Advertisment

இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் முத்திரைகள் - ‘சித்த முத்திரை’ மருத்துவர் சாலை ஜெய கல்பனா விளக்கம்!

bpcontrol - dr salai jaya kalpana Mudra 

இரத்த அழுத்தம் அதிகம் இருப்பவர்களுக்கும், பிசிஓடி பிரச்சனைகளுக்கும் முத்திரைகளின் மூலம் தீர்வு காண முடியும் என சித்த முத்திரை மருத்துவர் சாலை ஜெய கல்பனா விளக்கம் அளிக்கிறார்.

Advertisment

எப்போதும் பரபரப்பான மனோபாவம்கொண்டவர்களும், அதிகம் உப்பு எடுத்துக் கொள்பவர்களும் வியான முத்திரை செய்து வரலாம். அல்லது சில சூழ்நிலையில் மட்டும் ரத்த அழுத்தம் திடீரென்று சில பேருக்கு அதிகரிக்கும். அதாவது சாதாரண நேரத்தில் 120 என்று இருப்பது திடீரென்று 200 என்று தாண்டி, படிப்படியாக இறங்கும். நடு விரல், மோதிர விரல் இரண்டையும் மடக்கி உள்ளங்கையில் வைத்து அழுத்தி, மீத விரல்களை நீட்டி வைக்க வேண்டும். இதை இரண்டு கையிலும் வைத்து ஆகாயம் பார்த்து கைகளை வைக்க வேண்டும். இப்படி செய்து வர கண்டிப்பாக பத்து நிமிடத்தில் ரத்த அழுத்தம் குறைவதை கண் கூடாக அப்பரேட்டஸ் வைத்து கண்காணிக்கலாம். குறிப்பாக அடிக்கடி கோபம் வருபவர்கள், அதிகப்படி டென்சனில் பின் மண்டை வலிப்பது போன்ற தொந்தரவு இருப்பவர்ளுக்கு கண்டிப்பாக பலன் தரும். இதை பி.பி முத்திரை என்றும் கூறுவதுஉண்டு.

Advertisment

இந்த முத்திரையில் சரி ஆகவில்லை என்பவர்கள், வியான முத்திரையும் செய்யலாம். ஆட்காட்டி விரல் மற்றும் நடுவிரலை மடக்கி அதன் நுனிகளை கட்டை விரலின் நுனிப்பகுதியில் வைத்து மத்த விரல்களை நீட்டித்து வைக்கவேண்டும். இதை செய்வதற்கு முன் பி.பி. அளவை பார்த்துக் கொண்டு, 20 நிமிடம் இந்த முத்திரையை செய்த பின் மீண்டும் ஒருமுறை பி.பி. அளவை பார்க்க வேண்டும். இந்த முத்திரையில் பி.பி அளவை குறைக்க முடிந்தது எனில், அவர்கள் இந்த முத்திரையை அடிக்கடி செய்து வரலாம். பி.பி. முத்திரை அல்லது ரத்தபித்த சமநிலை முத்திரையை மிகவும் ஸ்ட்ரெஸ், அதிகப்படி கோவம் உள்ள நேரத்தில் இதை ஒரு 5 நிமிடம் செய்யும்போது நன்றாக பி.பி. குறையும். ஒரு நாளைக்கு 4 முறை செய்யலாம் அல்லது 2 வேளை10 நிமிடம். ஒரு மாதத்தில் பி.பி.க்கு டேப்லெட் தேவையின்றி சரி செய்யமுடியும்.

bpcontrol - dr salai jaya kalpana Mudra 

அடுத்ததாக டயாபடீஸ் போன்றநோயாக பெண்களுக்கு தாக்கக் கூடியது பி.சி.ஓ.டி என்ற தொந்தரவு. இதற்கு மிக முக்கியமான காரணங்கள், உடல் அசையாமல் இருப்பது, தேவையில்லாத ஸ்ட்ரெஸ் சிந்தனை தான். நம் ஸ்ட்ரெஸ்ஸை கண்ட்ரோல் செய்வது தான் சுகர் தொந்தரவுக்கும்செயல்படுவது. எனவே மன அழுத்தம் குறைவாக இருக்கும்போது, இந்த இரண்டு தொந்தரவையும் சமாளிக்க முடியும். முத்திரைகளோடு, எண்ணெய் குளியலும் மிக அவசியம். அடுத்து முத்திரை என்று வரும்போது 48 நாட்கள் தொடர்ந்து கழிவு நீக்க முத்திரையை செய்து வர வேண்டும். ஐம்பூதங்களையும் சமப்படுத்திவிட்டு, அதன் பின்னே அபான முத்திரை செய்து, பிராண முத்திரை செய்யவேண்டும். பிராண முத்திரையை காலை மாலையில் செய்து வரலாம்.அபான முத்திரை செய்து, பிராண முத்திரையை மட்டுமே 30 நாட்கள் செய்து வருகையில் பி.சி.ஓ.டி தொந்தரவு, மாதவிடாய் தள்ளி தள்ளி சரியில்லாமல் வருவது போன்ற உபாதைகளை நிச்சயமாக குறைக்க முடியும்.

சினை முட்டை ஒவ்வொரு மாதமும் முதிர்ச்சி அடைத்து கருப்பையை நோக்கி வரவேண்டும். கர்ப்பம் தரிக்கவில்லை எனில், அதுவே ரத்தத்தோடு சேர்ந்து மாதாமாதம் மாதவிடாயுடன் சேர்ந்து வந்து விடுகிறது. இதில் சினை முட்டை முதிர்ச்சி அடையாமல்அப்படியே கருப்பை குழாயில் தங்கி நாள் கணக்கில் இருப்பதே பி.சி.ஓ.டி என்று அறியப்படுகிறது. இதுபோன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு, முகத்தில் முடி முளைத்தல், தூக்கமின்மை, மாதவிலக்கு முறையின்மை, உடல் சோர்வு, மனச் சோர்வு, தோல் வறட்சி, தலை முடி வறட்சியாக காணப்படுவது என்பது போன்ற அறிகுறிகள் தென்படும். இவர்கள் அபான முத்திரையை வெறும் வயிற்றில் கட்டை விரல் நுனியுடன், சுண்டு விரல் மற்றும் மோதிர விரலின் நுனியை சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை மூன்று மாதம் தொடர்ந்து செய்து வர நிச்சயமாக சரியான நிலைக்கு வந்து, பி.சி.ஓ.டி, குழந்தையின்மை போன்ற தொந்தரவுகளுக்கு தீர்வு காணலாம்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe