Skip to main content

மண்தான் நமக்கு நன்மை செய்யும்! வழியெல்லாம் வாழ்வோம் #6

Published on 04/04/2018 | Edited on 07/04/2018

 

Valiyellam vaalvom 6

 


உங்கள் குழந்தைகள் நலமா - பாகம் 4

 

வழியெல்லாம் வாழ்வோம் மருத்துவத் தொடரின் சென்றவார அத்தியாயத்தில், நம் பாரம்பரிய உலோகத்திலான கொள்கலன்களின் பயன்களைப் பட்டியலிட்டிருந்தோம். இந்த வாரம் மிக எளிய கொள்கலனான மண்பானை, மண்சட்டிகளின் பயன்களைக் காண்போம்.

 

மண்பானைகளில் நன்மைகள்:

 

மண்பானை என்பது ஓர் இயற்கை குளிர்சாதனப்பெட்டி என்ற அளவில் நாம் அனைவரும் அதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். நீரில் நல்ல மற்றும் கெட்ட கிருமிகள் உண்டு. குடிநீரைக் காய்ச்சும்போதோ அல்லது அதை மினெரல் வாட்டராக (ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் முறையில்) மாற்றும்போதோ, கெட்ட கிருமிகளோடு, நல்ல கிருமிகளும் அழிந்துவிடுகின்றன. ஆனால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு நீரில் இருக்கும் நல்ல கிருமிகள் கட்டாயம் தேவை. இதற்கு மண்பானை பயப்படுகிறது. அதாவது நல்ல வகை கிருமிகளை மட்டும் வைத்துக்கொண்டு, கெட்ட வகை கிருமிகளை அகற்ற வல்லது மண்பானை.

 

நாகரிக வாழ்வியலில் நாம் பயன்படுத்தும் மினெரல் வாட்டரில் நல்ல கிருமிகளும் இல்லை, சரியான விகிதத்திலான தாதுக்களும் இல்லை. இந்த தாதுக்கள் குறைபாட்டால் தான் குழந்தைகள் உடல் பலவீனமாக, சோர்வுடன் காணப்படுகின்றனர். ஆனால், மண்பானையில் நீர் ஊற்றி வைக்கப்பட்ட ஆறு மணி நேரத்தில், நீரில் உள்ள கெட்ட கிருமிகள் மட்டும் நீக்கப்படுகின்றன. ஆனால், அத்தனை தாதுக்களும் அப்படியே இருக்கும். எனவே, இப்படி மண்பானையில் ஊற்றிவைத்த குடிநீரைக் குழந்தைகளுக்கு கொடுக்கும்போது, அவர்களின் வளர்ச்சிக்குத் தேவையான அத்தனை தாதுக்களும் அவர்களுக்கு கிடைக்கின்றன.

 

clay pots1

 

மண்சட்டிகளின் பயன்கள்:

 

குடிநீர் சேகரிக்கும் கொள்கலனாக மட்டுமல்லாமல், சமையல் பாத்திரமாகவும் மண்பானையைப் பயன்படுத்தலாம். மண்பானை சமையலின் சுவையின் அடர்த்தியும்,  மணமும் நாம் அனைவரும் அறிந்ததே. மண்பானைகளில் மிக நுண்ணிய துளைகள் இருக்கும். மண்பானைகளில் சமைக்கும்போது இத்தகைய துளைகளின் வழியே நீராவி வெளியேறுவதால், உணவு அவித்ததைப்போல் இருக்கும். சமைக்கப்படும் உணவில் இருக்கும் சத்துகள் வெளியேறாமல் இருக்கும். குழந்தைகளுக்கு இந்த உணவுகளைக் கொடுக்கும் போது செரிமானம் சார்ந்த எந்த தொந்தரவுகளும் வர வாய்ப்பில்லை. மேலும் மண்பானைகளை சமையலுக்குப் பயன்படுத்துகையில் அதிக எண்ணெய் தேவைப்படுவதில்லை.

 

மேலும், நம் பாட்டன்மாரும் பாட்டிகளும் காலகாலமாய்ப் பயன்படுத்திய இரும்பு தோசைக்கல்லை பயன்படுத்துவதை அவமானமென்று கருதும் காலம் இது. இரும்புக்கு கல் சூடேறும்போது, அதன் இரும்புத்தன்மை உணவோடு சேரும். இது இரும்புச்சத்தை குழந்தைகளுக்கு உணவோடு உணவாக அளிக்க உதவுகிறது. இதனால் ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவு சரியான அளவில் தக்கவைக்கப்படுகிறது. ஆனால், இன்றோ நான்-ஸ்டிக் எனப்படும் பாத்திரங்களில் உணவு சமைப்பது மட்டுமே நாகரீகமாக மாறிவிட்டது. வீட்டில் நான்-ஸ்டிக் பயன்படுத்துவது மட்டுமே கவுரவமான விடயமாகக் கருதப்படுகிறது.

 

நான்-ஸ்டிக் பாத்திரங்களின் தன்மைகள், தீமைகள்:

 

non stick tawa

 

நான்-ஸ்டிக் பாத்திரங்களில் உணவு சமைக்கையில் உணவுகள் அமிலத்தன்மை உடையவையாக மாறுகின்றன. நான்-ஸ்டிக் பாத்திரங்களில் உள்ள டெப்லான் எனும் வேதிப்பொருளின் தன்மை சமைக்கப்படும் உணவுகளோடு சேர்ந்துவிடுகிறது. இது பலநேரங்களில் உணவை அமிலத்தன்மை உடையதாக மாற்றுகிறது. இது பெரும் ஆபத்து.

 

ஓர் ஆய்வில் நான்-ஸ்டிக் வடைச்சட்டிகள், தோசைக்கற்களில் பூசப்படும் பாலிடெட்ரா புளுரோ  எத்திலீன் [Polytetrafluoroethylene (PTFE)] அல்லது பெர்புளுரோ ஆக்டனாயிக் அமிலம் [Perfluorooctanoic acid (PFOA)] ஆகியவற்றிலிருந்து வரும் புகையை பறவைகளை உட்கொள்ள வைத்து சோதனை செய்யப்பட்டது. இந்தப்புகையை சுவாசித்த பறவைகளின் நுரையீரலில் புண்கள் உருவாக்கி மூச்சுத்திணறலுக்கு உள்ளாகின. இதிலிருந்தே இதன் தீமைகள் நம் குழந்தைகளை எப்படிப் பாதிக்கும் என்பதை நாம் அறியலாம். மேலும், புளூரைட் என்னும் வேதிப்பொருள்  உடம்பில் உள்ள தைராய்டின் அளவைக் குறைத்து, ஹைப்போ தைராடிசம் எனும் நோயை ஏற்படுத்துகிறது. இதுவும் மோசமான விளைவாகும்.

 

நான்-ஸ்டிக் பாத்திரங்களை உருவாக்க பல நாடுகளில் அமலில் இருக்கும் தரக்கட்டுப்பாட்டு முறைகள் இந்தியாவில் பின்பற்றப்படுவதாக, நாமறிந்த வரையில் தெரியவில்லை. எனவே, இந்த செயற்கை பாத்திரங்களை பயன்படுத்தாமல் நம் பாரம்பரிய மண் மற்றும் இரும்புச் சட்டிகளைப் பயன்படுத்தல் நலம்.

 

இவை தவிர, உணவு உண்ண வாழையிலையை மட்டுமே பயன்படுத்தலாம். வாழையிலையில் சூடான உணவை இட்டு உண்பதால், இலையின் பசுமைத்தன்மையில் உள்ள குளோரோபில், நம் உடலுக்குள் சென்று கல்லீரல் முதல் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் ஏதாவது ஒரு வகையில் பயன்படுகின்றது.

 

1.    உடலின் செரிமாணத்திறன் அதிகரிக்கிறது.

2.    உடலின் மறுசீரமைப்பிற்கு (Healing) உதவுகிறது.

3. ஆன்டி-ஆக்சிடண்ட் ஆக செயலாற்றி, உடலிலுள்ள தேவையற்ற கழிவுகளை அகற்றி குடலை சுத்தம் செய்து குடல் சார்ந்த தொந்தரவுகளிலிருந்து காக்கிறது.

4. முக்கியமாக புற்றுநோய் வராமலும், வந்துவிட்ட புற்றுநோயின் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தவும் குளோரோபில் உதவுகிறது.

 

வாழையிலை குறைந்த ஆயுள் கொண்டது. ஆனால் நம்மை நீண்ட ஆயுளோடு வாழ வைப்பது. ஆனால் நெகிழி போன்ற பொருட்கள் அதிக ஆயுள் கொண்டவை. ஆனால் நம்மை அதிவிரைவில் அழிக்கக்கூடியவை. எனவே, வாழையடி வாழையாக சிறப்புடன் வாழ வாழையிலையில் உணவருந்துவோம்.

 

 

 

 

Next Story

'அந்த நாட்கள் மீண்டும் வராதா?'-சிலிர்ப்பான சந்திப்பு!

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
Will those days never come again?-Thrilling encounter!

பள்ளி மாணவப் பருவம் மகிழ்ச்சி நிறைந்தது. அறுபது வயதைக் கடந்த பிறகு, அந்த நாட்கள் திரும்பவும் வராதா? என்ற ஏக்கம், ஒவ்வொருவர் மனதிலும் எட்டிப் பார்க்கும். பள்ளி நாட்களில் நம்முடன் படித்த மாணவர்களில் ஒருவரை எங்காவது சந்திக்கும்போது, மனம்விட்டுப் பேசும் போது, பேரானந்தம் பீறிடும்.

அத்தனை மாணவர்களையும் ஒருசேர சந்தித்தால் எத்தனை சந்தோஷமாக இருக்கும் என்று ஒரு சில மாணவர்கள் முயற்சிப்பார்கள். அப்படி ஒரு முயற்சியைத்தான், சிவகாசியில் சி.இ.நா.வி. உயர்நிலைப் பள்ளியில், 1975-76 காலக்கட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. முடித்த மாணவ நண்பர்கள் மேற்கொண்டார்கள். அடுத்து வரும் 2025 ஆம் ஆண்டு 50-வது ஆண்டு என்பதால், சரியான திட்டமிடலுடன் ஒரு கொண்டாட்டமான ஒரு சந்திப்பை நிகழ்த்த வேண்டும் என்று கலந்து பேசினார்கள்.

இதற்கு முன்னோட்டமாக சிவகாசி பெல் ஹோட்டலில் சந்தித்தார்கள், அந்த மாணவ நண்பர்கள். நன்றாகப் படித்தோம்; வாழ்க்கையை நல்லவிதமாக நடத்துகிறோம். இதற்குக் காரணகர்த்தாக்களான ஆசிரியர்களை கவுரவிப்பதோடு, இன்றைய மாணவ சமுதாயத்துக்கு மனதில் அழுத்தமாக பதியும்படி ஒரு மெசேஜ் சொல்ல வேண்டும். அது வழக்கமான அறிவுரையாகவோ, ஆலோசனையாகவோ இல்லாமல், வாழ்வியல் சார்ந்த ஒரு அனுபவத்தை இளம் தலைமுறையினருக்குப் பரப்புவதாக இருக்க வேண்டும் என்றெல்லாம் உணர்ச்சி மேலிடப் பேசினார்கள்.

49 ஆண்டுகள் கடந்த அச்சந்திப்பில், பாசத்தை மனதில் தேக்கி கை கொடுப்பது, வாடா, போடா என்று டா போட்டு கலாய்ப்பது, இத்தனைக்கும் மேலாக ஒருவர் பேச, இன்னொருவர் கேட்க, மற்றொருவர் வாய்கொள்ளாமல் சிரிப்பது..  அந்தச் சிரிப்பு ஒவ்வொரு முகத்திலும் பரவ, அங்கே பரவசப் பூக்கள் பூத்துக் குலுங்கின. என்னடா.. எப்படி இருக்க?  உன்னப் பார்த்து எத்தனை வருஷமாச்சு.. நல்லா இருக்கியா? உனக்கு எத்தனை புள்ளைங்க?  பேரன் பேத்தி எத்தனை? அடடா.. விசாரிப்புகளில் பாசம் பொங்கி வழிந்தது.

இதுபோன்ற சந்திப்புகள் வயதைப் புறந்தள்ளிவிட்டு,  மனதுக்கு ஆறுதல் அளித்து, உற்சாகத்தை ஊட்டி, வாழும் நாட்களை அதிகரிக்கும் என்று சொன்னால் மிகையல்ல. 

Next Story

உணவில் பிளேடு; விமான பயணிக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
blade in food to distributed by the air passenger;

கடந்த 9ஆம் தேதி பெங்களூருவில் இருந்து சான்பிரான்சிஸ்கோ செல்வதற்காக ஏர் இந்தியா எனும் விமானம் சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணித்த பயணியான பத்திரிகையாளர் மதுரஸ் பால், விமானத்தில் தனக்கு வழங்கப்பட்ட உணவில் பிளேடு இருந்ததாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தனது வேதனையைப் பதிவு செய்தார். 

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘ஏர் இந்தியாவின் விமானத்தில் வழங்கப்பட்ட அத்திப்பழ சாட் உணவு ஒன்றில் பிளேடு கிடந்தது. நான் அதை இரண்டு அல்லது மூன்று வினாடிகள் மென்று சாப்பிட்ட பிறகு அது என் உணவில் இருப்பதை உணர்ந்தேன். நான் அதை துப்பியவுடன், அது பிளேடு என்பது தெரியவந்தது. இதற்கு பணிப்பெண் மன்னிப்பு கேட்டார். மேலும் அவர், ஒரு கிண்ணம் கொண்டைக்கடலை வழங்கினார். எந்தவொரு விமானத்திலும் பிளேடு இருப்பது ஆபத்தானது. இரண்டாவது, அது என் நாக்கை வெட்டக்கூடும். மூன்றாவதாக, ஒரு குழந்தை இந்த உணவை சாப்பிட்டால் என்ன செய்வது’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இவர் பதிவிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நடந்த சம்பவத்தை ஏர் இந்தியா நிறுவனம் ஒப்புக்கொண்டது. இது குறித்து தலைமை வாடிக்கையாளர் அனுபவ அதிகாரி ராஜேஷ் டோக்ரா கூறுகையில், “எங்கள் கேட்டரிங் பார்ட்னர் பயன்படுத்தும் காய்கறிகளை வெட்டுவதற்கு பயன்படுத்தும் இயந்திரத்தின் பாகம் என நாங்கள் ஆராய்ந்து கண்டறிந்துள்ளோம். கடினமான காய்கறிகளை நறுக்கிய பிறகு பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த நாங்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இனி இதுபோன்று நடப்பதை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுப்போம்” என்று கூறினார்.