Advertisment

பிரேக் அப் வலிக்கு தீர்வு தான் என்ன? - மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்!

doctor radhika interview

Advertisment

மனநல மருத்துவர் ராதிகா முருகேசன், மன நலம் சம்பந்தப்பட்ட பல்வேறு விஷயங்களை நக்கீரன் நலம் வாயிலாக நம்மிடையே பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், காதல் பிரிவால் ஏற்படும் பாதிப்பைப் பற்றி தனது கருத்துகளை நம்மிடையே பகிர்ந்துள்ளார்.

நியூரோசைன்ஸ் படி பார்த்தால் செக்ஸூவல் அட்ராக்‌ஷன் மூளையில் இருக்கக்கூடிய அமிக்டாலா என்ற பகுதியால் எமோஷன் வெளிப்படுகிறது. ஆண்களுக்கு இருக்கும் டெஸ்டோஸ்டிரோன்களாலும் பெண்களுக்கு இருக்கும் ஈஸ்ட்ரோஜன்களாலும் செக்ஸ் உணர்ச்சி தூண்டப்படுகிறது. இதுதான் உடலுறவுக்கான அடிப்படைக் காரணம். ஆனால் யார் மீது செக்ஸூவல் அட்ராக்‌ஷன் வருவது என்பது சிக்கலான ஒன்று. இது மனிதர்களின் வாழ்க்கைமுறை, அனுபவம், பண்பு போன்றவற்றால் ஈர்க்கப்பட்டு அட்ராக்‌ஷன் ஏற்படுகிறது. இந்த அட்ராக்‌ஷன் வந்த உடனே அதற்கு உண்டான ஹார்மோன்ஸ் மூளையில் இருக்கும் ஹைபோதாலமஸை சென்றடைந்து அங்கிருந்து நீரோட்ரான்ஸ், டோபமைன் போன்ற ஹார்மோன்கள் அதிகரிக்கிறது.

மூளையில் நடக்கும் இந்த ரியாக்‌ஷன்களால் ஆண் மற்றும் பெண் இடையேயான உறவுஅதிகரிக்கிறது. ஒரு ஜோடியாக அவர்கள் மேலும் இணைந்து இருப்பதற்கான ஹார்மோன்ஸை வெளிப்படுத்துகிறது. அந்த ஆண் மற்றும் பெண் எப்போது உடலுறவு வைத்துக்கொண்டாலும் ‘காதல் ஹார்மோன்’ என்று அழைக்கப்படும் ஆக்ஸிடாஸின் ஹார்மோன் வெளிப்படும். இந்த ஹார்மோன் இருவருக்கும் இடையேயான உறவை வலுப்படுத்துகிறது. நீண்ட நாட்களாக ஒன்றாக இருப்பவர்களிடம் ரொமண்டிக் லவ் இல்லாமல் மெட்டனர்ல் லவ் அதிகரிக்கும். அதனால்தான் அவர்கள் நீண்டநாட்களாக தம்பதிகளாக இருக்கின்றனர்.

Advertisment

மூளையில் இருக்கும் முன்புற சிங்குலேட் கார்டெக்ஸால் அப்செசிவ் கம்பல்சிவ் கோளாறு (OCD) பிரச்சனை ஏற்படுகிறது. முன்புற சிங்குலேட் கார்டெக்ஸால் செயல்பட ஆரம்பித்து சில பேருக்கு பிடிக்காவிட்டாலும் பிரிய மனமில்லாத காதல் ஏற்படுகிறது. இந்த காதலில் தோல்வியடைந்த பிறகும் காதலித்தவரை விட்டுவிலக முடியாமல் தவறான முடிவுகளை எடுக்கின்றனர். உதாரணத்திற்கு ஒருவர் ஏன் அடிக்கடி போதைப் பொருட்களை உட்கொள்கிறார்களென்றால் அவர் ஒவ்வொரு முறை போதைப் பொருளை உட்கொள்ளும்போது டோபமைன் அளவு அதிகரிக்கிறது. அதனால் போதப் பழக்கத்தை விடமுடியாமல் தொடர்கின்றனர்.

மேற்கண்ட அதே கான்செப்ட்தான் காதலிலும் நடக்கிறது. திடீரென காதலித்தவர்கள் பிரேக் அப் செய்துகொண்டால் காதல் விட்டுக்கொடுக்க மனமில்லாமல் மிகவும் வேதனைப்படுகின்றனர். அந்த நேரத்தில்தான் அவர்களுக்கு இருக்கும் தேவையற்ற தொலைப்பேசி அழைப்புகள், பின் தொடருதல், காதலரைப் பற்றி சிந்தனை, வேலையில் கவனக்குறைவு போன்ற பாதிப்புகளைப் பார்க்க முடியும். இதுபோல பிரச்சனைகளில் இருப்பவர்களுக்கு அப்செசிவ் கம்பல்சிவ் கோளாறுக்கு (OCD) கொடுக்கும் கவுன்சிலிங் கொடுத்தால் அடுத்த மூன்று மாதங்களில் வேறொரு காதலைத் தேர்ந்தெடுத்துவிடுவார்கள் என்றார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe