நன்றி என்ற வார்த்தைக்கு இந்த உலகத்தில் எடுத்துக்காட்டாக இருப்பது நாய் தான் ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால் dog அதை அப்படியே திருப்பி வாசித்தால் god என்று வரும் கடவுளாய் நமக்கு வந்த விலங்கோ என்று கூட என்ன தோன்றுகிறது .அந்த அளவுக்கு நன்றி என்ற வார்த்தைக்கு உதாரணமாக உள்ளது . நன்றி மிக முக்கியமான நல்லுணர்ச்சியாகும். எவர் எந்த உதவி செய்தாலும் நன்றி தெரிவிக்க வேண்டிய நற்பண்புகளை கைவிட்டுவிடக்கூடாது. அவ்வாறே நன்றியை எதிர்பார்த்து எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது.செய்யாமல் செய்த உதவிக்கு பரிசாக இந்த விண்ணையும் மண்ணையும் தந்தாலும் ஈடாகாது.உரிய தருணத்தில் உதவி தேவைப்படுவோருக்கு உதவி கிட்டுமானால், அந்த உதவி சிறிதளவானாலும் ஏற்படும் நன்மை இந்த உலகத்தைவிடப் பெரியதாகும். அதுமட்டுமல்ல, பரிதிபலன் கருதாமல் செய்யும் உதவி கடலினும் பெரிதாக மதிக்கப்படும். தினையளவு உதவி செய்தாலும் அதன் பயன் அறிந்தோர் அதனை பனை அளவாகக் கருதுவர். இத்தகைய கருத்துக்களை திருவள்ளுவர் சுட்டிக் காட்டுகிறார். ஒருவர் தீமை செய்தால் உடனே மறக்கவேண்டும். அதே நேரம் செய்த நன்மையை மறக்கக்கூடாது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dog image.jpg)
"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று!''
நன்றி சொல்வதும் நன்றியை எதிர்பாராமல் நடந்து கொள்வதும் சிறந்த பண்பாகும்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இன்னும் சில டிப்ஸ்
• தொலைநோக்குப் பார்வை இருக்க வேண்டும்.
• தொண்டர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டவேண்டும்.
• நம்பகமானவராய் இருத்தல் வேண்டும்.
• இலக்கு நிர்ணயிக்க வேண்டும்.
• திட்டம் வகுத்தளிக்க வேண்டும்.
• இலக்கை நோக்கி தொண்டர்களை வழிநடத்திச் செல்ல வேண்டும். வாழ்வில் முன்னேற இந்த மாதிரியான நற்பண்புகளைக் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)