Advertisment

"அதிகம் மது அருந்துவதால் கல்லீரலில் பாதிப்பு ஏற்படுமா?" - மருத்துவர் சி.கே. நந்தகோபாலன் விளக்கம்

publive-image

'ஓம் சரவண பவ' யூ-டியூப் சேனலுக்கு மருத்துவர் சி.கே.நந்தகோபாலன் சிறப்பு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, " இயற்கையால் தோற்றுவிக்கப்பட்டது எதுவும் அழியாது. கந்தக குழம்பில் (சல்ஃபர்) இருந்து பிறந்ததுதான் 101 பொருட்கள். இயற்கை உருவாக்கியபொருட்களுக்கும், மூலப் பொருட்களைக் கொண்டு உருவாக்கக் கூடிய பொருட்களுக்கும் வித்தியாசம் உள்ளது. ரசமணியை செய்ய முடியாது. ரசமணியை செய்கிறவர்கள் யாரும் அருகில் வரமாட்டார்கள். ரசமணியை செய்துவிட்டால்என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

Advertisment

எலும்பு மஜ்ஜைக்கு இந்த உலகத்தில் ஒரே ஒரு உணவுதான் இருக்கிறது. அதுதான் பலாப்பழம். மா, பலா, வாழை சீசன்களில் நாம் அதைச் சாப்பிட வேண்டும். இவைகளைதினமும் சாப்பிட்டு வர வேண்டும் என்ற அவசியம் இல்லை. சீசன் காலங்களில் மட்டும் முக்கனிகளை சாப்பிட்டால் போதுமானது. அதிகம் உளுத்தம் பருப்புகளை சாப்பிட்டால்காதுகளில் குறைபாடு ஏற்படும். மது ரத்தத்துடன் கலக்கும்போது, அதைப் பிரித்து எடுக்கக் கூடிய வல்லமைகல்லீரலுக்கு மட்டும்தான் உள்ளது. பீர் மதுபானத்தில் 4% முதல் 6% வரை ஆல்கஹால் இருக்கும்.இதை 3 அல்லது 4 மணி நேரத்தில் பிரித்து எடுத்துவிடும்.

Advertisment

பிராந்தி உள்ளிட்ட மதுபானங்கள் எடுத்துக் கொண்டால், ரத்தத்தில் இருந்து பிரித்தெடுக்ககல்லீரல் 12 மணி நேரம் எடுத்துக்கொள்ளும். ரம் மதுபானத்திற்கு 8 மணி நேரமும், விஸ்கி மதுபானத்திற்கு மட்டும் 17 மணி நேரம் கல்லீரல் எடுத்துக்கொள்ளும். ரத்தத்தைதூய்மைபடுத்திஅந்த ஆல்கஹாலை வெளியேற்றும். தொடர்ந்து மது அருந்துவதால் தான் கல்லீரலில் பாதிப்பு ஏற்படுகிறது. அதன் செயல்பாடுகள் குறைகிறது" எனத் தெரிவித்தார்.

வெயிலின் தாக்கத்திலும் வயலில் கடுமையாக வேலை செய்பவர்களை கரோனா, புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் தாக்குவது குறைவாக உள்ளதே என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மருத்துவர், "வயலில் வேலை செய்பவர்கள் மீது சூரியனின் கதிர்வீச்சு நேரடியாக தொடர்பில் உள்ளதுதான்" காரணம்என்றார்.

Liver tips health nakkheeran interview Doctor
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe