Advertisment

கர்ப்பிணிகளுக்கு பேருதவி புரியும் குங்குமப் பூவின் நற்பலன்கள் பற்றி தெரியுமா..?

கர்ப்பம் தரித்துள்ள பெண்களுக்கு குழந்தை அழகாக பிறக்க வேண்டி நம்மூர்களில் குங்குமப்பூ-வை சாப்பிட கொடுப்பார்கள். குங்குமப் பூ இன்றைய வெங்காயத்தை போல வருடம் முழுவதும் விலையில் டாப்பாக இருக்கும் ஒரு பொருள். விலை அதிகம் என்றாலும் அதனால் கிடைக்கும் மருத்துவ பலன் என்பது மிக அதிகம். முக்கியமாக கர்ப்பம் தரித்த பெண்கள் 5வது மாதம் தாண்டிய பிறகு குங்குமப் பூ சாப்பிட்டு வந்தால் குழந்தை பிறப்பு எளிதாக இருக்கும். மேலும் பிரசவ வலி அதிகம் தெரியாது என்றும் சொல்லப்படுகிறது.

Advertisment

gh

மேலும், குங்குமப்பூவை பொடியாக்கி அதில் இருந்து ஒரு சிட்டிகை எடுத்துக்கொண்டு அதில் சில சொட்டுகள் பால் விட்டு 5 நாட்கள் முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கரு வளையம் உள்ளிட்ட அனைத்து சரும பிரச்சனைகளும் நிவர்த்தி ஆகும். மேலும், குங்குமப்பூவை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதில் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு அதை வெண்ணை கலந்து நன்றாக குழைத்துக்கொள்ள வேண்டும். இந்த கலவையை தினமும் பூசி வர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும் என்பது இதன் கூடுதல் சிறப்பு. மேலும் குழந்தை பிறப்புக்கு பிறகும் குங்குமப்பூவை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் தாய்மார்களுக்கு இரத்த விருத்தி அதிகம் கிடைக்கும். மேலும் பசியை தூண்டும் ஆற்றல் குங்குமப்பூவிற்கு அதிகம் உண்டு என்றால் அது மிகையல்ல.

Pregnant
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe