Advertisment

ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்கு ட்ரீட்மெண்ட் இருக்கிறதா? - ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் விளக்கம்

 Dr.Suganthan explained about Autism

ஆட்டிசம் என்கிற நோயின் பாதிப்பு பல குழந்தைகளுக்கு ஏற்படுவதை நாம் பார்க்கிறோம். அதற்கான காரணங்கள் என்ன?தீர்வுகள் என்ன? என்பது குறித்து ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் விரிவாக விளக்குகிறார் .

Advertisment

ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஸார்டர் (Autism Spectrum Disorder)என்பது ஒரு நோய் அல்ல. மூளை சம்பந்தப்பட்ட ஒரு குறைபாடு. 1911 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் தான் ஆட்டிசம் என்கிற நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 1980களில் தான் இந்தியாவில் இந்த நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படத் துவங்கியது. தங்களுடைய குழந்தைகளுக்கு ஆட்டிசம் என்கிற நோய் இருப்பது குறித்து வெளியே தெரிவிப்பதற்கு பெற்றோர் அஞ்சுகின்றனர். அது தவறு. இதுபற்றி வெளியே நாம் பகிர்ந்துகொள்ளத் தொடங்கும்போது தான் இந்த நோய்க்கான தீர்வுகளும் ஏற்படும்.

Advertisment

நோயை விரைவாகக் கண்டறியும்போது தீர்வுகளும் விரைவாக இருக்கும். இந்த நோயை குணப்படுத்த பல்வேறு தெரபிகள் இருக்கின்றன. ஒருகாலத்தில் தொழுநோய், காசநோய் போன்றவை தீண்டத்தகாத நோய்கள் போல் பார்க்கப்பட்டன. இன்று அவை அதிகம் காணப்படுவதில்லை. ஆட்டிசம் நோயையும் அறிவியல் ரீதியாக நிச்சயம் குணப்படுத்த முடியும். ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்தால் மருந்துகள் இல்லாமலும் குணப்படுத்தலாம். ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர் அதற்காகக் கவலைப்படக் கூடாது.

ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு ஃபோகஸ் அதிகமாக இருக்கும். அவர்களோடு நாம் கூடவே இருந்து அவர்களுக்கு அனைத்தையும் கற்றுக் கொடுக்கும் வேலையைச் செய்ய வேண்டும். அதிக நேரம் மொபைல் ஃபோன் பார்ப்பதால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டும் ஆட்டிசம் ஏற்பட வாய்ப்புண்டு. பேச்சு வராத குழந்தைகளுக்கு ஸ்பீச் தெரபி கொடுத்தால் அவர்கள் பேசுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. குழந்தைகள் பேசாமல் இருந்தாலோ...தனிமையில் இருந்தாலோ...நடத்தல், உட்காருதல் ஆகியவற்றில் மாற்றம் இருந்தாலோ... நாம் அவற்றை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சையளிக்க வேண்டும். ஐந்து வயதுக்குள் கண்டறிந்து சிகிச்சை கொடுத்தால் மிக விரைவாக ஆட்டிசம் நோயிலிருந்து உங்கள் குழந்தையை விடுவிக்க முடியும்.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe