facebooks new care reaction

Advertisment

கரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் இக்கட்டான சூழலில் தவித்து வரும் நிலையில், நமது அன்பையும், அக்கறையையும் பிறருக்குப் பகிரும்வண்ணம் ஃபேஸ்புக் நிறுவனம் புதிய ஸ்மைலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த மாதத்தின் பிற்பகுதியில் இந்த புதிய ஸ்மைலி சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், தற்போது ஃபேஸ்புக் மற்றும் மெசஞ்சர் ஆகிய இரண்டிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிறருக்காக நமது அக்கறையை வெளிப்படுத்தும் விதமான இந்த ஸ்மைலி, புன்னகைக்கும் முகத்துடன் கையில் ஒரு இதயத்தைத் தழுவியவாறு, அன்பை வெளிப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இது ஃபேஸ்புக்கில் வழங்கப்பட்டுள்ள ஏழாவது ரியாக்ஷன் ஆகும். ஃபேஸ்புக் போலவே மெசஞ்சரிலும் இந்த ஸ்மைலியை பயன்படுத்தமுடியும். இந்த புதிய ஸ்மைலி தற்போதைய நெருக்கடியான சூழலில் மக்கள் தங்களது அன்பை வெளிப்படுத்த மற்றொரு வழியைக் கொடுக்கும் என்கிறது ஃபேஸ்புக் நிறுவனம்.