Skip to main content

மாதவிடாய் பிரச்சனையால் அவதியா ?

நம்முடைய சமுதாயத்தில் அன்புக்கு இலக்கணமாக இருப்பவர்கள் பெண்கள் .அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தாலே சமுதாயத்தில் நிறைய பிரச்சனைகளை சந்திக்கின்றன.இது மட்டுமில்லாமல் வயது பிரச்சனைகளால் தனது உடலில் நிறைய மாற்றங்களை சந்திக்கின்றனர் அதில் ஒன்று தன மாதவிடாய் பிரச்னை அவ.பெண்களில் சிலர்  மாதவிலக்கு தடைபடுதல் அல்லது தள்ளி போகுதல் போன்ற பாதிப்பு உள்ளவர்கள், மாவிலங்கம் பட்டை, உள்ளி, மிளகு இவைகளை சம அளவு எடுத்து நன்கு அரைத்து தினமும் காலையில் ஒரு பாக்கு அளவு மூன்று நாள் சாப்பிட மாதவிடாய் உண்டாகும்.வெங்காயதாளை அரைத்து, அதில் கருப்பு எள், கருஞ்சீரகம் இரண்டையும் சம அளவில் கலந்து நன்கு காய வைத்து அரைத்து கொள்ளவும். மாதவிலக்கு வராத சமயங்களில் ஒரு ஸ்பூன் அளவுக்கு காலை, மாலை என மூன்று நாட்கள் சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறுகள் தீரும்.பிரண்டையை இடித்து சாறு எடுத்து, அதில் சிறிது பெருங்காயம் சேர்த்து சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்சனைகள் தீரும்.வல்லாரை சாறில் பெருஞ்சீரகத்தை ஊறவைத்து எடுத்து பொடியாக்கி தினமும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறுகள் தீரும்.மாதவிடாய் போது வலிகள் மற்றும் சுளுக்குகள் அடிக்கடி ஏற்படும். அதற்கு காரணம் உடலில் கால்சியம் அளவு குறைவாக இருப்பது. ஆகவே கால்சியம் அதிகம் இருக்கும் உணவுகளை உட்கொண்டால் வலி ஏற்படுவது பாதியாக குறையும். வெண்ணெயில் கால்சியம் அதிகமாக இருக்கும்.
 

periods image

சிலருக்கு அதிகமாக இரத்தபோக்கு திடீரென ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால் உடலில் இரும்புசத்து குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். ஆகவே அப்போது இரும்புசத்து அதிகமாக உள்ள உணவான சிவப்பு அரிசி, சிக்கன், முட்டை, மற்றும் கீரைகளை அதிகமாக உண்டு வந்தால் அதிக இரத்தபோக்கு சரியாகிவிடும்.மாதவிடாய் முடியும் போதோ அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும் போதோ, மிகவும் சோர்ந்து உடலானது மிகுந்த வெப்பத்துடன் இருப்பது போல் இருக்கும். அவ்வாறெல்லாம் இல்லாமல் இருக்க, நல்ல ஊட்டசத்து உள்ள ஆப்பிள், மாதுளை சாப்பிடவும்.உருளைகிழங்கை அதிகம் சாப்பிட வேண்டும். ஏனெனில் மாதவிடாயினால் ஏற்படும் மன அழுத்தத்தினால் மூளையானது அதிகமாக உற்பத்தி செய்யும் செர்டோனின் ஆனது பலவீனமடையும். ஆகவே அதனால் உடலில் அதிகமான சோர்வு ஏற்படும். அப்போது உருளை கிழங்கை சாப்பிட்டால் அதில் உள்ள டிரிப்டோபன் செரோடோனின் சரி செய்யும்.காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் அதிக அளவு சாப்பிட வேண்டும். அதனால் உடலில் சுரக்கும் அதிகபடியான ஈஸ்ட்ரோஜன் வெளியேற உதவும்.

மாதவிடாய் - வலிக்கு
வெற்றிலை - 2
சாம்பார் வெங்காயம் - 2
சீரகம் - 1 ஸ்பூன்
பூண்டுபல் - 2

இவையனைத்தையும் தண்ணீர்விட்டு அரைத்து வடிகட்டி அந்த சாறை மாதவிடாய் வருவதற்கு முன்பும், வந்த பின்பும் காலை மாலை இரு வேளை வெறும் வயிற்றில் 5 நாட்கள் தொடர்ந்து கொடுத்து வந்தால் தீராத வயிற்றுவலி தீரும்.புதினாவை சுத்தபடுத்தி நன்கு உலர்த்திய பிறகு தூள் செய்து வைத்து கொண்டு, தினமும் 3 வேளை தேனில் கலந்து சாப்பிட மாதவிடாய் தாமதமானது நீங்கும்.மாங்கொட்டையின் உட்பருப்பை எடுத்து உலர்த்தி தூள் செய்து, தேனில் குழைத்து ஒரு தேக்கரண்டி அளவுக்கு ஒரு வாரம் தினசரி உண்டால், பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் தோன்ற கூடிய அதிக உதிரம் போதல், வலி நீங்கும்.

 

stomach pain image

வெள்ளை பூசணி - 100 கிராம்
வெள்ளரி விதை - 10 கிராம்
சாம்பார் வெங்காயம் - 2
வெள்ளை மிளகு - 5 கிராம்
பூண்டு - 2 பல்
பனங்கற்கண்டு - 100 கிராம் வையனைத்தையும் ஒன்றாக சாறெடுத்து காலை, மாலை என்று இருவேளை 50 மிலி சாப்பிட மாதவிடாயின்போது உண்டாகும் வயிற்றுவலி நீங்கும்.


உணவில் முருங்கைகீரை, அகத்திகீரை, மணத்தக்காளி கீரை, பசலை கீரை, அகத்தி கீரை, பிரண்டை, பாகற்காய், சுண்டைக்காய், முருங்கைக்காய், பப்பாளிபழம், அன்னாசிபழம், பேரீச்சம்பழம், அத்திபழம் போன்றவற்றை தேவையான அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.அவிக்கப்பட்ட வாழை பூவுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த போக்கு கட்டுப்படும். 60 கிராம் பீட்ரூட் சாறு (3 முறை), சுக்குகாபி, இரவு ஒரு கப் பசும் பால் . இந்த மாதிரியான உணவு வகைகளை  எடுத்து கொண்டால் மாத விடாய் காலத்தில் சமாளிக்க முடியும் .

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்