Skip to main content

முட்டையில் இவ்வளவு நன்மைகளா... இவ்வளவு நாளாக தெரியாமல் போயிடுச்சே!!

Published on 12/09/2020 | Edited on 12/09/2020
gh

 

 

முட்டை இந்த ஒற்றை சொல்லை நாம் கேள்வி படாமல் இருந்திருக்க மாட்டோம். ஏழை எளிய மக்களின் வாழ்வோடு தினசரி கலந்திருக்கும் ஒரு உணவு. அசைவம்  சாப்பிட முடியாமல் வசதி குறைவாக உள்ளவர்களுக்கு இருக்கின்ற ஒரே அசைவ உணவு முட்டை. ஏழைகள் மட்டுமில்லாமல் அனைவராலும் விரும்பப்படும் இந்த முட்டையில் அப்படி என்னதான் இருக்கிறது. ஏன் அனைவரும் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். காரணத்தை விரிவாக பார்ப்போம். 

 

முட்டையில் லுடீன் என்ற மூல பொருட்கள் அதிக அளவு நிறைந்துள்ளதால் கண் பார்வைக்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது. எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் செலுனியம் என்ற பொருள் முட்டையில் அதிகம் நிறைந்துள்ளது. ஓமேகா 3 முட்டையில் அதிகம் இருப்பதால் இதய பிரச்சனைகள் வராமல் காக்கிறது. எலும்புகளுக்கு முட்டை வலிமையை தரும். எனென்றால் முட்டையில் வைட்டமின் டி நிறைந்துள்ளது. உடல் உழைப்பு அதிகம் செய்யாதவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிடுவது சிறந்த ஒன்று. ஏனெனில் அதிகப்படியான முட்டை சாப்பிடுதல் என்பது அவர்களுக்கு அதிக கொழுப்பை உண்டாக்கும். ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க முட்டை மிக சிறந்த ஒரு உணவுப்பொருள்.

 

 

Next Story

மாணவர்களுக்கான சத்துணவு முட்டைகள் குறைவு; ஆட்சியரின் உத்தரவால் பரபரப்பு

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Nutrient organizer suspended due to shortage of eggs in student rations

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி அரக்கோணம் அடுத்த கும்பினிபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு நடத்தினார். அப்போது பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு சாப்பாடு மற்றும் முட்டை வழங்குவதை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது 7 மாணவர்களுக்கு முட்டை கிடைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து முட்டைகள் இருப்பு வைக்கும் அறை மற்றும் அரிசி, பருப்பு வைக்கும் அறையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் சத்துணவு முட்டைகள் போதுமான அளவு இருப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டது. இது குறித்து சத்துணவு அமைப்பாளர் மலர் என்பவரிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டதற்கு வேறு பள்ளியில் முட்டைகள் இறக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் பதிவேடுகளை முறையாக பராமரிக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சத்துணவு அமைப்பாளர் மலரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டார். மேலும் சத்துணவு அமைப்பாளர் மலர் பணியில் சேர்ந்த நாளிலிருந்து இதுநாள் வரை பதிவேடுகள் முறையாக பராமரித்துள்ளாரா? அந்த பதிவேடுகளில் ஏதேனும் குறைகள் கண்டறியப்பட்டால் அதற்கு உண்டான அபராதம் விதிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரின் அதிரடி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

“மழையில் மை ஊறி முட்டையில் இறங்கியுள்ளது” - அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

 'Ink got soaked in the rain and landed on the egg' - Minister Geethajeevan's explanation

 

அண்மையில் ஈரோட்டில் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டை கருப்பு நிறமாக அழுகிக் காணப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்நிலையில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனிடம் செய்தியாளர்கள் இந்தப் புகார் குறித்து கேள்வி எழுப்பினர்.

 

அதற்குப் பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன், ''பாஜக கட்சியிலிருந்து புகார் சொல்லியிருந்தார்கள். அதை நாங்கள் முறைப்படி விசாரித்து, முட்டை விநியோகிப்பவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளோம். கிட்டத்தட்ட 96 முட்டைகள் மாற்றிக் கொடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுத்துவிட்டார். அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு திங்கள், புதன், வெள்ளி அல்லது சனிக்கிழமைகளில் உபயோகிக்கப்படும் முட்டைகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலர் சீல் வைப்பது வழக்கம். ஏனென்றால் பழைய முட்டையைப் பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காகச் சீல் வைக்க வேண்டும் என 2006-ல் இருந்து இந்த உத்தரவு பின்பற்றப்பட்டு வருகிறது. அன்றைய தினம் 'தமிழ்நாடு அரசு' எனக் கருப்பு மையில் முத்திரை வைத்துள்ளார்கள். அந்த நேரத்தில் கனமழை பெய்துள்ளது. தார்ப்பாய் இல்லாமல் முட்டைகளை வண்டியில் ஏற்றிக் கொண்டு வந்துள்ளனர். அதில் நனைந்து கருப்பு மை ஊறி கருப்பு கலர் முட்டையில் இறங்கி உள்ளது'' என்றார்.