Skip to main content

"தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் அரசு பள்ளி"

மாவட்டத்தில் முதன்மை மாதிரி பள்ளியாக தேர்வு செய்த அரசு பள்ளியில் தலைமையாசிரியர் தரையில் அமர்ந்து மாணவர்களை வழிநடத்தும் செயல் பெற்றோர்களை பிரம்மிக்க வைக்கின்றது. "கல்வி நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்துக்குப்பதிலாக காமராசர் வாழ்த்து பாடலாம்" என்றார் தந்தை பெரியார்.கல்விக்காக பல்வேறு சலுகைகளை அளித்து முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் சென்ற காரணத்தால் காமராசர் பிறந்தநாளை ஆண்டு தோறும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி வருகின்றோம். தேனிமாவட்டம் பெரியகுளம் வட்டம் சில்வார்பட்டியிலுள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கு மாவட்டத்திலேயே மதன்மை மாதிரி பள்ளிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் அரசு பள்ளி இயங்கி வருகின்றது.அரசு பள்ளியை கண்டு விலகிச் சென்ற பெற்றோர்கள் இப்பள்ளியை கண்டு பெருமிதம் கொள்கின்றனர். தங்களது குழந்தைகளை இப்பள்ளியை தேடிவந்து சேர்க்கும் அளவிற்கு பெருமையை சேர்த்துள்ளது இப்பள்ளி.மாதம் ஒருமுறை பெற்றோர் அழைப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்படுத்தி பெற்றோர்களின் நிறை குறையை ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.

government school

பள்ளி வளாகத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியே கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தப்பட்டு மிகவும் சரியான பராமரிப்போடும் இயங்கி வருகின்றது. இதனால் பெண்கள் மாதவிடாய் பிரச்னை காலங்களில் சந்திக்கக்கூடிய பரச்னைகளை முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளார்கள்.சுமார் 10 ஏக்கர் பரப்பளவை கொண்ட இப்பள்ளியில் நூலகம்,சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சிசிடிவி கேமரா, நவீன கணினி ஆய்வகம், உள் விளையாட்டு அரங்கம் மற்றும் (நபார்டு வங்கி நிதி உதவி ஆர்ஐடிஎப் திட்ட ஆண்டு 2014-2015) கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இப்பள்ளி. இப்பள்ளி பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளது அதில் சில : 1.சிறந்த பள்ளிக்கான விருது-2018 2.பசுமை பள்ளிக்கான விருது-2018 3.தூய்மை பள்ளிக்கான சான்று- 2017.

government school

போன்ற பல்வேறு விருதுகளை பெற்று தனியார் பள்ளிகளுக்கு ஒரு சவாலாக விளங்குகிறது.
இப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.அதில் 40-க்கும் மேற்பட்ட தனியார் ஆங்கில வழிக்கல்வியில் பயின்ற மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். புதிதாக வந்த மாணவர்களை அப்பள்ளி தலைமையாசிரியர்  திரு.மோகன் அவர்கள் வரவேற்பு விழா ஒன்றை ஏற்பாடு செய்து மாணவர்களை வரவேற்றார்.கல்விக்கு  மட்டும் முன்னூரிமை அளிக்காமல் விளையாட்டு , இசை, ஓவியம் , தற்காப்புக் கலைகள் என பண்பாட்டு ரீதியாக அனைத்திலும் தங்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தி பல விருதுகளை பெற்று பெருமிதம் கொள்கின்றனர் ஆசிரியர்கள்.

government school

கல்வியோடு இயற்கையை மேம்படுத்தும் வகையில் பள்ளி வளாகத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை பேனிப்பாதுகாத்து வருகின்றனர்.அரசியலில் மாணவர்களின் ஆர்வத்தைத்தூண்டும் வகையில் மாணவர்களுக்கு பாராளுமன்ற தேர்தலை நடத்தி அதில் வெற்றி பெரும் வெற்றியாளர்களுக்கு தலைமையாசிரியர் பதவி பிரம்மாணம் செய்து வைக்கின்றார்.தேர்தவை பற்றி தலைமையாசிரியர் கூறுகையில் எங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி மட்டுமின்றி அரசியல் போன்ற எதிர்கால வாழ்க்கைக்கு கல்வி மட்டுமின்றி அரசியல் போன்ற எதிர்கால வாழ்க்கைக்கு உதவும் பாடத்தையும் கற்றுக்கொடுக்கப்படுகின்றது. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்துப் பதவிகளிலுள்ள மாணவர்கள் சிறப்பாக செயலாற்றுகின்றனர்.குறிப்பாக சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்க்கும் மாணவர்கள் காலையிலும், மாலையிலும் பள்ளி வளாகத்தில் சுகாதார ரீதியாக எந்த ஒரு செயலாக இருந்தாலும் சிறப்பாக செய்து முடிக்கின்றனர். இத்தேர்தல் மூலம் மாணவர்கள் வருங்காலங்களில் சிந்தித்து செயல்படுவார்கள் என்பதே இதன் நோக்கம் என்கின்றார்.

தலைமையாசிரியர் திரு.மோகன் அவர்கள் மற்ற அரசு பள்ளிகளுக்கு விடுக்கும் மிகப்பெரிய வேண்டுகோள் மாணவர்களுக்கு பணியாற்றுவதற்காக தான் நாம் ஊதியம் பெறுகின்றோம். முதலில் மாணவர்களிடம் நெருங்கி பழகும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். மாணவர்களின் குடும்பச் சூழலை முதலில் அறிந்து அவர்களுக்கு ஏற்றார் போல் நாம் செயல்பட்டால் நிச்சயமாக அவர்களிடம் இருந்து ஒரு வெற்றியை நாம் எதிர்பார்க்கலாம் என்பதே என் வேண்டுகோள்.

 


பா.விக்னேஷ் பெருமாள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...