Advertisment

திருக்குறள் பேசிய பசலை நோய்... காரணமும், தீர்வுகளும்!

மென்மையான மனமும், மிக மெல்லிய வருத்த குணமும், எளிதில் கண்ணீர் விடும் மன நிலையும் ஒவ்வொரு இளம் பெண்ணும் வாழ்வின் ஏதாவது கால கட்டத்தில் சந்தித்து இருப்பாள். அந்த நிலையின் பெயர் பசலை. தலைவனின் பிரிவை நினைத்து ஏங்கும் தலைவியின் உடல் மெலிந்து வளையல்கள் தானே கையிலிருந்து கழண்டு நழுவி விழுவதாக சங்க இலக்கியங்களிலும் வர்ணிக்கப்படுகிறது. நம் பாட்டிகள் இதை பசலை நோய் என அலைத்தார்கள். ஆனால், அது நோய் அல்ல. பெண்மையின் பருவ கால இயற்கை இயக்க நிலைகளில் ஒன்று. ஒரு அழகிய மலர் பூத்தவுடன் அல்லது பூப்புக்கு முன்னர் வெளிக்காட்டும் வண்ண அழகியல் என்றும் சொல்லலாம். உடல் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றங்களை பொருத்த விஷயம் அது.

Advertisment

சில பெண்களுக்கு பூப்பு எய்தும் பருவத்தின் ஆரம்ப காலத்தில் அதற்கு ஏதாவது தடை இருந்தால், உடலில் இருந்து அதிகப்படியான இரத்தமோ அல்லது மற்ற உடல் திரவங்களோ வெளியாகும். சில நடுத்தர வயது பெண்மணிகளுக்கும் இந்த நிலை எப்போதாவது தோன்றும். உடலுக்கு எந்த கடினமான வேலையும் கொடுக்காமல் அதிக ஈரம் உள்ள காற்றோட்டமற்ற வெளிச்சமற்ற இடங்களில் நேரத்தை செலவழிக்கும் பெண்கள் அவசியமான உடைகள் அணிந்து கொள்ளாமல் போதுமான சத்தான உணவுகள் இன்றி ஒரே மாதிரியான உணவு பழக்க வழக்கங்கள், விருப்பம் இல்லாவிடினும் உடல் தேவைக்காக மிகுதியான மன உணர்ச்சிகளை வேறு வகையான வழிகளில் வெளிப்படுத்தல் போன்ற செயல் பாடுகளின் உச்சநிலை பசலை.

Advertisment

அறிகுறிகள்:

உடல் நிறம் வெளுத்து மெலிந்து களைத்து உதடுகள் வெளிறி கண்களில் ஒருவித ஏக்கத்துடன் சோர்வாக சூடான மூச்சு விட்டுக் கொண்டு இருத்தல்.

தீர்வு:

முன்னர் சொன்ன சூழல்களில் இருந்து வெளி வர முயற்சிகள் செய்தாலே பசலை பாதி தீர்ந்து விடும். தன்னை சுற்றி உள்ள மனிதர்களுடன் இனிமையாக பழகுதல். முடிந்தவரை தனிமையாக இல்லாதிருத்தல். உற்சாகமான மன நிலையோடு பிடித்த வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளுதல் . நல்ல புத்தகங்களை தேடிப் படிப்பது. உடல் இச்சை சார்பு விசயங்களை மட்டுமே பேசும் மனிதர்களிடம் இருந்து விலகிஇருத்தல். நல்ல மருத்துவரை அணுகி நம் உடலின் சூட்டுக்கு ஏற்ற மாதிரி உணவு பழக்க வழக்கங்களை மாற்றி அமைத்தல் . தியானம் சிறப்பான நல் விளைவுகளை தரும். இந்த பசலை ஆண் பிள்ளைகளுக்கும் உண்டு வேறு மாறுபட்ட வகைகளில்.

Disease
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe