உலகம் முழுவதும் கரோனா பீதி உச்சத்தில் இருக்கின்றது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் தற்போது 170 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை நான்கு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் தாக்குதல் ஐரோப்பிய நாடுகளை தீவிரமாக பாதித்து வருகின்றது. இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் இதன் பாதிப்பு உச்சத்தில் இருக்கின்றது. இந்தியாவில் இதுவரை 600க்கும் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இதன் காரணமாக நாடு முழுவதும் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவையில் கரோனாவை எதிர்த்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் ஒன்று அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது. அதில் இன்னும் ஒரு வாரத்தில் நீ நாட்டை விட்டு போகாவிட்டால், நாங்களே நாட்டை விட்டு விரட்டுவோம் என்ற தொனியில் வாசகம் அச்சிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.