Skip to main content

நேரா நேரத்துக்கு சாப்பிட்டால் நோய் வரும். ஏன் தெரியுமா? 

Published on 28/01/2019 | Edited on 09/02/2019

நம்மில் பெரும்பாலான மக்கள்  தினமும் மூன்று சாப்பிடுவதை வழக்கமாக கொண்டு இருக்கிறோம். அப்படி தினமும் நேரம் பார்த்து சரியாக மூன்று வேளைகள் தினமும் நான் சாப்பிடுவேன் என்று சொல்பவர்களுக்கு நோய்தான் வரும். 'ஒழுங்காக நேரத்துக்கு சாப்பிட்டால் எப்படி நோய் வரும்?' என்று கேட்பவர்கள் இதை கவனிக்கவும்.

 

lunch eating cafetaria



இன்றைய அவசர உலகத்தில் எல்லோரும் காலையில் எழுந்த உடன் அலுவலகம், பள்ளி, கல்லூரி என்று தங்கள் அன்றாட பணிக்குச் செல்கின்றனர். அப்படி செல்பவர்கள் பெரும்பாலும் காலையில் 8 மணிக்கு சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இன்னும் சில பேர் காலையில் 10  மணிக்கு சாப்பிடுகிறார்கள். அப்புறம் அலுவலகத்தில் உணவு இடைவெளி என்று மதியம் 1 மணிக்கு சாப்பிடுகிறார்கள். அப்படி காலை உணவு உண்டவர்கள் மீண்டும் மதியம் சாப்பிடும் பொழுது உண்மையாக  நமக்கு பசி எடுத்துதான் சாப்பிடுகிறோமோ? பலர் 'இல்லை' என்றே பதில் சொல்வார்கள்.

ஏதோ 'உணவு இடைவேளை இருக்கு, அதுக்காக நான் சாப்பிடுகிறேன்' என்று சாப்பிட்டால் ஜீரணக் கோளாறு வருவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. எப்படி என்று கேட்டால் காலையில் நாம் 9 மணிக்கு சாப்பிடுகிறோம், அதன் பிறகு அந்த உணவுக்கு ஏற்றவாறு நாம் வேலை செய்யவில்லை அல்லது பெரிதாக எந்த வேலையும் நம் உடலுக்குக் கொடுக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். பிறகு மதிய உணவு இடைவேளை வந்த உடன் நாம் என்ன நினைக்கிறோம்? மதிய உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றுதானே? ஆனால் நம் உடலில் உண்மையில் பசி இருக்கிறதா என்று எண்ணிப் பார்ப்பதில்லை. காலையில் சாப்பிட்ட உணவே இன்னும் ஜீரணம் ஆகாத நிலையில் மதிய உணவும் எடுத்துக் கொண்டால் அந்த உணவும் ஜீரணம் ஆகாது. இதனால் உடலில் ஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஜீரணக் கோளாறு தொடர்ந்தால் அது இன்னும் பெரிய உபாதைகளுக்கு வழிவகுக்கும்.

 

digestion problem



நம் உடலில் தினமும் மூன்று வேளை உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயமில்லை. இன்னும் ஒரு சிலருக்கு உடல் உழைப்பு அதிகமாக இருக்கும் அவர்கள் ஒரு நாளில் நான்கு அல்லது ஐந்து முறை கூட சாப்பிடலாம். ஏனென்றால் அவர்கள் உடலில் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் சீக்கிரமாக சுரந்து விடும். அது ஜீரணத்தை விரைவுபடுத்தும். ஒரு சிலர் உடல் உழைப்பு குறைவாக இருக்கும், அவர்கள் இரண்டு முறை சாப்பிட்டால் கூட போதுமானது. எனவே இன்று முதல் பசித்து உண்ணுவோம்.

நேரா நேரத்துக்கு சாப்பிடவேண்டுமென நம் முன்னோரும் தாய்மாரும் சொன்னது சரிதான். முன்னோர் சொன்னதில் பல விஷயங்களை மறந்துவிட்ட நாம் இதை மட்டும் மறக்காமல் பின்பற்றுகிறோம். சொன்னதை தற்போதுள்ள வாழ்வியல் முறைக்கு ஏற்றபடி பொருத்திப்பார்த்து பின்பற்றுவோம். 

 

 

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

டன் கணக்கில் பிடிபட்ட போலி இஞ்சி பேஸ்ட்; பொதுமக்களே உஷார்

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
Tons of fake ginger paste caught; Public beware

உணவு பொருள்களின் தரம் மற்றும் தரமற்ற உணவுப் பொருட்கள், போலியான கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் குறித்த வீடியோக்கள், தகவல்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவி வரும் நிலையில், ஹைதராபாத்தில் டன் கணக்கில் போலி இஞ்சி பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹோட்டல்கள் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் பொருட்கள் விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அடிக்கடி திடீர் சோதனையில் ஈடுபட்டு தரம் இல்லாத பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடைகளில் பிரபல நிறுவனங்களின் பெயரில் கிடைக்கும் இஞ்சி பேஸ்ட் போல ஹைதராபாத்தில் சில நபர்கள் பாக்கெட்டுகளில் போலியாக இஞ்சி பேஸ்ட் தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் சென்ற அதிகாரிகள் அதை பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள பொருட்களின் மதிப்பு 2 லட்சம் ரூபாய் என்பது தெரியவந்துள்ளது. உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் செயற்கையான உணவுப் பொருட்கள் மற்றும் வண்ணம், பசை ஆகியவற்றை கலந்து இந்த போலி இஞ்சி பேஸ்ட் தயாரிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 3 டன் அளவில் போலி இஞ்சி பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.