Advertisment

நட்ஸ் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்குமா?

 Does eating nuts cause weight gain?

பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட், டிரை திராட்சைபோன்ற நட்ஸ் வகைகளை தினமும் ஐந்து பருப்பு வீதம் எடுத்துக் கொண்டால் உடல் எடை அதிகரிப்பு ஏற்படும் என்பது எந்த விதத்தில் சரி என்பதை பிரபல டாக்டர் அருணாச்சலம் அவர்களிடம் கேட்டோம். அவர் அளித்த அறிவியல் பூர்வமான விளக்கத்தினை பின்வருமாறு காண்போம்...

Advertisment

நட்ஸ் வகைகளை எடுத்துக் கொண்டால் உடல் எடை அதிகரிப்பு என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஏனெனில் யாருக்கு அதிகப்படுத்தும் என்பதை நாம் பார்க்க வேண்டும். கொழுப்பே உணவில் இல்லாதவர்கள் சாப்பிட்டால் அவர்களுக்கு குண்டாக வாய்ப்பிருக்கிறது. உயர் விலை பருப்பு வகைகளைப் பொறுத்தவரையில் இதில் கலோரிகள் தன்மை அதிகம். அதில் கொழுப்பின் தன்மையும் அதிகம்.

Advertisment

ஐந்து, ஐந்தாக ஒவ்வொரு பருப்பிலும் எடுத்துக் கொள்வதால் குண்டாவது என்பது எடுத்துக் கொள்கிற மனிதர்களைப் பொறுத்து வேறுபடும். அதாவது குண்டாக உள்ளவர்கள், ஒல்லியாக உள்ளவர்கள் என்பது தான். இதை மட்டுமே சாப்பிட்டு குண்டாவது என்பது சாத்தியமே இல்லை. வழக்கமான உணவுகளோடு நட்ஸ் வகைகளையும் தொடர்ந்து அதிகமாக எடுத்துக் கொண்டால் எடை அதிகமாக வாய்ப்பு உள்ளது.இதை மட்டுமே சாப்பிட்டு பத்து கிலோ கூடுவதற்கு வாய்ப்பில்லை.

drArunachalam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe