ADVERTISEMENT

தைராய்டுக்கு ஹோமியோபதி மூலம் சிகிச்சை இருக்கா? - மருத்துவர் ஆர்த்தி விளக்கம்

05:22 PM Mar 31, 2023 | dassA

ADVERTISEMENT

ADVERTISEMENT

தைராய்டு நோய் குறித்த பல்வேறு தகவல்களை நம்மோடு ஹோமியோபதி மருத்துவர் ஆர்த்தி பகிர்ந்துகொள்கிறார்.

தைராய்டு மருத்துவத்துக்கான பரிந்துரை மருத்துவருக்கு மருத்துவர் வேறுபடும். நோயாளியின் உடல்நிலைக்கு ஏற்றவாறு மருந்துகளும் மாறும். அலோபதி மருத்துவத்தில் மருத்துவர்கள் பரிந்துரைத்த மாத்திரையை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளச் சொல்வார்கள். ஹோமியோபதி மருந்துகள் குறிப்பிட்ட நேரத்துக்கானவை அல்ல. இதில் பல்வேறு மருந்து வகைகள் இருக்கின்றன. அறிகுறிகளுக்கு ஏற்றவாறு ஹோமியோபதி மருத்துவர்கள் மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சைக்கு வந்தால் தைராய்டு நோய் விரைவில் குணமாகும் வாய்ப்புகள் அதிகம்.

தைராய்டுக்கான பொதுவான அறிகுறிகள் அனைத்துமே ஆணுக்கும் பெண்ணுக்கும் சமம் தான். உடல் ரீதியிலான உறவு வாழ்க்கையில் உள்ள ஈடுபாடு மட்டும்தான் இதனால் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிறுதானிய உணவுகளை உண்ணலாம். டிரை ப்ரூட்ஸ், நட்ஸ் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். கடலை எண்ணெய், நல்லெண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், அயோடின் உப்பு ஆகியவற்றை நிச்சயம் சேர்த்துக்கொள்ளக் கூடாது. பொறித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஹோட்டல் உணவுகளைப் பெரும்பாலும் தவிர்க்க வேண்டும்.

ஏதாவது ஒரு மருத்துவ முறையில் சிகிச்சை எடுத்துக் கொண்டால்தான் தைராய்டு நோய் முழுமையாக குணமாகும். அதோடு சரியான உணவு முறையும் பின்பற்றப்பட வேண்டும். காலம் செல்லச் செல்ல மருந்துகளை நிறுத்திவிட்டு உணவு முறையை மட்டும் பின்பற்றலாம். குழந்தைகளுக்கு தைராய்டு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனாலும் இப்போதைய வாழ்க்கை முறையில் யாருக்கு என்ன நோய் வரும் என்பதைக் கணிக்க முடியவில்லை. பொதுவாக பருவமடைதலுக்கான வயதுக்குப் பிறகு தான் ஒருவருக்குத் தைராய்டு நோய் ஏற்படும்.

தைராய்டு நோயாளிகள் எந்தப் பழம் வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஒவ்வொருவரும் தைராய்டுக்கான ஏதாவது அறிகுறி தெரிந்தால் உடனடியாகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தைராய்டு நோயால் மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. வெளி உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவு முறைகளைப் பின்பற்றினாலே ஆரோக்கியமாக வாழலாம். அளவான உணவு, ஆரோக்கியமான உணவு என்பதே தாரக மந்திரம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT