Skip to main content

தலையில் அடிக்கும் டை; முகத்தில் கரும்புள்ளியை ஏற்படுத்துமா?

 

hair dye to the head; Does it cause dark spots on the face? - explains Dr. Arunachalam

 

இளம் வயதில் பலருக்கு முகத்தில் கரும்புள்ளிகள் வருகிறது. அது எதனால் வருகிறது என்ற கேள்வியை டாக்டர் அருணாச்சலம் அவர்களிடம் கேட்டோம். அவர் அளித்த பதில் பின்வருமாறு...

 

வயதாக வயதாக உடலில் ஏற்படுகிற பல வகையான மாற்றங்களில் ஒன்று முகப்பரு. அந்த முகப்பருவை ஒழுங்காக கையாளத் தெரியாமல் விட்டுவிட்டால் அது கரும்புள்ளியாக நிலையாகவே இருந்துவிடும். சிலர் முகப்பருவை சும்மா விட்டு விடாமல் முறையான மருந்து எடுத்துக் கொள்ளாமல் எந்நேரமும் அதையே நோண்டிக் கொண்டிருத்தல், அதிலிருந்து சீழ் எடுக்கிறேன் என்று சொல்லி அதை அழுத்திக் கொண்டே இருப்பது இதெல்லாம் செய்வதால் அது கரும்புள்ளியாக மாறிவிடும்.

 

வயோதிகத்தினாலும் கரும்புள்ளி தானாக உருவாகும். தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளின் அறிகுறியாகவும் சில சமயம் கரும்புள்ளிகள் இருக்கக்கூடும். முடியை கருப்பாக்க டை அடிப்பதாலும் முகத்தில் கரும்புள்ளி உருவாகும். சிலருக்கெல்லாம் முகமே கருப்பாக மாறிவிடும். இன்னும் சிலருக்கு உடலெங்கும் கருப்பாக மாறிவிடக்கூடும். டை அடிப்பது வெறும் தலைமுடிக்கு மட்டும்தான்., எனவே தலைக்கு டை அடித்துவிட்டு உடனே தலையை தனியாக குளித்து காய விட வேண்டும். டை அடித்துவிட்டு மணிக் கணக்கில் காய நேரம் எடுத்துக் கொள்கிறவர்களுக்கு அதில் உள்ள ரசாயனப் பொருட்களினால் கருமை உடலெங்கும் பரவ வாய்ப்பிருக்கிறது. 

 

சென்னையில் வெயில் காலங்களில் நெற்றியில் கரும்புள்ளிகளோடு நிறைய பேர் மருத்துவரை அணுகுகிறவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களெல்லாம் சூடு தனியாத அளவிற்கு குளிக்காதவர்கள் தான். நீண்ட கூந்தல் கொண்ட பெண்கள் வாரத்திற்கு இருமுறையாவது ஷாம்பு பயன்படுத்தி தலை குளிக்க வேண்டும். ஆண்கள் தினமும் தலையோடு தண்ணீர் ஊற்றி குளிக்க வேண்டும். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !