பிள்களில், நார்ச்சத்து, வைட்டமின்கள், ஊட்டச் சத்துக்கள் போன்றவை அதிக அளவில் இருப்பதால், இவை எளிதில் உடல் எடையைக் குறைக்க உதவுகின்றது.

வேர்க்கடலை, மோனோ சாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகளால் நிரம்பியுள்ளது. இவை உடல் எடையினை குறைக்க உதவுகிறது. மேலும், இதய நோய், சர்க்கரை நோய் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாகவும் அமைகின்றது.

இவை இரண்டையும் ஒன்றாகச் சேர்த்துச் சாப்பிடும் போது, உடல் எடையினை வெகுவாகக் குறைக்கிறது.

எலுமிச்சை மற்றும் கிரீன் டீ;

how to reduce weight quickly

பல்வேறு ஆய்வுகளின் படி, கிரீன் டீ என்பது உடல் எடையினை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு சிறந்த பானமாக உள்ளது. அதேபோன்று, தினமும் காலையில் சூடான நீருடன் சிறிதளவு எலுமிச்சை சாறு பிழிந்து குடித்து வந்தால், உடல் எடை வேகமாகக் குறையும் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. எனவே, இவை இரண்டையும் சேர்த்துக் குடித்து வந்தால் உடல் எடை விரைவாகக் குறையும்.

கிரீன் டீயை தூளாக வாங்கி பயன்படுத்துவதை விட, உலர்த்திய கிரீன் டீ இலைகளை வாங்கி, வெந்நீரில் போட்டு, மூடிவைக்க வேண்டும். ஒரு சில நிமிடங்களில் கிரீன் டீயின் ஃபிளேவர் வெந்நீரில் கலக்கும். இதில், சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்தால் உடல் எடையினை குறைத்து, உடல் ஆரோக்கியத்தைத் தரும்.

மேலும், கிரீன் டீ ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது என்பதால், உடலில் தேவையற்ற கட்டிகளை வளரவிடாது. பெருங்குடல், மார்பகம் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய் போன்றவை, வருவதற்கான வாய்ப்புகளை கிரீன் டீ குறைக்கிறது. இவற்றுடன், சர்க்கரை மற்றும் பால் சேர்ப்பது முற்றிலும் தவறு.

எனவே, உடல் எடையினை விரைவாகக் குறைக்க முயல்பவர்கள் இந்த 3 எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவது நல்ல பலன்களைக் கொடுக்கும். இவை, உடல் எடை குறைப்பது மட்டுமின்றி, நாம் அனைவருக்கும் ஆரோக்கியமாகவும் வாழ வழிவகுக்கும்.