Skip to main content

நகரில் உன் கண்ணில் படுகிற ஒரு நல்லவனை அழைத்து வா

Published on 12/02/2019 | Edited on 12/02/2019

‘உன் நண்பனைக் காட்டு. நீ எப்படிப்பட்டவன் என்பதைச் சொல்கிறேன்’ என்பார்கள். நண்பர்கள் என்பவர்கள் பூவோடு சேர்ந்த நாரைப் போன்று இருக்க வேண்டும். பன்றியோடு சேர்ந்த கன்று போல இருக்கக்கூடாது.அன்பைப் பகிர்ந்து கொள்ளுதல் என்பது மிகச் சிறந்த பண்பு. நல்ல நட்பு என்றால் இவ்வாறு பகிர்ந்து கொள்வதில் மட்டுமே இருக்கிறது. மனம்விட்டுப் பேசுவதால் உங்களுக்கு ஆபத்து வந்து விடாத நட்பாக இருத்தல் மிக முக்கியம்.‘அனைவரும் நல்லவர்களே’ என்று நினைப்பதில் பரந்த மனப்பான்மையும் இருக்கிறது. அப்பாவித்தனமும் இருக்கிறது. எனவே நண்பர்களைத் தேர்வு செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மணம் தரும் விதமான நட்பை அமைத்துக் கொள்வது அவசியம்.
 

good people

வயல் வரப்பில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெரியவருக்கு அற்புதமான மணம் ஒன்று மூக்கைத் துளைத்தது. வாசனை பிரமாதமாக இருக்கவே அது எங்கிருந்து வருகிறது என்று சுற்றுமுற்றும் பார்த்தார். பக்கத்தில் காட்டுச் செடிகள் நிறைய முளைத்திருந்தன. அவற்றில் பூத்திருந்த மலர்களை எல்லாம் முகர்ந்து பார்த்தார். அந்த மனதை மயக்கும் கதம்ப வாசனையைப் போல அவை இல்லை. யோசனையுடன் சிறிது தூரம் நடந்தபோது சற்று தொலைவில் ஒரு களிமண் உருண்டை ஒன்றைப் பார்த்தார். அதனைக் கையில் எடுத்து முகர்ந்து பார்த்தபோது அந்த மணம் வீசியது. ஆக தன் நாசிக்குள் நுழைந்து பாடாய்ப்படுத்திய அந்த சுகந்த மணம் இந்தக் களிமண் உருண்டையில் இருந்துதான் வருகிறது என்பதே அவருக்கு ஆச்சரியத்தைத் தந்தது. ‘‘களிமண்ணே, உனக்கு எப்படி இவ்வளவு இனிய மணம் கிடைத்தது?’’ என்று கேட்டார். ‘‘நான் ஒரு பூந்தோட்டத்தில் இருந்தேன். அங்கு சுகமான மணம் தரும் நிறைய பூச்செடிகள் என் மீது வளர்ந்தன. சில நாட்கள் கழித்து அப்புறப்படுத்தும்போது என்னைத் தூக்கி எறிந்து விட்டார்கள். நான் இங்கே வந்து விழுந்தேன். ஆனாலும் அச்செடிகளின் இனிய மணம் மட்டும் இன்றும் என்னைவிட்டுப் போகாமலேயே இருக்கிறது’’ என்றது களிமண் உருண்டை. சேர்க்கை நன்றாக இருந்தால் நாமும் நன்றாக இருப்போம். 

இப்போது மகாபாரதத்தில் ஒரு காட்சியை நாம் சுருக்கமாகப் பார்க்கலாம். கிருஷ்ண பரமாத்மா தருமரை அழைத்து, ‘‘நகரில் உன் கண்ணில் படுகிற ஒரு கெட்டவனை அழைத்துக் கொண்டு வா’’ என்றார். அதேபோல துரியோதனனை அழைத்து, ‘‘நகரில் உன் கண்ணில் படுகிற ஒரு நல்லவனை அழைத்து வா’’ என்றார்.தருமரும் நகரத்தின் வீதிகளில் சுற்றித் திரிந்தார். சந்து பொந்துகளில் எல்லாம் நுழைந்து கெட்டவன் யாராவது இருக்கிறானா என்று தேடினார். அவர் பார்த்தவர்கள் அனைவருமே நல்லவர்களாகவே அவருக்குத் தெரிந்தனர். கெட்டவன் ஒருவனைக் கூடக் கண்டுபிடிக்க முடியாமல் கவலையுடன் திரும்பி வந்தார் தருமர்.  அதேபோல துரியோதனனும் நகரத்தின் மூலை முடுக்கெல்லாம் தேடிப் பார்த்தார். அவர் கண்ணுக்கு அனைவருமே கெட்டவர்களாகத் தான் தெரிந்தார்கள். ஒரு நல்லவனைக்கூடக் காணோம். ஏமாற்றத் துடன் அரண்மனைக்குத் திரும்பினார். இருவரும் வெறுங்கையுடன் திரும்பி வந்ததைப் பார்த்தார் கிருஷ்ண பரமாத்மா. மெல்ல புன்னகைத்தார். எதற்காக இப்படியரு பரீட்சையை பரமாத்மா நடத்தினார்? நல்லவனாக இருப்பவன் கண்களுக்குப் பார்க்கிற அனைவருமே நல்லவர்களாகத்தான் தெரிகிறார்கள்.கெட்டவனாக இருந்தால் அவன் கண்களுக்குப் பார்க்கிற அனைவருமே கெட்டவர்களாகத்தான் தெரிகிறார்கள்.
 

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

‘நல்ல நண்பன் வேண்டும் என்று அந்த மரணமும் நினைக்கின்றதா?’ - இதயம் நொறுங்க வைத்த சம்பவம்

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

friend who wandered while keeping him in a trolley' - a heartbreaking incident

 

மேம்பாலத்தில் சுயநினைவின்றிக் கிடந்த தனது நண்பரைத் தள்ளுவண்டியில் வைத்து, மருத்துவமனை நோக்கித் தள்ளிக்கொண்டு வாலிபர் ஒருவர் ஓடிய வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இப்படி தள்ளுவண்டியில் வைத்துக் கொண்டு செல்வதாக அந்த வாலிபர் பேசும் அந்த வீடியோ காட்சி காண்போரின் இதயத்தைக் கலங்கடிக்க வைக்கிறது.

 

விருதுநகர் மாவட்டம் யானைக்குழாய் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். கொத்தனாராகப் பணியாற்றி வந்த இவருடன், தூத்துக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். தற்பொழுது வேலை எதுவும் கிடைக்காததால் ஆறுமுகம் ஆதரவின்றி தெருக்களில் சுற்றித் திரிந்துள்ளார். பல நாட்களுக்குப் பிறகு தன்னுடன் வேலை செய்த ஆறுமுகம் உடல் நலிவுற்று மயக்கமடைந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ந்த சுரேஷ், உடனடியாக ஆறுமுகத்தை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லத் திட்டமிட்டார்.

 

ஆனால் சுரேஷிடம் செல்போன் இல்லாததால், 108க்கு எப்படி அழைப்பது என்று அவருக்குத் தெரியவில்லை. அருகில் இருந்தவர்களும் உதவி செய்யாததால் தன்னிடமிருந்த தள்ளுவண்டியில் அவரை வைத்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் தள்ளிச் சென்றுள்ளார். பாலம் ஒன்றின் வழியாகச் செல்லும் பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் 'ஏன் இப்படி தள்ளிக்கிட்டு போறீங்க' எனக் கேட்க, ஆம்புலன்ஸ் கிடைக்காததால் தள்ளுவண்டியில் வைத்து அழைத்துச் செல்வதாக வண்டியைத் தள்ளிக்கொண்டே அவர் பரபரப்பாகப் பேசும் அந்த வீடியோ காட்சி இணையத்தில்  வைரலாகி வருகிறது. அந்த இருசக்கர வாகன ஓட்டி, தன் வாகனத்தை வைத்து தள்ளுவண்டியை உந்த வைத்து அவருக்கு உதவி புரிந்தார். ஒருவழியாக தன்னுடைய நண்பரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தார் சுரேஷ்.