“பிராய்லர் கோழி சாப்பிட்டால் மாதவிடாய் சிக்கல்கள் வருமா?” - மருத்துவர் ஷர்மிகா விளக்கம்

Does eating broiler chicken cause menstrual problems? - explains Siddha doctor Sharmika

‘ஓம் சரவண பவ’ யூடியூப் சேனலுக்கு சித்த மருத்துவர் ஷர்மிகா நம்முடைய உணவு முறைகள் பற்றியும், எதையெல்லாம் முழுவதுமாகத்தவிர்க்க வேண்டும், எதையெல்லாம் உண்ண வேண்டும் என்பது பற்றியும்பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், பிராய்லர் கோழி சாப்பிட்டால் மாதவிடாய் சிக்கல்கள் வருமா? என்றகேள்விக்குஅவர் அளித்த விளக்கத்தினை பின்வருமாறு காணலாம்.

பெண்களுக்கு இப்போதெல்லாம் தெள்ளத் தெளிவாக நாப்கின் பேட்கள், டாம்ப்ரான்ஸ், மென்சுரல் கப்ஸ் போன்றவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்திருக்கிறது. அந்தக் காலங்களில் மாதவிடாயைத் தீட்டு என்று சொல்லி பழக்கியிருக்கிறார்கள். அப்போதுதான் எப்படி அதைக்கையாளுவோம் என்று தெரிந்து கொள்ளத்தான் அப்படி சொல்லியிருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்

நாட்டுக்கோழி முட்டை சாப்பிடுவதும், நல்லெண்ணெய்குடிப்பதும், உளுந்தங்களி சாப்பிடுவதும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.இது மாதவிடாய் காலங்களில் வரும் முதுகுவலி, இடுப்புவலி போன்றவற்றை சரி செய்ய உதவும்.இப்போதெல்லாம் 16 வயது பெண் குழந்தைகளே மாதவிடாய் சமயத்தில் முதுகுவலி என்று சொல்வது வருத்தமாக இருக்கிறது. எனக்கெல்லாம் 27 வயது வரை முதுகு வலிக்கவில்லை.ஏனெனில், என் அம்மா அடிக்கடி நாட்டுக்கோழி முட்டை, உளுந்தங்களி எல்லாம் சாப்பிடக் கொடுத்தார்கள்.

பிராய்லர் கோழி சாப்பிடுவதால் உடனடியாக பருவம் அடைதல் மற்றும் மாதவிடாய் சிக்கல்கள் வருவது என்பது விவாதத்திற்குரியது தான்.எதுவும் அளவோடு எடுத்துக் கொள்வதால் தவறில்லை.நாட்டுக்கோழி சாப்பிட ஏதுவாக இல்லாமலும்,பிராய்லர் கோழி சாப்பிட மிருதுவாக இருப்பதால் அதை அதிகம் எடுத்துக் கொள்கிறார்கள்.சின்ன பெண் குழந்தைகள்ஆஃப் கிரில் சிக்கன் சாப்பிடுறாங்க.அதுவும் வீட்டில் சமைத்து சாப்பிடுவதில்லை. கடைக்குப் போய் வாங்கி சாப்பிடுகிறார்கள்.கடைக்குஎன்று போய்விட்டாலே ரீபைண்ட் ஆயில் தான்.கலர் கொடுப்பதற்காக பொடி பயன்படுத்துகிறார்கள்.அது உடலுக்குக் கெடுதல் தான்.

மாதவிடாய் சமயங்களில் வயிற்றிற்கு அழுத்தம் தருவது போன்ற உடற்பயிற்சிகளை செய்யக்கூடாது.அதிக கனமான வேலை செய்யாமல் கொஞ்சம் ஓய்வு எடுக்க வேண்டும்.

chicken Drsharmika
இதையும் படியுங்கள்
Subscribe