Advertisment

வறட்டு இருமலுக்கு என்ன தான் தீர்வு? - ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் விளக்கம்!

Dr Suganthan | Cold | Dry Cough |

Advertisment

மழைக்காலங்களில் ஏற்படுகிற வறட்டு இருமலுக்கு ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் தீர்வு சொல்கிறார்

வறட்டு இருமலுக்கு எவ்வளவோ மருந்து, மாத்திரை சாப்பிட்டாலும் சரியாகவில்லை என்பவர்களுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் ‘மகா சுதர்சன சூரணம்’ பரிந்துரை செய்வோம். இதனை 125 மில்லி கிராம் அளவு எடுத்துக் கொண்டு அதனை தேனோடு கலந்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுகிறவர்கள் பலவகையான மாத்திரைகளை சாப்பிடுவார்கள். ஆயுர்வேத மருத்துவத்தில் ’ஆடாதொடா மணப்பாகு’ பரிந்துரை செய்வோம். இது சித்த மருத்துவக் கடைகளில் கிடைக்கும். இதனை வாங்கி சாப்பிட்டு வருவதால் நெஞ்சு சளியை சரி செய்து, நன்றாக மூச்சு விட உதவும்.

Advertisment

தீவிரமான காசநோய் ஏற்பட்டு சளி, இருமல் இருப்பவர்கள் ஆடாதொடா மணப்பாகு உடன் இம்பூரல் பொடியினை கலந்து சாப்பிட்டு வர சரி ஆகும். இது நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கும். இதனால் இருமல் நீங்கி ஆரோக்கியமானஉடல்நிலைக்கு வரலாம்.

இருமலுக்கு அதிமதுரம், வெற்றிலை, மிளகு, ஓமம், துளசி ஆகியவற்றை தேவையான அளவு எடுத்துக்கொண்டு தேநீர் வைப்பது போன்று காய்ச்சி அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சரியாகும்.

நல்லெண்ணைய் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் தொண்டையில் வைரஸ் தொற்றுகள் தங்காது. சீரகம், ஓமம் கலந்து தண்ணீரை சுட வைத்து குடித்து வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் வறட்டு இருமலில் இருந்து குணமடையலாம். விஷக்காய்ச்சல் ஏற்பட்டால் நிலவேம்பு கசாயம் வைத்து குடித்து வர வேண்டும். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு காய்ச்சல் அளவு குறையும்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe