Skip to main content

அதிகமா இப்ப நோயாளிகள் இதுக்குத்தான் வராங்க? - டாக்டர் அருணாச்சலம் விளக்கம்

Published on 07/08/2023 | Edited on 07/08/2023

 

Dr Arunachalam Interview

 

உடலில் ஏற்படும் பல்வேறு வகையான நோய்கள் மற்றும் உடல் உபாதைகளுக்கு சிறப்பான முறையில் குணப்படுத்துவதற்கான மருத்துவ குறிப்புகளை டாக்டர் அருணாச்சலம் கொடுத்து வருகிறார்

 

இப்போது அதிக நோயாளிகள் நம்மிடம் வருவது சளிக்காக அல்ல. வயிற்றுப்போக்கு பிரச்சனைக்காகத் தான். சுகாதாரமான உணவு கிடைக்காத காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். அதனால் எங்கு சாப்பிட்டாலும், கெட்டுப்போன உணவுகளால் வயிறு பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதன்மூலம் அஜீரணம் அதிகமாகி உடல் மெலிதல் வரை செல்லலாம். உடலுக்குத் தேவையான சத்து இல்லாததால் களைப்பு, உடல் வலி ஆகியவை ஏற்படலாம். வைட்டமின்கள் இல்லாமல் போவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. 

 

கிருமிகள் விட்டு விட்டு வருவதால் மூல நோயும் ஏற்படும். குடலில் புண்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ மலம் கழிப்பது நல்லது. முந்தைய நாள் சரியான அளவில் உணவு எடுக்கவில்லை என்றால், மலம் வராமல் இருக்கலாம் அல்லது மலச்சிக்கல் ஏற்படலாம். பயணம் மேற்கொள்ளும்போது, முந்தைய நாள் இரவு நன்றாக சாப்பிட்டுவிட்டு, காலையில் மலம் கழித்துவிட்டு செல்ல வேண்டும். சிகரெட் புகைப்பவர்களுக்கு அதுவே ஒரு அடிக்‌ஷனாக மாறி சிகரெட் புகைத்தால் தான் மலம் வரும்.

 

மற்றவர்கள் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, காபி, டீ குடித்தல் போன்றவற்றை செய்யும்போது மலம் கழிப்பது எளிதாக இருக்கும். பயணம் மேற்கொள்ளும்போது வேர்க்கடலை, மக்காச்சோளம் போன்றவற்றை வாங்கி உண்பதில் தவறில்லை. இறங்கும் நேரம் வரும்போதாவது நன்கு தண்ணீர் குடிக்கலாம். உடலில் தேவையான அளவு தண்ணீர் இருக்க வேண்டியது அவசியம். இதன் மூலம் மறுநாள் மலச்சிக்கல் ஏற்படுவதையும் தடுக்க முடியும். பயணத்தின் போது பழங்களையும் வாங்கி சாப்பிடலாம்.