Advertisment

“இதுதான் சிறந்த காலை உணவு முறை” – அறிவுறுத்துகிறார் சித்த மருத்துவர் ஷர்மிகா

“This is the best breakfast method” – Siddha doctor Sharmika

ஓம் சரவண பவ யூடியூப் சேனலுக்கு சித்த மருத்துவர் ஷர்மிகா நம்முடைய உணவு முறைகள் பற்றியும், எதையெல்லாம் முழுவதுமாக தவிர்க்க வேண்டும், எதையெல்லாம் உண்ண வேண்டும் என்பது பற்றியும் பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் காலை உணவு பற்றியும் ஆர்கானிக் காய்கள் பற்றியும் கேட்ட பொழுது அவர் அளித்த விளக்கத்தினை பின்வருமாறு காணலாம்.

Advertisment

காட்டுவாசியாக இருக்கும் போது நிறைய உழைத்தோம். நினைத்த நேரம் தூங்குவோம். அதன் பிறகுதான்வேட்டை எல்லாம் வருது. பிரேக்ஃபாஸ்ட் என்பது:நைட் தூங்கி காலைஏழு மணி வரைக்கும் பன்னிரண்டு மணி நேரம் வயிறு காலியாக இருக்கும். காலை எழுந்ததும் பழங்களைச் சாப்பிடலாம். பழையகாலத்தில் எல்லாம்பழங்களைத்தான்சாப்பிட்டார்கள். கல்லைப் போட்டாலும் கரையுர வயசுன்னு சொல்வாங்க.ஆனால்,இப்போதெல்லாம்கல்லு போட்டாலும் கரையாது. ஒரு சில பழைய பழக்க வழக்கங்களைதற்போதுபுழக்கத்தில் கொண்டு வர முடியாது. ஆனால், கொண்டு வந்தால் நல்லது.பிரேக்ஃபாஸ்ட் இப்போ எல்லாம் பாஸ்டாக எடுத்துக் கொள்கிறோம்.

Advertisment

சிறந்த காலை உணவு

காலையில் ராஜா மாதிரி சாப்பிடணும். மதியம் மந்திரி மாதிரி சாப்பிடணும். நைட் பிச்சைக்காரன் மாதிரி சாப்பிடணும்னு சொல்வாங்க.இது வந்து அந்தக் காலத்தில் பிச்சைக்காரன் அப்படி சாப்பிட்டு இருப்பாங்க போல. அதற்கு ராஜா மாதிரி தட்டுமுழுவதும் வைத்து சாப்பிட வேண்டும் என்று இல்லை.அதிகமானநியூட்ரிஷன் உள்ள உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். என் காலை உணவில்எப்போதும் விதவிதமான இலைகளைப் பயன்படுத்தி தேநீர்,பழங்கள்,ட்ரை புரூட் ஜூஸ் இருக்கும்.மக்காச்சோளம், வேர்க்கடலை, வேகவைத்த வெள்ளை சுண்டல், கருப்பு சுண்டல், பச்சைப் பட்டாணி என்று இதில் ஏதாவது ஒன்று இருக்கும். பழங்கள் சாப்பிடும் போது தான் பசியைத் தூண்டும். பசித்து சாப்பிடுவது நல்லது.

ஆர்கானிக் காய்கள்

ஆர்கானிக் என்பது நம்ம நாட்டுக்காய்கறிகளும் உணவும் தான்.அதைக் கண்டுக்காம விட்டது நம்ம தப்பு தான். முதலில் நாம பத்து ரூபாய்க்கு வாங்கியதக்காளி இப்போதுஆர்கானிக் தாக்களினுசொல்லி இருபது ரூபாய்க்கு வாங்குகிறோம்.நாம் அதிகமாக ஆர்கானிக் காய்கறிகளை வாங்கும் போதுஅதன் விலையும் குறைவாக இருக்கும்.ஆர்கானிக் காய்கறிகள் உற்பத்தி கம்மியாத்தான் இருக்கிறது. அதனால்தான் விலை அதிகம். நாம் தொடர்ச்சியாகப் பயன்படுத்தினால் உற்பத்தி அதிகமாகி விலை குறையும்.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe