மூலநோயை கவனிக்காமல் விட்டால் என்னவாகும்? - பிரபல டாக்டர் சந்திரசேகர் விளக்கம்

Dr Chandrasekar | Hemorrhoids |

மூலநோயை கவனிக்காமல் விட்டால் என்னவாகும் என்ற கேள்வியை பிரபல டாக்டர் சந்திரசேகர் அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவரளித்த பதில் பின்வருமாறு...

மூலநோயை சரியாக கவனித்து அதற்கு சிகிச்சை அளிக்காவிட்டால் முதற்கட்டமாக உடலில் ஹீமோகுளோபின் அளவு குறையும். ஏனெனில் இரத்தப்போக்கு அதிக மூலப்பிரச்சனையால் வெளியேறும். அதனால் ஹீமோகுளோபின் அளவு குறையும். 18 வயது நிறைந்த பெண் ஒருவர் மருத்துவமனை வந்தார், ஹீமோகுளோபின் அளவு 4 தான் இருந்தது. உடலில் வேறு எதுவும் பிரச்சனையை உணர்கிறாரா என்று கேட்டால் எதுவும் சொல்லவில்லை. ஆனால் கூச்சப்பட்டுக் கொண்டே இருந்தார், ஹீமோகுளோபின் அளவு இவ்வளவு கம்மியாக என்ன காரணம் என்று தீவிரமாக விசாரித்த பிறகே, ஆசனவாயில் இரத்தப்போக்கு போகிறதென்று சொல்கிறார். பரிசோதித்தால் அது மூலத்தின் மூன்றாவது நிலையில் இருந்தது. பிறகு இரத்தம் அவர் உடலுக்கு ஏத்தி பிறகு அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தினோம்.

சிலர் பல வருடங்களாக மூலத்தால் பாதிக்கப்பட்டு நான்காவது ஸ்டேஜில் நம்மிடம் வருவார்கள். அவர்களின் ஆசனவாயில் தொடர்ச்சியாக எரிச்சல் ஏற்பட்டு, இரத்தம் வெளியேறி சீல் பிடிக்க ஆரம்பித்து செப்டிக் ஷாக் என்று மருத்துவ முறையில் சொல்வோம், அந்த நிலைக்குச் சென்று இரத்தத்தில் கலந்து விடும். இதெல்லாம் குணமாக பல நாட்கள் எடுத்துக்கொள்ளும். அதனால் தான் முதல் ஸ்டேஜிலேயே பார்த்து குணப்படுத்தச் சொல்கிறோம்.

ஊடகத்துறையில் பெரிய பொறுப்பிலிருக்கிற நண்பருக்கு மூலத்தால் இரத்தப்போக்கு போகிறது என்று அவரின் நண்பர் நம்மிடம் அழைத்து வந்தார். அவருக்கு மூலம் நான்காவது ஸ்டேஜின் தீவிரத்தன்மையில் இருந்தது. இந்த குறிப்பிட்ட நோயாளிகளை கையாண்ட நீண்டகால அனுபவம்இருப்பதால் அவரை பரிசோதித்த உடனேயே அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியத்தை சொன்னோம், கிட்டத்தட்ட அவருக்கு மூலத்தின் தீவிரத்தன்மையால் கேன்சர் நிலைக்கு போய் விட்டார், நீண்டகால சிகிச்சை, ஓய்வுக்குப் பிறகு தான் சரியானார். சாதாரண மலச்சிக்கல் நீண்ட நாட்களுக்கு இருந்தால், ஆசனவாயில் வலி ஏற்பட்டால் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

Piles
இதையும் படியுங்கள்
Subscribe